"நில அபகரிப்பு காலம் காலமாக யாருக்கும் தெரியாமல் நடந்தது. ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில் பட்டப்பகலில் வெளிப்படையாகவே செய்யப்பட்டது. நில அபகரிப்பு கைதுகளுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கப்பட்டாலும் வரவேற்கத்தக்க நடவடிக்கைதான் இது!

ஆனால், 'முந்தைய தி.மு.க. ஆட்சியில் நில அபகரிப்பு செய்தவர்கள் மீது மட்டும் தான் நடவடிக்கை எடுப்போம். இப்போதோ, இதற்கு முன்போ நில அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்’ என்று சொல்வது நியாயம் இல்லை. ஆட்சிக்கு ஏற்றாற் போல சட்டத்தை வளைத்து நடவடிக்கை எடுப்பதும் தவறு!

'பவர் ஆஃப் அட்டர்னி’ கொடுப்பது தான் இந்த மோசடிகள் அனைத்துக்குமே அடிப்படையாக இருந்துள்ளது! பரம்பரை நிலம் வைத்திருப்பவர்கள் பலருக்கு அவற்றை நேரடியாகப் பராமரிக்கும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும்பட்சத்தில், தன் தாத்தாவின் பெயரில் இருக்கும்

நிலத்தை இன்னொருவர் பெயருக்கு பவர் எழுதிக் கொடுத்துவிடுவார்கள். அந்தத் தாத்தாவே நிலத்தை வேறு ஒருவருக்கு எழுதிக் கொடுத்தது போன்று ஆவணங் களையும் தயார் செய்துவிடுவார்கள். இப்படி ஃபோர்ஜரி கையெழுத்து போட்டு அந்த இடத்தைப் பதிவுசெய்து இன்னொருவருக்கும் விற்றுவிடுவார்கள். காவல் துறை யிடம் புகார் அளிக்கச் சென்றால், அவர் களோ ஏமாற்றுபவரிடம் காசு வாங்கிக் கொண்டு 'இது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விஷயம். அமைச்சர் சம்பந்தப்பட்ட விஷயம். இது சிவில் வழக்கு. அதனால் சிவில் நீதி மன்றத்துக்குச் செல்லுங்கள்’ என்று அலைக்கழிப்பார்கள். ஆனால், உண்மை யில் இது மோசடி வழக்கு. காவல் துறை நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் புகாரைப் பதிவு செய்ய வேண்டும். காவல் துறை, வருவாய் மற்றும் பத்திரப் பதிவு அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் போன்ற கூட்டுச் சதியாகவே இந்த மோசடிகள் நடந்து உள்ளன!

சில மோசடிக்காரர்கள் 'இன்னைக்கு ரேட்ல நிலத்துக்கு என்ன விலையோ அதில் 50 சதவிகிதத்தைக் கொடுக்கிறேன். எடுத்துட்டுப் போ!’ என்று கூறி நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்துகொள்ளப் பார்ப்பார்கள். 'ஒன்று நான் கொடுக்கிற விலையை வாங்கிக்கொள். அல்லது உனக்கே தெரியாமல் உன் நிலம் என்னிடம் வந்துவிடும்!’ என்பதுதான் இப்போதைய நிலை.

இந்தக் குற்றங்கள் மூலம் அரசுக்குப் பெரும் இழப்பு ஏற்படுகிறது. பொதுவாக, நிலங்களை 'கைடு லைன்’ மதிப்பின் அடிப்படையில்தான் பதிவு செய்கிறார்கள். 'மார்க்கெட் வேல்யூ’ எனப்படும் சந்தை மதிப்பைக் கருத்தில்கொள்வதே இல்லை. உதாரணத்துக்கு, ஒரு நிலத்தின் சந்தை மதிப்பு 1 கோடி ரூபாயாக இருக்கும். அதன்படி நீங்கள் வாங்கினால் 10 சதவிகிதம் என்ற கணக்கில் சுமார் 10 லட்சம் ரூபாய் அரசுக்கு வருமானம் வரும். ஆனால், அதே நிலத்தின் கைடு லைன் மதிப்பு என்பது 40 லட்ச ரூபாயாக இருக்கும். அதில் 10 சதவிகிதம் என்றால் வெறும் 4 லட்சம் ரூபாய் மட்டுமே அரசுக்கு வருமானம் வரும். இதனால் அரசுக்கு 6 லட்சம் ரூபாய் இழப்பு! இந்த இழப்பு, திரும்பவும் மக்கள் மீது வரியாக, விலை உயர்வாக வந்து விழும். சில தனி மனிதர்களின் கொள்ளைக்காக ஒரு சமூகமே சுமை சுமக்கும் காரியம்தான் நில மோசடிகளின் ஆணிவேர். தமிழக அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் இதை ஓரளவு தடுக்க முனைகின்றன. ஆனால், முழுமையாகத் தடுக்க இன்னும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!''