Published:Updated:

பிரேத பரிசோதனை முடிவடைந்தது: சரப்ஜித் சிங் உடல் ஒப்படைப்பு!

பிரேத பரிசோதனை முடிவடைந்தது: சரப்ஜித் சிங் உடல் ஒப்படைப்பு!
பிரேத பரிசோதனை முடிவடைந்தது: சரப்ஜித் சிங் உடல் ஒப்படைப்பு!
பிரேத பரிசோதனை முடிவடைந்தது: சரப்ஜித் சிங் உடல் ஒப்படைப்பு!

லாகூர்/புதுடெல்லி: பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்டு மரணமடைந்த இந்தியரான சரப்ஜித் சிங்கின் பிரேத பரிசோதனை முடிவடைந்துள்ள நிலையில், அவரது உடல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங், லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், இன்று காலை மரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடலை இந்தியா கொண்டு வர அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.இதற்காக சிறப்பு விமானம் ஒன்றையும் இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் சரப்ஜித் சிங்கின் பிரேத பரிசோதனை முடிவடைந்துவிட்டதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் 3 வாரங்களில் வெளியிடப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

##~~##
இந்நிலையில் சரப்ஜித் சிங்கின் உடல்,   இந்திய  அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து தனி விமானத்தில் சரப்ஜித் சிங் உடல் இந்தியா கொண்டு வரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மரியாதையுடன் அடக்கம்

இந்நிலையில் சரப்ஜித் சிங்கின் உடல் லாகூரிலிருந்து விமானம் மூலம் அவரது சொந்த ஊரான பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகருக்கு கொண்டு வரப்பட உள்ளது. அவரது உடலை பெற்றிக் கொள்வதற்காக சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் அங்கு தயார் நிலையில் காத்துக்கொண்டுள்ளனர்.

பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின்னர் சரப்ஜித் சிங்கின் இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது.அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அமிர்தசரஸில் இன்னொரு பிரேத பரிசோதனை

இதனிடையே படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  சரப்ஜித் சிங் மாரடைப்பால் காலமானதாக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சரப்ஜித் சிங் உடல் அமிர்தசரஸ் வந்தவுடன் மீண்டும் ஒருமுறை பிரேத பரிசோதனை நடத்த அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 ரூ. 25 லட்சம் நிவாரணம்

இந்நிலையில் சரப்ஜித் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீக்கியர்கள் போராட்டம்

இதனிடையே சரப்ஜித் சிங் கொல்லப்பட்டதை கண்டித்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் பரவலாக சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டெல்லி உள்ளிட்ட சில இடங்களிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.