சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, சிறைத்துறை டி.ஐ.ஜி-யான ரூபாவின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அரசியல் சந்திப்புகளை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, தன் குடும்ப உறவுகளை மட்டுமே சந்தித்துவந்தார். கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைந்த பின், சசிகலாவுக்கு நெருக்கடிகள் குறைந்துள்ளன.

இதற்காகவே கர்நாடக முதல்வர் குமாரசாமியின் அரசியல் உதவியாளரான கொட்டிகரே மஞ்சுநாத் என்பவர், பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அவ்வப்போது வந்து சசிகலாவுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கிறார். ‘‘2006 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி தொகுதியை ஜெயலலிதா ஒதுக்கித் தரப் பரிந்துரை செய்தவர் சசிகலா. அந்த நன்றிக்கடன் தேவ கவுடாவின் மகன் குமாரசாமிக்கும் இருக்கிறது’’ என்கிறார்கள், கர்நாடக அரசியல் விமர்சகர்கள். செப்டம்பர் 19-ம் தேதி டி.டி.வி தினகரன், விவேக், டாக்டர் வெங்கடேஷ், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன், நடிகர் கருணாஸ், ஜான்பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன், ஜெயா டி.வி செய்தி ஆசிரியர் தில்லை, சசிகலாவின் கணவரான நடராஜனின் சகோதரர்கள் ராமச்சந்திரன் மற்றும் பழனிவேலு உள்ளிட்ட பலர் சசிகலாவைப் பார்க்க வந்தனர். சசிகலாவை தினகரன் சந்திக்க வரும்போதெல்லாம் ஜெயா டி.வி லைவ் யூனிட் பெங்களூரு வந்துவிடுகிறது.

பாம்பன் சுவாமிகள் கோயிலுக்கு வேண்டிக்கொண்டு மாலை போட்டிருப்பதால், பச்சை வேட்டியில் வந்திருந்தார் விவேக். தினகரனுக்கும் விவேக்குக்கும் மோதல் என வெளியில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், விவேக்கை இந்த கெட்டப்பில் பார்த்த தினகரன், ‘‘பச்சை வேட்டி உனக்கு அருமையா இருக்கு தம்பி’’ என்று சிரித்தபடி சொன்னார்.

ஜெயா டி.வி வரவுசெலவுக் கணக்குகளை விவேக் கொண்டுவந்திருந்தார். ஆட்சியில் இருந்தபோது வந்த வருமானத்தைவிட, இப்போது ஜெயா டி.வி அதிகம் வருமானம் ஈட்டியுள்ளது. இதற்காக விவேக்கைப் பாராட்டினாராம் சசிகலா. அதேசமயம், ‘ஜெயா டி.வி எங்கள் பொறுப்பில் இருந்தால் கட்சியை இன்னும் வேகமாக வளர்க்க முடியும்’ என்று தினகரனின் மனைவி அனுராதா கேட்டிருப்பதால், ஜெயா ப்ளஸ் சேனலை மட்டுமாவது அனுராதா பொறுப்பில் விடுவதற்கு பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம்.

சசிகலாவிடம் எடப்பாடி தரப்பு பற்றிக் கடுமையாக கருணாஸ் புகார் சொன்னாராம். அவருக்கு நம்பிக்கையூட்டும்படி பேசி அனுப்பியுள்ளார் சசிகலா. சிறை வளாகத்தை விட்டு வெளியே வந்த கருணாஸ், ஹெல்மெட் அணிந்தவாறு செய்தியாளர்களிடமிருந்து தப்பித்துச் சென்றார். சசிகலா சந்திப்பு லிஸ்ட்டில் இல்லாத ஒரு நபரை, நடராஜனின் தம்பி பழனிவேல் அழைத்து வந்தார். பெங்களூரு பிரிகேடு சாலையில் ஜுவல்லரி ஷாப் வைத்துள்ள பிரசாந்த் என்கிற இவர், ‘டெல்லி வரை எனக்குச் செல்வாக்கு இருக்கிறது’ என எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பாராம். ‘‘இவரைப் போய் நம்புகிறார்களே’’ எனச் சிறை வட்டாரத்தில் சிலர் பேசிக்கொள்வதைக் கேட்க முடிந்தது. தினகரன் பக்கம் வந்ததால் பதவி இழந்த 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். ‘‘அந்தத் தீர்ப்பில் நாம் ஜெயிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தீர்ப்புக்குப் பிறகு நம் பக்கம் வருவதற்கு நிறைய எம்.எல்.ஏ-க்கள் தயாராக இருக்கிறார்கள். அப்போது தமிழக அரசியலே மாறிவிடும்’’ என்று சசிகலாவிடம் சொன்ன தினகரன், யார் யார் வருவார்கள் என உத்தேசப் பட்டியல் ஒன்றையும் சொல்லியிருக்கிறார். இந்த சந்திப்புக்குப் பிறகு சசிகலாவின் உற்சாகம் கூடியிருக்கிறதாம்.

- எம்.வடிவேல், படங்கள்: வ.யஷ்வந்த்