"தண்ணீருக்காகத் தமிழகம் ஒரு தர்ம யுத்தம் நடத்திக்கொண்டு இருக்கிறது. மக்களுக்காக மக்களால் முன்னெடுக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்தது முல்லைப் பெரியாறு போராட்டம்!

கேரளா பல உபாயங்களைக் கையாண்டு புதிய அணையைக் கட்டிவிட வேண்டும் என்று நினைக்கிறது. இந்த நிலையில், நம் ஒற்றுமையைக் காட்ட வேண்டியது அவசியம். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு அணை உடைந்துவிடும் என்று கேரளாவில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ஒன்றும் அறியா குழந்தைகள் கையில்கூட மெழுகுவத்தியை கொடுத்து ஊர்வலம் நடத்தினார்கள். அந்தப் பொய் பிரசாரங்களைஎல்லாம் கண்டு கொதித்தெழுந்துதான் எல்லைப் பகுதி விவசாயிகளான நாங்கள் போராட்டத்தில் குதித்தோம். காய்கறிகளைக் கேரளாவுக்கு அனுப்பாமல் நாங்கள் போராட்டம் நடத்துவதால் எங்களுக்கு நஷ்டம்தான். ஆனால், விவசாயிகளுக்கு நஷ்டம் புதிதா என்ன? எங்கள் ஜீவாதார உரிமையை மீட்டெடுக்க இந்த நஷ்டத்தைத் தாங்கிக்கொள்ள மாட்டோமா?

எல்லைப் பகுதிகளில் போராட்டங்கள் வலுத்திருக்கின்றன. தமிழர்களுக்குப் பிறரைத் துன்புறுத்திப் பழக்கம் கிடையாது. இந்தப் போராட்டங்கள் கேரள அரசுக்கு எதிரான போராட்டங்கள் இல்லை. எங்கள் உரிமையை நிலைநாட்ட நாங்கள் நடத்தும் போராட்டம்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழக மக்களுக்குச் சொல்வது என்ன? தமிழகத்து அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்கிற செய்திதான்! கேரள முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரான அச்சுதானந்தனும் ஒரே விமானத்தில் சென்று ஒன்றாக டெல்லியில் மனு கொடுக்கிறார்கள். ஆனால், இங்கே தமிழகத்தில் நடப்பது என்ன? திருமாவளவன் நாடாளுமன்றத்தில் தன்னந்தனியாகப் போராட்டம் நடத்தியதைப் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது. தமிழகக் கட்சிகள் அனைத்தும் இந்த விஷயத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டுஇருந்தால் தமிழகமே ஒன்று திரண்டு முல்லைப் பெரியாறுக்காகப் போராடுகிறது என்ற செய்தி மத்திய அரசுக்கும் கேரள அரசுக்கும் போய்ச் சேர்ந்திருக்கும்.

விவசாயிகளான எங்களைப் பொறுத்தவரை எந்தக் கட்சி எங்களுக்கு ஆதரவாக நின்றாலும் அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருக்க விரும்புகிறோம்.

தன்னெழுச்சியான போராட்டங்களுக்காக மகிழும் அதே வேளையில், தமிழகத்தில் மலையாளிகளும் அவர்களது உடைமைகளும் தாக்கப்படுவதை எல்லைப் பகுதி விவசாயிகளான நாங்கள் விரும்பவில்லை. அதில் எங்களுக்குக் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. கேரள எல்லைக்குள் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்ததால்தான் இங்கே தமிழகத்தில் மலை யாளிகள் மீது தாக்குதல் நடந்தது என்பதைப் புரிந்துகொள்கிறோம். இயல்பான ஒரு எதிர்வினையாகத்தான் அவை நடந்தன என்றாலும், அதையும்கூட நாங்கள் விரும்பவில்லை. எப்படி தமிழர்கள் கேரளாவில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதே அளவுக்கு மலையாளிகளும் தமிழகத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம்.

கேரளாவில் தமிழர்களைத் தாக்குபவர் கள் பொதுமக்கள் அல்ல. அரசியல் கட்சித் தொண்டர்கள்தான். அங்கே அரசியல் கட்சிகள் செய்த தவறுக்கு இங்கே அப்பாவி மலையாளிகளைத் தாக்குவது நியாயமாகாது.

எங்கள் இருப்பை, பிழைப்பை உறுதி செய்ய நாங்கள் நடத்தும் போராட்டம் இது என்பதை அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்!''