Published:Updated:

காவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி?
காவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி?

காவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காவிரி வரலாற்றின் நிறைய பக்கங்கள் நீதிமன்றங்களால் நிரம்பிக் கிடக்கின்றன. காவிரி தண்ணீருக்கு தமிழகம் கண்ணீர் வடித்தற்குப் பின்னால், நடந்த சட்டப் போராட்டம் கால் நூற்றாண்டுக்கும் மேலானது. நடுவர் மன்றத்தில் தொடங்கிய ஓட்டம், காவிரி மேலாண்மை ஆணையத்தில் வந்து இப்போது நின்றிருக்கிறது. காவிரிக்காக நடந்த போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த சட்டப் போராட்டம் தனி அத்தியாயங்களைக் கொண்டது. காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட பிறகு அதற்கு முன்பு பின்பும் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உரிமைக் கேட்டு வாதாடி வந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தில் இந்த ஆண்டு பிப்ரவரியில் இறுதித் தீர்ப்பை எழுதிவிட்டது உச்ச நீதிமன்றம்.

காவிரி வழக்குக்காக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் நிறைய வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். அவர்களுக்கு கோடிகளில் கட்டணம் கொட்டி தரப்பட்டிருக்கிறது. 1991 முதல் 2018 வரையில் காவிரி வழக்கு தொடர்பாக ஒவ்வொரு வழக்கறிஞர்களுக்குத் தரப்பட்ட தொகை எவ்வளவு என்கிற விவரம் விகடனுக்கு பிரத்யோகமாக கிடைத்திருக்கிறது. ஆயிரத்தில் தொடங்கி கோடிகள் வரையில் ஒவ்வொரு வழக்கறிஞர்கள் பெற்ற தொகை விவரங்களைத் தாங்கி வருகிறது இந்த வார ஆனந்த விகடன் இதழ். காவிரிக்காக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மொத்தமாக எத்தனை கோடி செலவழித்திருக்கிறது என்கிற தகவலும் இந்தப் புலனாய்வுக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது. மக்களின் வரிப் பணம் வழக்கறிஞர்களுக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் போனது என விரிவாக அலசுகிறது கட்டுரை?

மொத்தமாகக் காவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி இருக்கும்? இந்த வார ஆனந்த விகடன் இதழ் வாங்கிப் படியுங்கள். அல்லது இணையத்தில் சென்று பாருங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு