Published:Updated:

கழுகார் பதில்கள்! - ‘‘நிலாவில் சைக்கிள் ஓட்டுவோம்!’’

கழுகார் பதில்கள்! - ‘‘நிலாவில் சைக்கிள் ஓட்டுவோம்!’’
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்! - ‘‘நிலாவில் சைக்கிள் ஓட்டுவோம்!’’

கழுகார் பதில்கள்! - ‘‘நிலாவில் சைக்கிள் ஓட்டுவோம்!’’

கழுகார் பதில்கள்! - ‘‘நிலாவில் சைக்கிள் ஓட்டுவோம்!’’

கழுகார் பதில்கள்! - ‘‘நிலாவில் சைக்கிள் ஓட்டுவோம்!’’

Published:Updated:
கழுகார் பதில்கள்! - ‘‘நிலாவில் சைக்கிள் ஓட்டுவோம்!’’
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்! - ‘‘நிலாவில் சைக்கிள் ஓட்டுவோம்!’’

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி-1.

கருணாநிதியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆவலாக இருப்பதாகக் கூறியிருக்கிறாரே நடிகர் பிரகாஷ்ராஜ்?


பொருத்தமானவர்தான். ‘இருவரி’ல் ஏற்கெனவே வேடம்போட்டவர்தானே!

கழுகார் பதில்கள்! - ‘‘நிலாவில் சைக்கிள் ஓட்டுவோம்!’’

@துடுப்பதி வெங்கண்ணா, பெருந்துறை.

‘பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நாங்கள் காரணம் இல்லை’ என்று மத்திய, மாநில அரசுகள் நழுவுகின்றனவே?

உண்மைதான். அவர்களெல்லாம் எதற்குமே காரணமில்லை. அவர்களுக்கு வாக்களித்த நாம்தான் காரணம்!

ஜனனி, போரூர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்! - ‘‘நிலாவில் சைக்கிள் ஓட்டுவோம்!’’

உடல் பருமனைக் குறைக்கலாம், சிவப்பழகு சருமம், வழுக்கைத் தலையில் முடி... இப்படி வரும் விளம்பரங்கள் எல்லாமே கப்ஸாதான் என்பது அடிக்கடி நிரூபணமாகிறது. இருந்தும் மக்கள் சிக்கிக்கொள்கிறார்களே?

‘சில விஷயங்களை மாற்ற முடியாது’ என்ற உண்மை தெரியாதவர்கள் ஏமாறத்தானே வேண்டும்!

அ.ஜெயப்பிரகாஷ், கழுகுமலை.

தமிழ்வழிக் கல்வியை மேம்படுத்தாமல், அதே தமிழ்ப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை (இங்கிலீஷ் மீடியம்) ஆரம்பித்திருப்பது முறையா?


ஆங்கிலவழிக் கல்வி, காலத்தின் தேவை. உலகளாவிய போட்டியில் அது நம் அடுத்த தலைமுறைக்கு உதவும். ஆனால், இரண்டு விஷயங்களை இந்த அரசு புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலம் தேவைதான். ஆனால், தாய்மொழியின் அழிவுக்கு அது காரணமாகிவிடக் கூடாது. ஒரு மொழியின் அழிவு என்பது, ஒட்டுமொத்த மக்களின் அழிவே. ஆங்கிலவழிக் கல்வியைத் தகுதியான ஆசிரியர்கள் மூலம் தர வேண்டும். குக்கிராமங்களில் ஆரம்பிக்கப்படும் மெட்ரி குலேஷன் பள்ளிகள், தரமற்ற ஆசிரியர்களை வைத்துப் பயனற்ற முறையில் பாடங்களை போதிக்கின்றன. தமிழும் தெரியாமல், ஆங்கிலமும் புரியாமல் அந்தப் பள்ளிகளின் மாணவர்கள் வளர்ந்து நிற்கிறார்கள். அப்படி ஒரு சூழலை அரசுப் பள்ளிகளும் உருவாக்கிவிடக் கூடாது.

@இரா.கணேசன், பாலக்கோடு.

தமிழ்நாட்டில் அடுத்து அமையும் ஆட்சியாவது ஓரளவு சீரானதாக அமையும் என்று எதிர்பார்க்கலாமா, அல்லது பழனிசாமியே பரவாயில்லை என்ற நிலைதான் இருக்குமா?


கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, நிச்சயமாக பழனிசாமியே பரவாயில்லை என்று சொல்ல வேண்டியிருக்கும் எனத் தோன்றுகிறது.

@தொண்டி முத்தூஸ், ராமநாதபுரம்.

‘பகல் கொள்ளை’ என்றால் என்ன?


பத்து ரூபாய்க்கு ரோட்டில் விற்கப்படும் அதே பாப்கார்னை, கொஞ்சம் கலர் பூசி, அட்டைப் பெட்டியில் வைத்து 200 ரூபாய், 250 ரூபாய் என்று தியேட்டர்களில் விற்பனை செய்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் சரியான பதில் கிடைக்கும்.

இ.முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.


தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றாத அரசியல் கட்சிகளை, அடுத்த தேர்தலில் போட்டியிட தடைவிதித்தால் எப்படி இருக்கும்?


அப்படி ஒரு சட்டம் வரவிடாமல் தடுக்க எல்லாக் கட்சிகளும் இணைந்துவிடும். தங்களுக்கு ஆபத்து வரும்போது, எல்லா அரசியல்வாதிகளும் ஒரே இனமாகிவிடுவார்கள். ஏற்கெனவே அரசியல் கட்சிகள் அந்நிய நன்கொடை பெறும் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை காங்கிரஸ், பி.ஜே.பி என இரண்டு கட்சிகளுமே அலட்சியம் செய்த வரலாறு உண்டு.   

திருப்பூர் அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல ஆண்டுகளாகியும் உயர் நீதிமன்றத்தின் பெயர் மாற்றம் செய்யப்படாமல் உள்ளதே?


மெட்ராஸாக இருந்த சென்னை மட்டுமல்ல, பம்பாய்-மும்பை, கல்கத்தா-கொல்கத்தா, ஒரிஸா-ஒடிஷா என்று பெயர்கள் மாற்றப்பட்டுவிட்டன. ஆனால், இங்கெல்லாம் உள்ள உயர் நீதிமன்றங்கள் பழைய பெயர்களில்தான் நீடிக்கின்றன. அரசியல் சட்டத்தைத் திருத்தினால்தான் இந்தப் பெயர்களை மாற்றமுடியும். மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா உயர் நீதிமன்றங்களின் பெயர்களை மாற்ற 2016-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், புதிய பெயர் குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன. ‘சென்னை என வேண்டாம், தமிழ்நாடு உயர் நீதிமன்றம் எனப் பெயர் வையுங்கள்’ என்கிறது தமிழக அரசு. கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்ற அங்கிருக்கும் நீதிபதிகள் விரும்பவில்லை. இந்தக் குழப்பத்தால் பெயர் மாற்றம் தள்ளிப் போடப்பட்டுவிட்டது.

அதெல்லாம் போகட்டும்... தீர்ப்புகளைக் காலம் தாழ்த் தாமல், ஒரு வரைமுறைக்குள் வழங்கினால், நீதிமன்றங்களின் மதிப்பு கூடும்!

கழுகார் பதில்கள்! - ‘‘நிலாவில் சைக்கிள் ஓட்டுவோம்!’’

@யுவன்ராஜ்.

நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் கொள்கை பற்றி ஒரே வரியில் பதில்?

முப்பாட்டனிடம் கேட்டு விட்டுச் சொல்கிறேன்.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்

‘‘இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்’’ என்கிறாரே சுப்பிரமணியன் சுவாமி?


காந்தியைக் கொன்ற கோட்ஸேவுக்கே கோயில் கட்டி, கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சகாவான சுப்பிரமணியன் சுவாமி இப்படியெல்லாம் பேசாமலிருந் தால்தான் ஆச்சர்யம்.

க.தமிழ்மணி, நெடுந்திடல்.

‘‘மத்திய அரசை எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்த்திருக்கிறோம்’’ என்கிறாரே முதல்வர் பழனிசாமி. எதை எதிர்த்தார்?


தமிழக அமைச்சர்கள்மீதும், தங்களுக்கு வேண்டப்பட்ட கான்ட்ராக்டர்கள்மீதும் எப்போதெல்லாம் ரெய்டு பாய்கிறதோ... அப்போதெல்லாம் மத்திய அரசை எதிர்க்கத்தானே செய்திருக்கிறார்கள்.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

‘‘அமெரிக்காவில் மட்டுமல்ல, நிலவிலும் சைக்கிள் ஓட்டி ஜெயலலிதாவின் புகழை எடுத்துச் சொல்வோம்’’ என்று கூறியிருக்கிறாரே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்?


அ.தி.மு.க அமைச்சர்களில் பலருக்கும் காமெடி ஸ்க்ரிப்ட் நன்றாகவே கைவருகிறது. இவர்களை வைத்தே அந்தக் கட்சியின் நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் ஒரு காமெடி நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம்.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).

‘‘தீவிர அரசியலில் குதிக்கப்போகிறேன்’’ என டி.ராஜேந்தர் கூறியிருக்கிறாரே?


நானும் ரௌடிதான்!

கழுகார் பதில்கள்! - ‘‘நிலாவில் சைக்கிள் ஓட்டுவோம்!’’

கே.பிரசன்னா, பாபநாசம்.

‘‘ராகுல் காந்தி, நாட்டின் மிகப் பெரிய கோமாளி’’ என்கிறாரே தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்?


பி.ஜே.பி-யுடன் கூட்டணி போடப்போகிறார். புரிகிறதா?

ராம், சேலையூர்.

கோடிக்கணக்கில் வங்கி மோசடி செய்துவிட்டு, வெளி நாட்டுக்குத் தப்பியோடிய விஜய் மல்லய்யா, நிரவ் மோடி போன்றவர்களை அடைக்க, ஐரோப்பிய தரத்தில் இங்கே சிறைகள் தயாராவது பற்றி?

மோசடி செய்தது இந்தியாவில்; குற்றவழக்குப் பதிவானது இந்தியாவில்; ஆனால், வெளிநாட்டு நீதிமன்றம் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு, சகல வசதிகளுடன் சிறை அறைகளை மாற்றும் நம் அரசாங்கத்தை என்னவென்று சொல்வது? ‘எங்கள் நாட்டு விதிமுறைகளின்படிதான் சிறையில் அடைக்க முடியும். ஆளை அனுப்புகிறாயா.. இல்லையா?’ என்று கேட்பதை விட்டுவிட்டு, கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். கேட்டால், சர்வதேசச் சட்டப் பரிவர்த்தனை என்பார்கள். ஒருவேளை, ‘எதிர்காலத்தில் நமக்கும் இது உதவும்’ என்று அரசியல்வாதிகள் கணக்குப்போட்டு இந்த வேலையைச் செய்கிறார்களோ, என்னவோ!

கழுகார் பதில்கள்! - ‘‘நிலாவில் சைக்கிள் ஓட்டுவோம்!’’

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism