தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வீட்டில் வேலை செய்த பெண், அமைச்சர் வீட்டின் முன்பு அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி வடக்கு வீதியில் அமைச்சர் ஆர்.காமராஜின் வீடு உள்ளது. செப்டம்பர் 16-ம் தேதி, வீட்டில் அமைச்சர் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ராணி என்ற பெண், அமைச்சரைப் பற்றித் தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர், மண்ணைத் தூற்றிச் சாபம் விட்டார். அப்போது பிரபாகர் என்ற செக்யூரிட்டி, அந்தப் பெண்ணைப் பிடித்து இழுத்து அடித்தார் என்று நடந்த சம்பவத்தை நம்மிடம் விவரித்தார்கள் அந்தப் பகுதி மக்கள்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ராணி மீது போலீஸில் புகார் அளித்தார் அமைச்சரின் மேனேஜர் ஹரிபிரசாத். இவர் அளித்த புகார் மனுவில், “இங்கு ஏன் சத்தம் போடுகிறீர்கள் என ராணியிடம் கேட்டேன். அதற்கு அந்தப் பெண், ‘அமைச்சர்கிட்ட வேலை பார்த்தா... நீ பெரிய ஆளா?’ என்று கேட்டதுடன், என்னைச் செருப்பால் அடித்துத் தகாத வார்த்தைகளால் திட்டினார். என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டிக் கல்லால் தாக்கினார்’’ என்று சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து ராணியைக் கைது செய்த போலீஸார், ராணி மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து திருவாரூரில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

இந்த விவகாரம் குறித்து ராணிக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். “மன்னார்குடி மேல இரண்டாம் தெருவில் ராணி வசிக்கிறார். இவர், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர். அமைச்சர் காமராஜின் வீட்டில் முன்பு வேலை செய்துவந்த ராணி, பின்னர் வேலையிலிருந்து நின்றுவிட்டார். ராணியின் மகன் ஜான், அமைச்சராக காமராஜ் பொறுப்பேற்றது தொடங்கி மூன்று வருடங்களுக்கு மேல் அவரிடம் டிரைவராகப் பணிபுரிந்தார். அமைச்சருக்கு எல்லாமுமாகவும் ஜான் இருந்துள்ளார். அமைச்சரின் நெருக்கத்தால் நிறையச் சம்பாதித்து செட்டில் ஆனார்.

தாய் ராணிக்கும் மகன் ஜானுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அமைச்சர் காமராஜ்தான் அவர்களைச் சமாதானம் செய்து வைப்பார். அந்த அளவுக்கு அமைச்சருக்கு ராணியின் குடும்பம் அமைச்சருக்கு நெருக்கம். ஒரு கட்டத்தில் வேலையை விட்டு நின்ற ஜான், தன் மனைவியை அழைத்துக்கொண்டு பட்டுக்கோட்டைக்குக் குடிபெயர்ந்துவிட்டார். ராணி மட்டும் அமைச்சர் வீட்டுக்கு வந்துசெல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அவர், தமக்கு அரசு வேலை வாங்கித்தரும்படி அமைச்சரிடம் பல முறை மனு கொடுத்துள்ளார். எதுவும் நடக்கவில்லை. இதற்கிடையே அங்கன்வாடி பணியாளர் பணிக்குச் சிலரை அமைச்சரிடம் ராணி சிபாரிசு செய்திருக்கிறார். அதையும் அமைச்சர் பொருட்படுத்தவில்லை. அந்த ஆத்திரத்தில்தான் ராணி இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறார்” என்கிறார்கள்.

இந்த விஷயத்தில் அதிரடித் திருப்பமாக, ராணிக்கு ஆதரவாக தினகரன் டீம் களம் இறங்கியுள்ளது. தன் சொந்த ஊரில் தனக்கு எதிராக அரசியல் செய்யும் அமைச்சர் காமராஜுக்கு இந்த விஷயத்தை வைத்து நெருக்கடி கொடுக்க டி.டி.வி.தினகரன் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ராணியை ஜாமீனில் எடுக்க அ.ம.மு.க வழக்கறிஞர் லெனின் முயற்சி செய்கிறார். அவரிடம் பேசினோம், “வேலை வாங்கித் தருமாறு கேட்பதற்காக, அமைச்சர் காமராஜைச் சந்திக்க ராணி சென்றிருக்கிறார். அப்போது, ‘இந்தப் பொம்பளையை யார் உள்ளே விட்டது’ என்று ராணியை அமைச்சர் திட்டியிருக்கிறார். கோபமான ராணி, ‘நீங்க வரச்சொல்லித்தானே வந்தேன்’ என்று சொல்லிவிட்டு, அமைச்சர் காமராஜைத் திட்டியுள்ளார். அதனால், அமைச்சரின் ஆட்கள் ராணியைச் செருப்பால் அடித்துள்ளனர். எல்லாவற்றையும் அவர்கள் செய்துவிட்டு, ராணி மீது புகார் கொடுத்துள்ளனர்” என்றார்.

“பத்து வருடங்களுக்கு மேலாக அமைச்சருக்கு என்னைத் தெரியும். எனக்கு அடிக்கடி போன் செய்து பேசுவார். மெஸேஜ் அனுப்புவார். அந்த அறிமுகத்தில்தான் என் மகனை அமைச்சரிடம் டிரைவராக வேலைக்குச் சேர்த்துவிட்டேன். எனக்கும் வேலை வாங்கித்தருவதாகக் கூறியவர், பின்னர் அலையவிட்டார். இதைக் கேட்பதற்காகச் சென்ற என்னை, அவரின் ஆதரவாளர்களை வைத்துக் கடுமையாகத் தாக்கினார்’’ எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் ராணி புலம்பியபடி இருக்கிறாராம்.

இது குறித்து அமைச்சரின் மேனேஜர் ஹரிபிரசாத்திடம் பேசினோம், “அமைச்சர் வீட்டின் முன்பு எதுவுமே நடக்கவில்லை. ராணியிடம் பேசிச் சமாதானம் செய்து விட்டோம்” என்று கூறி இணைப்பைத் துண்டித்தார். அமைச்சர் காமராஜ் தரப்பிடம் விளக்கம் கேட்டபோது, “சென்னையாக இருந்தாலும், மன்னார்குடியாக இருந்தாலும் அமைச்சர் வீட்டுக்கு வரும் அனைவருக்கும் தேனீர் மற்றும் உணவு கொடுத்து உபசரித்து மரியாதையுடன் நடத்துவதுதான் வழக்கம். அமைச்சர் வீட்டில் அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. வெளியில் ஏதேனும் நடந்திருந்தால் அதற்கும் அமைச்சருக்கும் சம்பந்தமில்லை. ராணி என்பவரின் மகன் ஜான், சிறிது காலம் அமைச்சரிடம் டிரைவராகப் பணியாற்றியது உண்மை. மற்றபடி ராணி, அரசு வேலை கேட்டோ, யாருக்கேனும் சிபாரிசு கேட்டோ அமைச்சரை அணுகியதில்லை. அவர் சொல்வது எல்லாமே அடிப்படை இல்லாத புகார்கள். அரசியல் ஆதாயத்திற்காகச் சிலர் வேண்டுமென்றே அமைச்சர் பெயருக்குக் களங்கம் கற்பிக்க முயற்சி செய்கிறார்கள்” என்றனர்.

- கே.குணசீலன், மு.இராகவன்