Published:Updated:

ராமதாஸை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: தே.மு.தி.க.

ராமதாஸை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: தே.மு.தி.க.
ராமதாஸை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: தே.மு.தி.க.
ராமதாஸை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: தே.மு.தி.க.

புதுக்கோட்டை: 'சாதி அரசியல் என்ற பெயரில் அப்பாவி மக்களை பழிவாங்கும் ராமதாஸை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்"   புதுக்கோட்டையில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் இப்படி முழங்கி இருக்கிறார் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வான பார்த்தசாரதி.

தே.மு.தி.க சார்பில் மே 1 ஆம் தேதி மே தின பொதுக்கூட்டத்தை புதுக்கோட்டையில் நடத்தினார்கள். அதில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட அக்கட்சி எம்.எல்.ஏ பார்த்தசாரதி, 'ஜெயலலிதாவை மோசமாக திட்டிய நாஞ்சில் சம்பத்திற்கு கார் கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், கட்சிக்காக பாடுபடும் தொண்டர்களுக்கு ஒரு சைக்கிள் கூட வாங்கிக் கொடுக்கவில்லை. உலகிலேயே அதிக அவதூறு வழக்குகள் எங்கள் தலைவர் மீது தான் போடப்பட்டிருக்கிறது. நான் வரும் வழியில் அ.தி.மு.க சார்பில் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் ஐம்பது பேர் கூட இல்லை. ஆனால், இங்கு ஐந்நூறு பேர் இருக்கிறார்கள்.
 

ராமதாஸை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: தே.மு.தி.க.

மே தின பொதுக்கூட்டத்தை தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் வசூலுக்காகவே நடத்துகிறார்கள். ஆனால், நாங்கள் எங்களது கைக்காசை போட்டு தொழிலாளர்களுக்காக நடத்திக் கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ.க்கள் அனைவருமே நாங்கள் ஜெயிக்க நீங்கள் தான் காரணம் என எங்களிடம் கூறினார்கள். இன்று அவர்களால் தான் நாங்கள் ஜெயித்தோம் என கூறுகிறார்கள்.

கலைஞருக்கு கூட சொந்த பந்தங்கள் இருக்கின்றன. ஆனால், இவருக்கு அப்படி எதுவும் இல்லை. பிறகு யாருக்காக இப்படி சொத்து சேர்க்கிறார் என்று தெரியவில்லை. நாற்பது தொகுதிகளிலும் ஜெயிப்போம் என ஜெயலலிதா கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஆனால், நாற்பது தொகுதிகளிலும் நாங்கள் தான் ஜெயிப்போம். அதற்கான உத்தரவை கேப்டன் போட்டுவிட்டார். நாங்களும் வேலை செய்ய தொடங்கி விட்டோம்" என்றார்.
 

ராமதாஸை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: தே.மு.தி.க.

தொடர்ந்து பா.ம.க.விவகாரத்தை தொட்டவர், 'சமீபத்தில் திருமாவளவன் எங்கள் தலைவரை சந்தித்து ஒரு சி.டி.யையும், இரண்டு போட்டோக்களையும் கொடுத்தார். உண்மையிலேயே ஒரு காலனியில் இருந்த ஆறு குடிசைகளை எரிச்சிருக்காங்க. அதே மாதிரி கள்ளக்குறிச்சியில் ஒருத்தரை அடிச்சி கொலை பண்ணிருக்காங்க. இப்படி ஒரு ஜாதி அரசியலை செய்து கொண்டிருக்கிறார் ராமதாஸ். "உண்மையிலேயே ராமதாஸுக்கு விவசாயிகள் மேல் அக்கறை இருந்திருந்தால் தனது மகனுக்கு நீர் பாசனத்துறை அமைச்சர் பதவி வாங்கி கொடுத்திருக்க வேண்டும். ஏன் சுகாதாரத்துறையை வாங்கி கொடுத்தார்" என கேப்டன் பேசினார். அதற்காக, கேப்டனை அரைவேக்காடு என பேசினார் ராமதாஸ். வன்னியர்கள் அதிகமிருக்கும் விருத்தாசலத்தில் நின்று தான் கேப்டன் ஜெயித்தார். சாதி அரசியல் என்கிற பெயரில் அப்பாவி மக்களை பழிவாங்கும் ராமதாஸை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்றார்.

வீ.மாணிக்கவாசகம்