Published:Updated:

மிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர்? - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்

மிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர்? - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர்? - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்

மிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர்? - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்

மிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர்? - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்

மிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர்? - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்

Published:Updated:
மிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர்? - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர்? - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்
மிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர்? - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்

‘‘நீர் சொன்னபடியே அமைச்சர் விஜயபாஸ்கர் பயங்கர ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறார். அமைச்சரவையில் எல்லோரையும் ஆட்டிப் படைப்பார் போலிருக்கிறதே’’ என்றபடியே வரவேற்பு கொடுத்தோம் கழுகாருக்கு.

‘‘அவர் ஸ்ட்ராங்தான். ஆனால், நான் கொஞ்சம் வீக். நிறைய வேலை இருக்கிறது கேட்கவேண்டியதையெல்லாம் விரைவாகக் கேளும்’’ என்று படபடத்தார் கழுகார்.

‘‘என்னய்யா இது, உமக்கும் இப்படி வியர்க்கிறது. எதற்கு இப்படி டென்ஷன் ஆகிறீர்? பி.பி மாத்திரையெல்லாம் சரியாகத்தானே சாப்பிடுகிறீர்கள்’’ என்று சாந்தமாகக் கேட்டோம்.

‘‘ஓ... ஹெச்.ராஜாவின் அந்த விநாயகர் சதுர்த்தி வீடியோவைப் பார்த்துவிட்டீர். அதுபற்றி உமக்குச் செய்திகள் வேண்டும், அப்படித்தானே? அவரால் டெல்லி கட்சித் தலைமைக்கும் இப்போது வியர்க்க ஆரம்பித்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்புதான், ‘கட்சியினர் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்... பேசும்போது நாவடக்கம் வேண்டும்’ என்றெல்லாம் வகுப்பெடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குறிப்பாக, பசுப் பாதுகாவலர்கள் மற்றும் எஸ்.வி.சேகர் விவகாரம் வெடித்தபோதுதான் பிரதமர் அறிவுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பி.ஜே.பி-யினர் கொஞ்சம் அடங்கித்தான் கிடந்தனர்.’’

‘‘இப்போது பொங்கிவிட்டாரே ஹெச்.ராஜா.’’

‘‘தமிழகம் முழுக்கவே இந்த தடவை விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் வைக்கும் விஷயத்தில் உயர் நீதிமன்ற உத்தரவைக் காட்டி போலீஸார் கறாராகவே நின்றனர். இஷ்டப்பட்ட இடத்தில் சிலைகளை வைப்பது, மின்சாரத்தைத் திருடி பயன்படுத்துவது போன்றவற்றுக்கெல்லாம் பல இடங்களில் தடைபோட்டனர். இதுகுறித்து பி.ஜே.பி-யினரும் இந்து அமைப்பினரும் புழுங்கிக்கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில், திருமயம் அருகேயுள்ள அந்த கிராமத்துக்கு வந்த ராஜாவிடம் பலரும் இதைப் பற்றி உசுப்பேற்ற, வழக்கம்போல டென்ஷன் எகிறிவிட்டது.’’

மிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர்? - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘அதற்காக, போலீஸையும் நீதிமன்றத்தையும் இப்படியா தரம்தாழ்ந்து விமர்சிப்பது?’’

‘‘அப்படியெல்லாம் நான் பேசவே இல்லை என்று மறுப்புக் கொடுத்திருக்கிறார் ராஜா. ஆனால், அது நேரடி வீடியோ பதிவு என்பதுதான் போலீஸின் வாதம். அந்தக்கட்சியின் மூத்தத் தலைவர்களும் இதையெல்லாம் ரசிக்கவில்லை. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த சீனியர் தலைவர் ஒருவர், டெல்லி வரை இதைப் பற்றிப் பேசி பொங்கியிருக்கிறார். ‘கொஞ்ச நாள்களாகத்தான் சர்ச்சை இல்லாமல் இருந்தது. பழையபடி ஆரம்பித்துவிட்டார். பொதுமக்கள் மத்தியில் இது நமக்கு ஏகப்பட்ட கெட்டபெயரைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது’ என்றெல்லாம் குறைபட்டிருக்கிறார் அவர்.’’

‘‘ஓஹோ...’’

‘‘எஸ்.வி.சேகர் விவகாரம் போலவே, இந்த விஷயமும் நம் தலையைச் சுற்றிச்சுற்றி வரும் என்று கலங்கிக் கிடக்கிறாராம் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். அதோடு, ஹெச்.ராஜாவின் இத்தகைய பேச்சு குறித்து நீதித்துறை வட்டாரத்திலும் கவலையோடு விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம், உளவுத்துறை மூலமாக டெல்லி வரை போக, அங்கிருந்து ராஜாவின் பேச்சு குறித்து கவலையோடு பார்க்கத் தொடங்கிவிட்டார்களாம். ‘படாதபாடு பட்டு பி.ஜே.பி-யின் இமேஜை தமிழகத்தில் கொஞ்சம் உயர்த்தப் பார்த்தால், இப்படியெல்லாம் உளறிக்கொட்டி பாதாளம் நோக்கித் தள்ளிவிடுகிறார்களே’ என்றும் டெல்லியைக் கவலை மேகங்கள் சூழ ஆரம்பித்துள்ளன.’’

‘‘ஆக, ராஜாமீது போலீஸ் நடவடிக்கைக்கு எந்த தடையும் இருக்காது என்று சொல்லும்.’’

‘‘இந்த தடவை நீதிமன்றத்தையே கேவலப்படுத்தி யிருப்பதால், டெல்லி தலைமையின் கோபம் அதிகமாகவே இருக்கிறதாம். அதனால், கைதாகும் மூடுக்கு வந்துவிட்டாராம் ராஜா. மறுப்புத் தெரிவித்தாலும், வீடியோ ஒரிஜினல்தான் என்பதை போலீஸ் நிரூபித்துவிடும் என்பதால், எந்த எதிர்ப்பும் காட்டாமல் தற்போதைக்கு அமைதியாக இருக்கப்போகிறாராம் ராஜா’’ என்ற கழுகார், ‘‘அ.தி.மு.க விஷயத்துக்கு வருகிறேன்’’ என்றபடி அதில் புகுந்தார்.

‘‘அதிரடியாகக் கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்த அறிவிப்பு வந்தது. ஏகப்பட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டு நிற்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பது பலரையும் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. அந்த அளவுக்கு அவர் அனைவரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார் என்பது இதன் மூலமாகவே நிரூபணம் ஆகிவிட்டதாகப் பலரும் நினைக்கின்றனர். அதேசமயம், பன்னீர் தரப்போ, தங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று உறுமவும் ஆரம்பித்துள்ளது.’’

‘‘எதற்காகவாம்?’’

‘‘பன்னீரின் ஆதரவாளர்களுக்கு இணைச் செயலாளர், துணைச்செயலாளர் போன்ற டம்மியான பதவிகளை வழங்கியுள்ளார்கள். எடப்பாடி ஆதரவாளர்களுக்கோ முக்கியமான பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற சோகம் பன்னீரை வாட்ட ஆரம்பித்துள்ளது. அதனால், தனக்கு நெருக்கமானவர்களிடம் ‘கே.சி.பழனிசாமி கேஸ் போட்டது நல்லதுய்யா. அந்த கேஸ்ல அவர் ஜெயிச்சாலே எல்லாத்துக்கும் ஒரு முடிவு வந்துவிடும்’ என்று கமென்ட் அடித்துள்ளார்.’’

‘‘அந்த கேஸுக்கும் பன்னீர் ஆட்களின் பதவிக்கும் என்ன தொடர்பு?’’

‘‘அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், கட்சியின் விதிமுறைப்படி பொதுச்செயலாளர் பதவிதான் உண்டு. எனவே, ‘இந்த ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது என அறிவிக்க வேண்டும். புதிதாக பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்த வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்’ என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார் கே.சி.பழனிச்சாமி. தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து பன்னீர்-பழனி அணியினர் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்கச் சொல்லி தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. தற்போது, பொதுச்செயலாளர் தேர்வை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி உத்தரவிட்டால், அது தனக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்று நினைக்கிறார் பன்னீர்.’’

‘‘அதெப்படி இவருக்குச் சாதகமாக அமையும்?’’

‘‘ஆட்சி எனக்கு, கட்சி உனக்கு என்று ஏற்கெனவே போட்ட ஒப்பந்தப்படி பல விஷயங்களைச் செய்து தரமறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால் கோபத்தில் இருக்கிறார் பன்னீர். ஒப்பந்தம் ஏற்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் தன் ஆதரவாளர்களுக்கு ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி, பதவிகளைப் பெறமுடியாமல் தவிக்கிறார். இத்தகைய சூழலில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தவேண்டும் என்கிற சூழல் உருவானால், அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிடலாம். அதற்கு ஏற்றார்போல இப்போதே காய்நகர்த்தல்களை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறாராம் பன்னீர். எப்படியும் கட்சியினர் மத்தியில் இப்போதைய முதல்வர் எடப்பாடியைவிட, மூன்று முறை முதல்வராக இருந்த தனக்கு அதிக செல்வாக்கு உண்டு என நம்புகிறார் பன்னீர்.’’

‘‘ஓஹோ... கதை அப்படி போகிறதா?’’

‘‘அதேசமயம், ‘முதல்வர் பதவி இப்போதைக்குத் தான். ஆனால், கட்சியின் பொதுச்செயலாளர் பதவிதான் நிரந்தரம்’ என்பதை உணர்ந்து, அதன்மீது தானும் ஒரு கண் வைக்கத்தான் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஒருவேளை கட்சியைக் கைப்பற்றிவிட்டால், அடுத்து ஆட்சியைக் கைப்பற்றுவது பன்னீருக்குப் பெரிய விஷயமாக இருக்காது என்பதையும் பழனிசாமி உணர்ந்தே இருக்கிறார். பொதுத் தேர்தல் வருவதற்கு முன்பாக, ‘அ.தி.மு.க-வுக்கு யார் பொதுச் செயலாளர்’ என்ற இந்தப் புதுத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதனால்தான், தற்போது அறிவித்த நிர்வாகிகள் பட்டியலில் இடைச்செருகலாக ஒரு வேலையையும் செய்துள்ளார்.’’

‘‘என்னப்பா செருகல் அது?’’

‘‘கட்சியின் தேர்தல் பிரிவு பதவிக்கு தனது ஆதரவாளரான இன்பதுரையை நியமித்துள்ளார் பழனிசாமி. உட்கட்சித் தேர்தலைக் கட்சியின் தேர்தல் பிரிவுதான் நடத்தும். ஏற்கெனவே இந்தப் பிரிவின் செயலாளராக பழனிசாமியின் ஆதரவாளரான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளார். கூடுதலாக இன்பதுரை நியமிக்கப் பட்டுள்ளார். இவர் சட்டநுணுக்கங்களை அறிந்தவர். எதிர்காலத்தில் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும்போது தனக்குச் சாதகமாக எல்லாவற்றையும் நடத்திவிடலாம் என்கிற திட்டத்தில்தான் இவரை நியமித்துள்ளாராம்.’’

‘‘பலே பழனிசாமி.’’

‘‘பன்னீரும் சும்மாயில்லை. எடப்பாடியின் ஆதரவாளராகப் பார்க்கப்படும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கடி பன்னீரைச் சந்திக்கிறாராம். இப்போதைக்குக் கட்சியின் செலவுகள் அனைத்தையும் பெருமளவில் பார்த்துக்கொள்வது வேலுமணிதான். ஆனால், தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போதிய அளவில் அழுத்தமாக எடப்பாடி பழனிசாமி கருத்துத் தெரிவிக்கவில்லை என்கிற வருத்தம் வேலுமணிக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில், பொதுச்செயலாளர் ஆசையில் பன்னீர் இருப்பதையும், இந்த இருவரும் அடிக்கடி சந்திப்பதையும் முடிச்சுப்போட்டு அ.தி.மு.க தலைமை அலுவலக வட்டாரத்தில் பேச்சுக்கள் வலம் வருகின்றன.’’

‘‘அ.தி.மு.க -மற்றும் பி.ஜே.பி இடையேயான நட்பு எப்படி இருக்கிறது?’’

‘‘நட்பா... அதுதான் அடிக்கடி ரெய்டு என்கிற பெயரில் கண்ணிவெடிகளைப் புதைக்கிறதே பி.ஜே.பி அரசு. ‘அ.தி.மு.க தலைமை ரஜினி கையில்’ என்று ஏற்கெனவே ஜூ.வி-யில் எழுதியிருந்தீர் அல்லவா. அதை இப்போது மனதில் நினைத்துக்கொள்ளும். சில வாரங்களுக்கு முன்பு டெல்லி பிரதிநிதிகள் இருவர் ரஜினியைச் சந்தித்துள்ளார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பேசியுள்ளனர். ‘பி.ஜே.பி, அ.தி.மு.க., ரஜினி இந்தக் கூட்டணிதான் கரைசேரும். ஆனால், இப்போதுள்ள அ.தி.மு.க தலைமையோடு கூட்டணி வைக்க எனக்கு விருப்பம் இல்லை. வேறு தலைமையை அ.தி.மு.க-வுக்கு நியமித்தால் மட்டுமே மட்டுமே மக்களிடம் எடுபடும். அதற்கு வழிசெய்யுங்கள்’ என்று ரஜினி சொல்லிவிட்டாராம்.’’

‘‘அடடே!’’

‘‘செய்யாத்துரை முதல் கிறிஸ்டி நிறுவனம் வரையிலான ரெய்டுகள் மூலம் பன்னீர், எடப்பாடி இருவருமே தவறு செய்துள்ளார்கள் என்கிற பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்கெனவே ஏற்படுத்தியிருக்கிறது மத்தியில் ஆளும் பி.ஜே.பி. இந்நிலையில், ரஜினியின் பேச்சை அடுத்து, வெகுவிரைவில் இரண்டு முக்கிய ரெய்டுகள் தமிழகத்தில் நடைபெற உள்ளனவாம். பன்னீர்&பழனி இந்த இருவர் சம்பந்தப்பட்ட இடங்களில்தான் அந்த ரெய்டுகள் நடைபெறும் என்று தெரிகிறது. நெருக்கடியான அந்தச்சூழலில் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, கட்சிக்கு புதிய நிர்வாகியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்குவார்களாம். இரு தலைவர்களுக்கு நெருக்கமான இடங்களில் ரெய்டு; தேர்தல் ஆணையத்தின் நெருக்குதலின் பேரில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு; பன்னீர் மற்றும் பழனி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அதிரடி ரிலீஸ்... என்று ஒரே நேரத்தில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்துவார்களாம்.’’

‘‘இந்த இரட்டையருக்கு மாற்றாக பி.ஜே.பி திட்டமிட்டிருப்பது யாரை?’’

‘‘கல்வி அமைச்சர் செங்கோட்டையன்தான் முதல் சாய்ஸ். சீனியரான அவருக்கு கட்சியிலும், ஆட்சியிலும் மரியாதை உள்ளது. அதனால், கட்சியில் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்று நினைக்கிறது பி.ஜே.பி. ரஜினி தரப்பிலிருந்தும் செங்கோட்டையனுக்கு பச்சைக்கொடிதானாம்’’ என்ற கழுகார் சர்ரென்று காற்றில் மறைந்தார்.

அட்டைப்படம்: கே.ஜெரோம்
படம்: வி.ஸ்ரீனிவாசுலு

மிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர்? - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்

‘‘விஜயபாஸ்கர் என்ன ஏமாளியா?’’

மைச்சர் விஜயபாஸ்கர் தன்னைச் சந்தித்தாக டி.டி.வி.தினகரன் கூறியிருப்பது அ.தி.மு.க-வில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘வாக்கிங் போகும்போது தன்னை விஜயபாஸ்கர் சந்தித்தாகவும், டெல்லி மேலிடத்தின் ரெய்டு தாக்குதல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றும்படி கேட்டதாகவும்’ தினகரன் சொல்லியுள்ளார். ‘‘தற்செயலாக சந்தித்துப் பேசியது உண்மைதான். ஆனால், மற்றதெல்லாம் பொய். தினகரனையே டெல்லி காப்பாற்றவில்லை. அப்படிப்பட்ட நபரிடம் போய் நிற்க விஜயபாஸ்கர் என்ன ஏமாளியா?’’ என்கிறார்கள் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள். அதேசமயம், இதுகுறித்துக் கட்சித் தலைமையோ, விஜயபாஸ்கரோ இதுவரை நேரடியாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது ஏன் என்கிற கேள்விக்குத்தான் பதில் இல்லை.

கண்காணிப்பில் கரன்ஸி மனிதர்!

மிழக நெடுஞ்சாலைத் துறையின் அமைச்சராக இருப்பவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அந்தத் துறையில் யாருக்கு டெண்டர் கொடுக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து, யாரை எங்கே நியமிக்க வேண்டும் என்பதுவரை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர் என சேலத்துக்காரர் ஒருவரைக் கைகாட்டுகிறார்கள். வருமானவரித் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் இவர் இப்போது இருப்பதாகப் பேச்சு. கரன்ஸியின் பெயர் கொண்ட இவர், நெடுஞ்சாலைத் துறையில் முன்பு பணியாற்றியவர். தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் நடந்துவந்த டெண்டர்களை, ‘பேக்கேஜ் சிஸ்டமாக மாற்றினால் லாபம் கிடைக்கும்’ என பரிந்துரைத்த பெருமைக்குரியவர் இவர்தான். தற்போதைய நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரிகள் பலரும் இவரிடம் பணிவாகத்தான் பேசுவார்கள். இந்தியா முழுக்க பல கான்ட்ராக்டர்களிடம் இவருக்குத் தொடர்புகள் உண்டு. 

முதல்வரின் சம்பந்திக்கு ஒருவகையில் பங்காளி முறை இவர். அவர் மூலம்தான் எடப்பாடியிடம் ஐக்கியமானார். சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு இப்போது சேலத்தில் வீடு, பாண்டிச்சேரியில் ரிசார்ட், திருச்சியில் ஹோட்டல், கர்நாடகாவின் கூர்க் பகுதியில் காபி எஸ்டேட் என பல இடங்களில் சொத்துகள் உள்ளன. பல கான்ட்ராக்டர்களுக்கு பைனான்ஸ் செய்து இப்போது கோடிகளில் சம்பாதிக்கிறார்.

சமீபத்தில் தன் மகனுக்கு இவர் திருமணம் செய்தார். வருமானவரித் துறை கண்காணிப்பதை உணர்ந்ததாலோ என்னவோ, அந்தத் திருமணத்துக்கு அரசியல்வாதிகளுக்கோ, கான்ட்ராக்டர்களுக்கோ அழைப்பிதழ் கொடுக்கவில்லை. சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் நடத்தும் திருமணத்தைப் போல நடத்தினார். இந்தத் திருமணம்தான் இப்போது சேலத்தில் ஹாட் டாபிக்!

மிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர்? - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்

பி.ஜே.பி-யின் அறிவாலய விசிட்!

தி.
மு.க வர்த்தகப் பிரிவு மாநில செயலாளர் காசிமுத்துமாணிக்கம் மகள் திருமணம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கடந்த வாரம் நடைபெற்றது. தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தலைமையேற்று நடத்தி வைத்த முதல் திருமணம் இது என்பது சிறப்பு. எந்த பி.ஜே.பி-யுடன் உறவே இல்லை என்று ஸ்டாலின் சொன்னாரோ, அந்த பி.ஜே.பி-யின் தலைவர்கள் பலரும் அறிவாலயத்துக்கு விசிட் செய்தது இன்னொரு சிறப்பு. பொன்னார், தமிழிசை என பி.ஜே.பி பட்டாளமே பங்கேற்றது. அறிவாலயத்தில் உள்ள அறையில் பொன்னாருடன் தி.மு.க முக்கியப்புள்ளிகள் சிலர் அரை மணி நேரம் ரகசியமாக பேசவும் செய்தார்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு முன்னோட்டம் இது என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism