பா.ம.க-வில் இணைந்து, அடுத்த நிமிடமே மாநிலத் துணைத் தலைவர் பதவியைப் பெற்றிருக்கிறார் நடிகர் ரஞ்சித். இவரைத் தொடர்ந்து வேறு சில சினிமா பிரபலங்களும் பா.ம.க-வில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க., அ.தி.மு.க என மாறி மாறிக் கூட்டணி வைத்து எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய அமைச்சர் என்று தொடர்ந்து அதிகாரப் பதவிகளைக் கைவசம் வைத்திருந்த பா.ம.க., 2016 சட்டமன்றத் தேர்தலில் ‘மாற்றம்... முன்னேற்றம்’ என்ற முழக்கத்துடன் தனித்துக் களமிறங்கியது. அதில் பா.ம.க., படுதோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், நீண்டகாலமாக பா.ம.க பின்பற்றிவந்த சில கொள்கைகளிலிருந்து இறங்கிவந்திருப்பதைச் சமீபத்தில் பார்க்க முடிகிறது. அதில் ஒன்றுதான், நடிகர் ரஞ்சித்தின் வரவு.

பா.ம.க நிறுவனர் ராமதாஸும் சரி, அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் சரி, நடிகர்கள் அரசியலுக்கு வருவதைக் கடுமையாக எதிர்ப்பவர்கள்; ‘நடித்தவர்கள் நாட்டை ஆள வேண்டுமா... படித்தவர்கள் நாட்டை ஆள வேண்டுமா?’, ‘டாக்டரா... ஆக்டரா?’ என்று பல மேடைகளில் ஆவேசத்துடன் கேள்விகளை எழுப்பிவருபவர்கள்.

அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் ரஜினி அறிவித்தபோதும், நடிகர் கமல் கட்சி தொடங்கியபோதும், ‘‘எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும், இனி அது எடுபடாது” என்று அன்புமணி கூறினார். ‘‘ஒரு நோஞ்சான் நடிகர் பத்துப் பேரை அடிக்கிறார். உண்மையில் அவருக்குச் சண்டைபோடத் தெரியாது. உண்மையில் அவர் சண்டைபோட வேண்டுமென்றால் என்னிடம் வரட்டும். நான் வெற்றி பெற்றுக்காட்டுகிறேன்’’ என்று சில ஆண்டுகளுக்கு முன் அன்புமணி பேசினார். அந்த அளவுக்கு நடிகர்கள்மீது கோபமாக இருந்தவர்களிடம் திடீர் மாற்றம் ஏன்?

பா.ம.க வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க தோல்வியைச் சந்தித்தது. கட்சி வளர்வதற்குத் தடையாக உள்ள விஷயங்களை அன்புமணி ஆய்வுசெய்துவந்தார். மக்களைக் கவரும் வகையில் கட்சியில் சினிமா நடிகர்கள் இல்லாததை ஒரு குறையாக அவர் உணர்ந்தார். எனவே, பா.ம.க-வுக்கு நடிகர்கள் வருவது அவசியம் என அவர் முடிவுசெய்தார். அதனால், ‘இனி சினிமா நடிகர்களை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும்’ என ராமதாஸிடம் அன்புமணி கூறியிருக்கிறார். என்றாலும், இதில் ராமதாஸுக்கு உடன்பாடில்லை. அந்தச் சமயத்தில்தான், கையில் சிகரெட் பிடித்தவாறு நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்பட போஸ்டர் வெளியானது. அப்போது, ‘நான் பழைய ராமதாஸாக இருந்திருந்தால்...’ என்று ராமதாஸ் ஆவேசப்பட்டார். அன்புமணியோ, ‘சிகரெட் மட்டும் இல்லாதிருந்தால், இன்னும் ஸ்டைலாக இருப்பீர்கள்’ என்று மென்மையாக ட்வீட் செய்தார்.

நடிகர் சந்தானத்தின் தந்தை மரணம் அடைந்தபோது, அவரது வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொன்னார் அன்புமணி. பிறகு, கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் சந்தானத்துக்கும் இன்னொரு நபருக்கும் பிரச்னை ஏற்பட்டபோது, சந்தானத்துக்கு ஆதரவாக பா.ம.க-வினர் களமிறங்கினர். அப்போதே ‘நடிகர் சந்தானம் பா.ம.க-வில் இணையப்போகிறார்’ என்று செய்தி பரவியது. ஆனால், ‘கட்சியில் இணைவது இப்போது வேண்டாம். என்றாலும் நான் உங்கள் கூடவேதான் இருப்பேன்’ என்று அன்புமணியிடம் சந்தானம் கூறியிருக்கிறார்.

பிரபல நடிகர்கள் சிலரை பா.ம.க பக்கம் இழுப்பதற்கு இரண்டு நிர்வாகிகளுக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளார் அன்புமணி. அதன் தொடர்ச்சியாகத்தான், நடிகர் ரஞ்சித் செப்டம்பர் 18-ம் தேதி தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து ராமதாஸைச் சந்தித்துக் கட்சியில் இணைந்தார்’’ என்றார்கள் அவர்கள்.

நடிகர்களின் வரவு, பா.ம.க வளர்ச்சிக்குக் கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- ஜெ.முருகன்
படம்: தே.சிலம்பரசன்