Published:Updated:

``கோயிலும் சிலையும்தான் காரணம்!’’ பா.ஜ.க-வுக்குள் கடும் புகைச்சல்

``கோயிலும் சிலையும்தான் காரணம்!’’ பா.ஜ.க-வுக்குள் கடும் புகைச்சல்
``கோயிலும் சிலையும்தான் காரணம்!’’ பா.ஜ.க-வுக்குள் கடும் புகைச்சல்

மாநிலத்தை மேம்படுத்துவதை மறந்துவிட்டு ராமர் கோயில் கட்ட அலைந்தோம். அதற்கான விலையை இப்போது கொடுத்திருப்பதாக பாரதிய ஜனதா கட்சி எம்.பி சஞ்சய் ஹக்டே குற்றம் சாட்டியுள்ளார். 

வட மாநிலத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைத் தழுவியது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2003-ம் ஆண்டிலிருந்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. இந்த மாநிலத்திலும் பாரதிய ஜனதா ஆட்சியை இழந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் ஏற்பட்ட தோல்வி, கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி சஞ்சய் ஹக்டே வெளிப்படையாகவே பாரதிய ஜனதா தலைமைக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளார்.  

``சத்தீஸ்கரிலும் ராஜஸ்தானிலும் தோல்வி எதிர்பார்த்ததுதான். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் தோல்வியை எதிர்பார்க்கவில்லை.  மாநிலத்தை மேம்படுத்துவதை மறந்துவிட்டு ராமர் கோயில் கட்ட அலைந்தோம். 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினார். சிலை அமைப்பதிலும், ஊர்களுக்குப் பெயரை மாற்றுவதிலும் கவனத்தை செலுத்தினோம். நாடு முழுவதும் விவசாயிகள் கடன் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டிருக்க, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் ராமர் கோயில் கட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தன. விவசாயிகளைத் தவிக்கவிட்டு ரூ.3,600 கோடியில் சிலை எழுப்பினார்கள். ஆதித்யநாத்தை பிரசாரத்துக்குக் களம் இறங்கினார்கள். அவரை ஸ்டாராகக் கருதினார்கள். ஆனால், இந்துக்கள் ஓட்டு கிடைக்கவில்லை'' என்று சஞ்சய் ஹக்டே குற்றம்சாட்டியுள்ளார். 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர் சஞ்சய் ஹக்டே!