Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

Published:Updated:
ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

ரபரப்பான சூழ்நிலைகளுக்கு நடுவே அரசியல்வாதிகள் தங்களை எப்படியெல்லாம் ரிலாக்ஸ் செய்துகொள்வார்கள் என்ற கேள்வி ரொம்ப நாட்களாகவே இருந்தது. இதற்கு சரியான பதில் கிடைக்காமல் தடுமாறித்தான் போனோம். ‘சரி, வேற வழியே இல்ல’ என அவர்களின் மொபைலை ஹேக் செய்ததில், ‘இசைதான் அவர்களை கூலாக்குகிறது’ என்று தெரியவந்தது. சில அரசியல்வாதிகளின் ப்ளேலிஸ்ட் ஹிஸ்டரி இது...

ஐடியா அய்யனாரு!

அழகிரி

பிடித்த இசையமைப்பாளர்: வாரிசு இசையமைப்பாளர்கள் மேல் அண்ணனுக்குக் கடும் வெறுப்பு. அதே சமயம், காட்ஃபாதரை மிகவும் பிடிக்கும் என்பதால் அவரின் ஃபேவரைட் இசையமைப்பாளர் இளையராஜாதான்.

நேற்றைய ஃபேவரைட் பாடல்:
‘அண்ணனென்ன தம்பியென்ன சொந்தமென்ன பந்தமென்ன...’

இன்று கேட்டுக்கொண்டிருப்பது: ‘தருவியா தரமாட்டியா... தரலன்னா உன் பேச்சு கா...’

வருங்காலத்தில் லூப்பில் ஓடப்போவது:
‘போனால் போகட்டும் போடா...’

தமிழிசை

பிடித்த இசையமைப்பாளர்:
இசைக்காக இல்லை.    ஆர்.கே நகரில் போட்டி போட ஆளே சிக்காதபோது, ‘அதான் நான் இருக்கேன்ல’ என ஆஜராகி மானம் காப்பாற்றியதற்காகக் கங்கை அமரனைப் பிடிக்கும்.

நேற்றைய ஃபேவரைட்: ‘ஆயிரம் தாமரை மொட்டுகளே... வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்...’

இன்று கேட்டுக் கொண்டிருப்பது: ‘கனவே கனவே கலைவதேனோ... கரங்கள் ரணமாய் கரைவதேனோ...’

வருங்காலத்தில் லூப்பில் ஓடப்போவது:
‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி...’

அப்படியே தமிழக மக்களின் ப்ளேலிஸ்ட்டையும் தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தோம். ஆனா, வெறும் வடிவேலு டயலாக்கா மட்டும்தான் இருக்கு. நம்ம பொழப்பு அப்படி!

தீபா

பிடித்த இசையமைப்பாளர்: கொஞ்சகாலம் முன்புவரை யாருமில்லை. ஆனால் ‘பகலெல்லாம் தூக்கம், இரவில் கூட்டம்’ என வொர்க்கிங் ஸ்டைலில் ஒற்றுமை இருப்பதால் இசையமைப்பாளர் சிம்புவை ரொம்பப் பிடிக்கும்.

நேற்றைய ஃபேவரைட்: ‘ஓ... ஒரு தென்றல் புயலாகி வருதே...’

இன்று கேட்டுக் கொண்டிருப்பது:
‘பார்த்த ஞாபகம் இல்லையோ...’

வருங்காலத்தில் லூப்பில் ஓடப்போவது: ‘பூங்காத்து திரும்புமா..?’

ஓ.பி.எஸ்

பிடித்த இசையமைப்பாளர்: முன்பு நிறையப் பேர் இருந்தாலும் சமீபகாலங்களில் இரட்டையர்களான சபேஷ்-முரளியின் இசைதான் ரொம்பப் பிடிக்கிறது.

நேற்றைய ஃபேவரைட் பாடல்: ‘என் தாயின் மீது ஆணை, எடுத்த சபதம் முடிப்பேன்...’

இன்று கேட்டுக்கொண்டிருப்பது: ‘நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரல...’

வருங்காலத்தில் லூப்பில் ஓடப்போவது: ‘
உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தஞ்சொல்ல...’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism