Published:Updated:

ராமதாசை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் பந்த்!

ராமதாசை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் பந்த்!
ராமதாசை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் பந்த்!

புதுச்சேரி:  கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாசை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்பட்டது.

ராமதாசை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் பந்த்!

மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரி விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் கோ.க.மணி உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு திருச்சியில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமதாசை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் பந்த்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி இன்று புதுச்சேரியில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டதை பா.ம.க மற்றும் வன்னியர் சங்கங்கள் நடத்தின.

ராமதாசை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் பந்த்!

முழு அடைப்பு காரணமாக, எந்நேரமும் பரப்பரப்பாக காணப்படும் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அதிகாலையிலிருந்தே வெறிச்சோடி காணப்பட்டது. முக்கிய சாலைகளான காமராஜர் சாலை, 100 அடி ரோடு, கிழக்கு கடற்கரை சாலை, புதுச்சேரி-விழுப்புரம் மெயின் ரோடு அனைத்திலும் இதே நிலை தான். 

ராமதாசை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் பந்த்!

வணிக நிறுவனங்களுக்கு பெயர் போன நேரு வீதியும் ஆட்கள் நடமாட்டமில்லாமல் காணப்பட்டது. புதுச்சேரியில் உள்ள அனைத்து சிறிய மற்றும் பெரிய வணிகர்களும் தங்கள் கடைகளை அடைத்திருந்தனர். மாநிலம் முழுக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

##~~##
புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுப்பட்ட பா.ம.கவினர் 20 பேரையும், அண்ணா சாலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சில இடங்களில் சமூக விரோதிகளின் கல்வீச்சு சம்பவங்களும் நடந்து வருகின்றது.

மொத்தத்தில் முழு அடைப்பு போராட்டத்தினால் புதுச்சேரியில் முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நா.இள.அறவாழி

படங்கள்: ஜெ.முருகன்