Published:Updated:

“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது!”

“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது!”
பிரீமியம் ஸ்டோரி
“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது!”

“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது!”

“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது!”

“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது!”

Published:Updated:
“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது!”
பிரீமியம் ஸ்டோரி
“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது!”

வேசப் பேச்சுகளால், அரசியல் மேடைகளை அலறவிடும் தமிழக அரசியல் களத்தில், ‘தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி’யின் அரசியலோ ‘அமைதி... அமைதி... அமைதியோ அமைதி!’

“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது!”

வார்த்தைகளைக் கவனமாகக் கோத்துப் பேசும் ஜி.கே.வாசனிடம் இதுகுறித்துப் பேசினால், ‘‘கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில், தமிழகம் முழுவதும் 45 சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்திருக்கிறேன். டிசம்பருக்குள் மீதமிருக்கும் தொகுதிகளிலும் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தொண்டர்கள், மக்களின் எண்ணங்களுக்கு அரசியல் ரீதியாக முழு வடிவம் கொடுப்பேன்’’ என்று தம்ஸ் அப் உயர்த்தினார்.

‘‘2014 இல் மறுபடியும் த.மா.கா-வை மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக நினைக்கிறீர்களா?’’

‘‘அரசியல் வரலாற்றில், 4 வயதை நிறைவுசெய்திருக்கும் குழந்தைப் பருவத்தில்தான் இருக்கிறது த.மா.கா! இந்த நிலையில், இப்போதே எங்களது லட்சியத்தை எட்டிவிடுவது சாத்தியமில்லை.

2016 தேர்தல் தோல்விக்குப் பிறகு படிப்படியாகக் கிராமந்தோறும் த.மா.கா-வை எழுச்சிபெறச் செய்யும் நோக்கில்,  32 ரெவின்யூ மாவட்டங்களுக்கு 4 முறை சுற்றுப்பயணம் சென்றிருக்கிறேன். எனவே, இன்றைக்கு மக்கள் மத்தியில் பலமானதொரு கட்சியாக வளர்ச்சி பெற்றிருக்கும் த.மா.கா வருகிற தேர்தல் களத்திலும் அசைக்கமுடியாத சக்தியாக இடம்பெறும்! இயக்கத்தின் அடித்தளத்தை உறுதிசெய்திருக்கும் இந்த வளர்ச்சிதான் சோதனையைத் தாண்டிய வெற்றி!’’

‘‘மக்கள் ஆதரவு இல்லாததினால்தானே 2016 சட்டமன்றத் தேர்தலிலேயே த.மா.கா தோல்வியடைந்தது...?’’

‘‘2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட த.மா.கா அடுத்த இரண்டாவது ஆண்டிலேயே தேர்தலைச் சந்திக்க நேரிட்டது. எனவே, எதிர்பார்த்த அளவுக்கு தேர்தல் களத்தில் மக்களின் எண்ணங்களை எங்களால் பிரதிபலிக்க முடியாமல் போய்விட்டது.... வாக்குகளையும் பெற முடியவில்லை.  மக்கள்,  அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதுபோல், சில அரசியல் கட்சிகள் மக்களுக்கு அழுத்தம் கொடுத்தன என்பதையும் வருத்தத்தோடு இங்கே சொல்கிறேன்!’’

‘‘எந்தக் கட்சி, அப்படியொரு அழுத்தம் கொடுத்தது என்று சொல்லமுடியுமா...?’’

‘‘அது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். எப்போதும் நான் என்னுடைய பாணியிலேயேதான் பேசுவேன்... அரசியல் அரங்கில் நாகரிகத்தைக் கடைப்பிடிக்கும் என்னுடைய பாணியிலிருந்து ஒருபோதும் கீழிறங்க நான் தயாராக இல்லை.’’

‘‘காங்கிரஸ் கட்சியில், உங்கள் ஆதரவுத் தலைவர்களுக்கு உரிய பதவி பெற்றுத்தர முடியவில்லை என்பதற்காக த.மா.கா ஆரம்பித்தீர்களா, அல்லது, உண்மையிலேயே காமராஜர் ஆட்சி அமைக்கும் எண்ணத்தில்தான் த.மா.கா ஆரம்பிக்கப்பட்டதா?’’

‘‘காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும் கொள்கை ரீதியாக எந்த வேறுபாடும் கிடையாது. 50 ஆண்டுக்காலமாகத் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியிலேயே இல்லை என்கிறபோது, அதன் செயல்பாட்டில் இன்னும் வேகத்தை அதிகப்படுத்தலாம், கட்சியின் அடிமட்டத்தில் இருக்கும் தகுதி படைத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்ற அடிப்படையில்தான் புதியபாதை - புதிய வியூகப் பார்வையோடு ஆரம்பிக்கப்பட்டது த.மா.கா!

இப்படி நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட த.மா.கா-வில் இன்னமும் அதே நல்ல நோக்கத்தோடு இருப்பவர்கள் இப்போதும் என்னுடன்தான் இருக்கிறார்கள். இடையிலே எங்களை விட்டுப் போனவர்கள் வேண்டுமானால், நீங்கள் சொன்னதுபோல் ‘பதவி இருந்தால் இருப்போம்... இல்லையென்றால் வெளியேறிவிடுவோம்’ என்ற நோக்கத்தில் போயிருக்கலாம். மற்றபடி அவர்கள் த.மா.கா-வை விட்டு வெளியேறியதற்கு ‘பதவி’ ஒன்றுமட்டுமே காரணம் என்றும் நான் சொல்லவில்லை.’’

‘‘காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவோம் எனச் சொல்லித்தான் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து சொல்லிவருகிறது. அவர்களிடமிருந்து நீங்கள் எப்படி வித்தியாசப்படுகிறீர்கள்?’’

‘‘காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்து, தமிழகத்தில் வாக்கு வங்கியைப் பெற வேண்டும் என்ற அவசியம் த.மா.கா-வுக்குக் கிடையாது. அதனால்தான் த.மா.கா ஆரம்பிக்கப்பட்ட இந்த நான்காண்டுக் காலத்தில், காங்கிரஸ் கட்சியையோ அதன் தலைவர்களையோ தாக்கி இதுவரை நாங்கள் யாரும் பேசியதில்லை.

ஒரே கொள்கை நோக்கம் கொண்ட நாங்கள், செயல்பாட்டில்தான் வேறுபட்டு நிற்கிறோம். எல்லாக் கட்சிகளுக்குமே லட்சியங்கள் இருக்கின்றன. இந்த 50 ஆண்டுக்காலத்தில் அந்த லட்சியங்களை எட்டிவிட்ட கட்சிகளாக தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மட்டுமே இருக்கின்றன. ஆனால், இந்த 50 ஆண்டுக்காலமாக ‘காமராஜர் ஆட்சி’ என்ற லட்சியத்தை காங்கிரஸ் எட்டிவிடாத சூழலில், ‘அந்த ஒரு நாளுக்காக...’ த.மா.கா புதுவிதச் செயல்பாடு களுடன் முயற்சி செய்துகொண்டிருக்கிறது.’’

‘‘நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில், த.மா.கா அங்கம்  வகிக்குமா?’’

‘‘காங்கிரஸ் அல்லது த.மா.கா தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் சூழல், தூரத்துப் பார்வைக்குக்கூடத் தெரியவில்லை. தி.மு.க அல்லது அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி அமைக்கப் பட்டாக வேண்டும்... இதுதான் உண்மை நிலை. அந்தவகையில், நாங்களோ காங்கிரஸ் கட்சியோ ஒத்த கருத்துடைய கூட்டணியில் சேரலாம்.’’
 
‘‘தி.மு.க அல்லது அ.தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டு ‘காமராஜர் ஆட்சி அமைக்க முடியும்’ என்று நினைக்கிறீர்களா?’’

‘‘காமராஜர் ஆட்சி என்றாலே அது தனிப்பட்ட ஆட்சியால்தான் ஏற்படுத்தப்பட முடியும். அதற்குக் கட்சியின் பலம் என்ன, கட்சிக்கு மக்களின் வரவேற்பு என்ன என்பதெல்லாம் பெரிய கேள்விக்குறி. எனவே, கூட்டணியில் சேர்ந்துகொண்டு, படிப்படியாக எங்கள் லட்சியப் பாதையை நோக்கிப் பயணிப்போம். ஆனால், அது எப்போது, எப்படி என்பதை உறுதியாகச் சொல்லக்கூடிய நிலை இல்லை. நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்!’’

‘‘ ‘வாசன் நல்லவர். ஆனால், அரசியலில் அவர் வல்லவர் இல்லை’ என்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது!”

‘‘அப்படி ஒரு கணிப்பு இருந்தால், ‘நல்லவர்களுக்கு இனிமேல் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்’ என்றுதான் முடிவு செய்யவேண்டும். அரசியலில் நல்லவர்களும் வேண்டும்; நல்லது கலந்த வல்லவர்களும் வேண்டும். எல்லாவற்றையும் தாண்டி நேர்மையானவர்கள் வேண்டும். வல்லவர் இல்லை, நல்லவர் மட்டும்தான் என்று பேசுவதெல்லாம் திண்ணைப் பேச்சு! உண்மைப் பேச்சு அல்ல.

15 நாள்களுக்குள் மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்புகிறது. ஆனாலும், ஒரு பக்கம் தண்ணீர் மறுபக்கம் கண்ணீர் என்றவகையில், கடைமடைப் பகுதிகளுக்குக்கூடத் தண்ணீர் போய்ச் சேரவில்லை. மதகுகள் உடைகின்றன. ஷட்டர்கள் பழுதாகின்றன. விவசாயிகள் சிறுகுறு தொழிலாளர்களுக்குத் தொந்தரவு, மத்திய - மாநில அரசுகளில் ஊழல் என எல்லாப் பிரச்னைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன... இந்தியா முழுவதும், நல்லவர்களைத் தவிர்த்து வல்லவர்களை மட்டுமே மக்கள் தேர்ந்தெடுப்பதால் இதுபோல் நடந்து கொண்டிருக்கின்றனவோ என்னவோ...’’

‘‘அரசியல் ரீதியாக உங்களது மென்மையான போக்கு, தொண்டர்களிடையே ஒருவித சோர்வைத் தந்துவிடாதா?’’


‘‘அரசியலைப் பொறுத்தவரையில், அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவதால் அன்றைய ஒருநாள் மட்டும் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக இருக்கலாமே தவிர, என்றைக்கும் நிலைத்து நிற்கமுடியாது. காரசாரமாகப் பேசுபவர்கள் முதல் பக்கச் செய்தியாக வருகிறார்கள். அப்படிப் பேசாதவர்கள் மூன்றாம் பக்கச் செய்தியாகத் தள்ளப்பட்டுவிடுகிறார்கள். 

“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது!”

எனக்கு 54 வயது; 36 ஆவது வயதிலிருந்தே அரசியலில் நான் இருக்கிறேன். த.மா.கா தலைவர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர், தமிழக காங்கிரஸின் தலைவர், மத்திய அமைச்சர் எனப் படிப்படியாக அரசியலில் வளர்ந்துகொண்டே இருக்கிறேன். இவ்வளவு நாள்களிலும் அரசியல் நாகரிகத்தை நான் கடைப்பிடித்தே வருகிறேன். மற்றபடி இது மிகப்பெரிய பக்குவம் என்றெல்லாம் என்னை நானே உயர்த்திப் பேசும் அளவுக்கு இதில் ஒன்றுமில்லை.

மத்திய - மாநில அரசாங்கங்களின் தவறான செயல்பாடுகள்,  துறை ரீதியிலான குறைபாடுகள், கவனக்குறைவுகள் குறித்து கடுமையான விமர்சனம் அறிக்கைகளை வெளியிடும் அரசியல் தலைவர்களின் முதல் வரிசையில் நானும் இருக்கிறேன். ஆனாலும், தலைவருக்குத் தலைவர் வித்தியாசங்கள் இருக்கலாம். கொச்சையாகப் பேசுபவர் ஒருவர், கடுமையாக விமர்சிப்பவர் ஒருவர், நாகரிகமாகப் பேசுபவர் இன்னொருவர் என்று மூன்று வித பாணிகள் இருக்கின்றன. மூவரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

அரசியலில், நாகரிகமான முறையில் சுட்டிக்காட்டுவது கூடாது என்றால், அது அரசியலுக்கும் நாளைய தலைமுறைக்கும் நல்லதல்ல என்பது என் கருத்து.’

த.கதிரவன் - படங்கள்: பா.காளிமுத்து, ஜெ.வேங்கடராஜ் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism