Published:Updated:

மினி மீல்ஸ்

மினி மீல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மினி மீல்ஸ்

மினி மீல்ஸ்

மினி மீல்ஸ்

மினி மீல்ஸ்

Published:Updated:
மினி மீல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மினி மீல்ஸ்
மினி மீல்ஸ்

அக்ரி ஆட்டம் ஆரம்பம்!

வே
ளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி 2015 பிப்ரவரி 22-ம் தேதி ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியைப் பறித்ததுடன், அ.தி.மு.க திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கினார் ஜெயலலிதா. அதன்பின், முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கிலிருந்து அக்ரி விடுவிக்கப்பட்டார்.

இப்போது அவருக்கு அ.தி.மு.க விவசாயப் பிரிவு மாநில செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியே, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் தனக்கே தரும்படி ஓ.பி.எஸ்ஸிடம் அடிபோட்டுள்ள அக்ரி, திருவண்ணாமலை நகரமே அதிரும் அளவுக்கு செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனால், தற்போதைய மாவட்டச் செயலாளர் பெருமாள்நகர் ராஜனும், கலசப்பாக்கம் எம்.எல்.ஏ-வான பன்னீர்செல்வம் செம கடுப்பில் இருக்கிறார்கள். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், அக்ரி தன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.

மினி மீல்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திணறடிக்கும் திருச்சி அரசியல்!

தி
ருச்சி எம்.பி-யான குமாருக்கும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும் ஏழாம் பொருத்தம். சமீபத்தில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் தங்கள் ஆதரவாளர்களை வெற்றிபெற வைப்பதில், இருவருக்கும் கடும் மோதல். கூட்டுறவு சங்கத் தேர்தலில் தன்னைப் புறக்கணிப்பதாக லோக்கல் அமைச்சர் வளர்மதி புலம்பிவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராக சிவபதியும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராகப் பரஞ்சோதியும் நியமிக்கப்பட்டனர். வயதான தனக்கு இளைஞர் பாசறை பொறுப்பு வேண்டாம் என பரஞ்சோதி மறுத்துவிட்டார். இப்போது பரஞ்சோதிக்கும், அமைச்சர் வளர்மதிக்கும் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் சீனியரான தனக்கு, எம்.ஜி.ஆர் மன்ற மாநிலத் தலைவர் பதவி வழங்கியதை ஏற்றுக்கொள்ள மனமில்லாத முன்னாள் எம்.பி-யான இளவரசன், தனக்குத் துணை அமைப்பில் பொறுப்பு வேண்டாம் எனக் கூறிவருகிறார். திருச்சி அரசியலைச் சமாளிக்க முடியாமல் அ.தி.மு.க தலைமை திணறுகிறதாம்.

கும்பகோணம் குஸ்தி!

கு
ம்பகோணத்தைத் தலைமையிட மாகக் கொண்டு, கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் செயல்படுகிறது. அதன் தலைவர் பதவிக்கான தேர்தல், விரைவில் நடக்கவிருக்கிறது. தற்போதைய தலைவராக இருப்பவர், அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வான ராமநாதன். இவர், மீண்டும் தலைவர் பதவியைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளார். இதற்கு வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தடையாக இருக்கிறாராம். ராமநாதனுக்கு எதிராக அ.தி.மு.க நிர்வாகிகள் பலரையும் அவர் தூண்டிவிடுவதாகச் சொல்லப்படுகிறது. அ.தி.மு.க நகர செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், அமைச்சர் துரைக்கண்ணு முன்னிலையில் இரு கோஷ்டிகளின் நிர்வாகிகள் கடுமையாக மோதிக்கொண்டனர். அப்போது அமைச்சர் துரைக்கண்ணு, “எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இந்த விஷயம் போகட்டும் என்றுதான் அமைதி யாக இருந்தேன்” என்று சொல்லி, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

- சி.ய.ஆனந்தகுமார், கே.குணசீலன், கா.முரளி
படங்கள்: ம.அரவிந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism