Published:Updated:

``மேக்கே தாட்டூவில் அணை கூடாது என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு!” - பொன்.ராதாகிருஷ்ணன்

``மேக்கே தாட்டூவில் அணை கூடாது என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு!” -  பொன்.ராதாகிருஷ்ணன்
``மேக்கே தாட்டூவில் அணை கூடாது என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு!” - பொன்.ராதாகிருஷ்ணன்

``மேக்கே தாட்டூவில் அணையைக் கட்டி தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்” என ஈரோட்டில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

ஈரோட்டை அடுத்த 46 புதூரில் யோகிராம்சுரத்குமார் வேதாஸ்ரமத்தின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ``தெலங்கானா உள்ளிட்ட பல இடங்களில் பா.ஜ.க வலுப்பெறத் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டூவில் அணையைக் கட்டி தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் என்ற வேண்டுதலை, தமிழக விவசாயிகளின் சார்பில் கர்நாடக முதல்வரிடம் வைக்கிறேன்.

மேக்கே தாட்டூவில் அணைக் கட்டும் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்பதே பா.ஜ.வின் நிலைப்பாடு. அதேபோல் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தைப் பாதிப்பில்லாமல் செயல்படுத்த வேண்டும். விவசாயிகள் அதை முழுமையாகத் தடுக்கக் கூடாது. கேரளத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட பிரதமர் மோடி, தமிழகத்திலும் ஏற்கெனவே சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டிருக்கிறார். தற்போது ஏற்பட்டுள்ள கஜா புயல் பாதிப்புகளையும் பார்வையிடுவார்” என நம்பிக்கைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், ``திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தோழமையாக எந்தக் கட்சியும், எந்தக் காலத்திலும் நிரந்தரமாக இருந்தது கிடையாது. தற்போது எல்லாக் கட்சிகளையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் தி.மு.க இறங்கியிருக்கிறது. அது தவறு கிடையாது. ஆனால், தமிழக மக்களை முட்டாளாக்கக் கூடிய வேலையைப் பண்ணக் கூடாது” என்றார்.