Published:Updated:

முதல் வழக்கே பர்ஸ் திருட்டு! - கண்ணூர் புதிய ஏர்போர்ட் காவல் நிலையத்துக்கு வந்த சோதனை

முதல் வழக்கே பர்ஸ் திருட்டு! - கண்ணூர் புதிய  ஏர்போர்ட் காவல் நிலையத்துக்கு வந்த சோதனை
முதல் வழக்கே பர்ஸ் திருட்டு! - கண்ணூர் புதிய ஏர்போர்ட் காவல் நிலையத்துக்கு வந்த சோதனை

ண்ணூர் விமான நிலையம் திறப்பு விழாவுக்கு வந்தவரின் பர்ஸ் திருடப்பட்ட சம்பவம் ஏர்போர்ட் போலீஸுக்கு முதல் வழக்காக வந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரில் சர்வதேச விமான நிலையம் நேற்று திறக்கப்பட்டது. மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கொடியசைத்து விமானப் போக்குவரத்தை தொடங்கிவைத்தனர். விமான நிலைய திறப்பு விழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உயர் அதிகாரிகளும், அமைச்சர்களும் வந்திருந்த திறப்பு விழாவில் கலந்துகொண்ட எர்ணாகுளத்தைச் சேர்ந்த பி.எஸ்.மேனு என்பவரின் பர்ஸ் திருடப்பட்டுள்ளது.

பர்ஸில் ஏ.டி.எம். கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகமாகக் கலந்துகொண்ட இந்த விழாவில் பர்ஸ் திருடப்பட்ட சம்பவம் தீவிர விவாதத்துக்குள்ளானது. கண்காணிப்புக் கேமராக்கள் இருந்தும் பர்ஸ் திருடப்பட்ட சம்பவம் குறித்து எந்தத் தடயமும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை. பர்ஸ் திருடப்பட்ட சம்பவத்தை கண்ணூர் ஏர்போர்ட் போலீஸார் முதல் வழக்காக எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர்.