Published:Updated:

“பா.ஜ.க. ஆட்சியில் திருப்தி இல்லை!”

“பா.ஜ.க. ஆட்சியில் திருப்தி இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“பா.ஜ.க. ஆட்சியில் திருப்தி இல்லை!”

“பா.ஜ.க. ஆட்சியில் திருப்தி இல்லை!”

“பா.ஜ.க. ஆட்சியில் திருப்தி இல்லை!”

“பா.ஜ.க. ஆட்சியில் திருப்தி இல்லை!”

Published:Updated:
“பா.ஜ.க. ஆட்சியில் திருப்தி இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“பா.ஜ.க. ஆட்சியில் திருப்தி இல்லை!”

மிழகத்தில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குப் ‘பிள்ளையார் சுழி’ போட்ட இயக்கம் என்ற பெருமை இந்து முன்னணிக்கு உண்டு!

“பா.ஜ.க. ஆட்சியில் திருப்தி இல்லை!”

செங்கோட்டையில் கலவரம், திருமயத்தில் தடையை மீறி ஊர்வலம், பெரியார் சிலைகள் அவமதிப்பு என, இந்த வருட விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் ஏற்படுத்திய வினைகள்... வினை தீர்க்கும் விநாயகரையே விக்கித்துப்போக வைத்துவிட்டன. இதுமட்டுமா, தமிழக பா.ஜ.க-வுக்கு நாளொரு அடி; பொழுதொரு காயம். எல்லாவற்றையும் பேசுவதற்காக இந்து முன்னணியின் அமைப்பாளர் ராமகோபாலனை சென்னையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்துப் பேசினேன்.

‘`செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது பிரச்னை ஏற்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதே..?’’


‘`நான் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருந்த வரையிலும், என்னுடைய அனுபவத்தில் தெரிந்துகொண்டதைச் சொல்கிறேன். சிறுபான்மையினர் எங்கெல்லாம் ஆதிக்கம் செலுத்து கிறார்களோ... அங்கெல்லாம் இதுபோன்ற கலவரங்கள் ஏற்படுகின்றன. இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் எந்தக் கலவரமும் ஏற்படுவதில்லை.’’

“பா.ஜ.க. ஆட்சியில் திருப்தி இல்லை!”



‘`தடையை மீறி ஊர்வலம், நீதிமன்ற அவமரியாதை, காலணி வீச்சு சம்பவங்கள் விநாயகர் ஊர்வலம் என்றாலே கலவரம் என்ற தொனியை ஏற்படுத்துகிறதே?’’


‘`தொனியைத்தானே ஏற்படுத்தி யிருக்கிறது... உண்மை இல்லையே! முஸ்லிம்களுக்கு சகிப்புத் தன்மை இல்லாததே இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம்.’’

‘`திருமயம் அருகே தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்தியதோடு, நீதிமன்றத்தையும் அவமரியாதையாகப் பேசிய ஹெச்.ராஜாவின் செய்கையை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?’’


‘`ஹெச்.ராஜா என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது. அதனால் நான் எப்படி இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லமுடியும்?’’

``தடையை மீறி ஊர்வலம் நடத்தியதாக, நீதிமன்றத்தை அவமதித்ததாக ஹெச்.ராஜாமீது வழக்கு பதியப்பட்டுள்ளதே..?’’

‘`தடையை யார், எங்கே போட்டார்கள்? தடை போட்டார்கள் வடை போட்டார்கள் என்று... (சிரிக்கிறார்)

“பா.ஜ.க. ஆட்சியில் திருப்தி இல்லை!”

மகாராஷ்டிராவில் எல்லாக் கிராமங்களுக்குள்ளும் விநாயகர் ஊர்வலம் செல்கிறது. வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் துர்கா பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. அங்கெல்லாம் வராத கலவரம் தமிழகத்தில் மட்டும் ஏன் வருகிறது? அதற்குக் காரணம் இங்குள்ள திராவிடக் கட்சிகள்தான்.’’

‘`செங்கோட்டையில் நடைபெற்ற கலவரத்துக்கும் திராவிடக் கட்சிகள்தான் காரணம் என்று சொல்கிறீர்களா?’’


‘`கண்டிப்பாக... இந்தத் திராவிடக் கட்சியினர்தாம் முஸ்லிம்களைத் தூண்டி விடுகிறார்கள். திராவிடர் கழகத்தினரும் முஸ்லிம்களும் எங்கு அதிகமாக இருக்கிறார்களோ அங்குதான் கலவரம் நடக்கிறது.’’

‘`இந்தக் குற்றச்சாட்டுக்கு ஏதேனும் ஆதாரம் வைத்திருக்கிறீர்களா?’’


‘`எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்டுக் கொண்டிருந்தால் நான் என்ன செய்வது? என்னிடம் அப்படி எதுவும் இல்லை. நான் ஏற்கெனவே சுற்றுப்பயணம் சென்று கொண்டிருந்த வகையில் என்னுடைய அனுபவத்தைச் சொல்கிறேன்... அவ்வளவுதான்!’’

‘`சாதாரணமாக, கோயில் ஊர்வலங்கள், திருவிழாத் தேர் ஆகியவை எல்லா மதத்தினர் வசிக்கும் தெருக்களில் போகும்போது எல்லாம் கலவரம் வருவதில்லை. தமிழகப் பண்டிகைகளில் எல்லாம் வராத கலவரம், வடநாட்டுப் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியின்போது மட்டும் வருவதென்பது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்கிறார்களே?’’

‘`(கோபத்துடன்) ஆமாம்... அதற்காகத் தான் நடத்துகிறோம் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

இந்து முன்னணி, அரசியல் கட்சி கிடையாது. எனவே, நாங்கள் வடநாட்டுப் பண்டிகையா... தென்னாட்டுப் பண்டிகையா என்றெல்லாம் ஒருபோதும் பார்ப்பதில்லை. ஆனால், அப்படிப் பார்ப்பதாக யாரேனும் சொல்லிக்கொண்டிருந்தால், அவர்களுக்கு எங்கள் பதில்... ‘ஆமாம்... நாங்கள் அப்படித்தான் பார்க்கிறோம். அரசியல் லாபத்துக்காகத்தான் செய்கிறோம்’ என்றே வைத்துக்கொள்ளுங்களேன்.’’

‘`தடையை மீறி விநாயகர் ஊர்வலங்களை நடத்திக்காட்டும் இந்து முன்னணி, சேரிப் பகுதிக்குள் வராத சாமி ஊர்வலங்களுக்கு எதிராகப் போராட்டம் ஏதேனும் நடத்தியிருக்கிறதா?’’

‘`போராட்டம் நடத்தித் தீருகிற பிரச்னையல்ல இது. நாங்கள் எல்லாத் தெருக்களிலும் ஊர்வலம் போகிறோம். இந்தத் தெருவுக்குள் போகக்கூடாது, அந்தத் தெருவுக்குள் போகக்கூடாது என்று யாராவது சொன்னால், அதையெல்லாம் நாங்கள் நம்புவதில்லை.

மூன்று வருடங்களுக்கு முன்புகூட நான், ஹரிஜன மக்கள் நிறைந்திருக்கும் பகுதிக்குச் சென்றுதான் சாமி கும்பிட்டேன்.’’

‘`இந்து மதத்திலுள்ள சாதிய ஏற்றத்  தாழ்வுகளைக் களைய இந்து முன்னணி என்ன நடவடிக்கை எடுத்துவருகிறது?’’

‘`சாதிப் பாகுபாடு என்பது நாள்பட்ட வியாதி. இதை உடனடியாக ஒழித்துவிட முடியாது. ஹரிஜன மக்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். எனவே, அவர் களையும் சாமி கும்பிடக் கோயிலுக்குள் வரச் சொல்லி அழைக்கிறோம். அந்த மக்கள் பகுதிக்கே சென்று நாங்களும் சாமி கும்பிடுகிறோம்.

பத்து வருடங்களுக்கு முன்புகூட வந்தவாசியில் ஒரு ஹரிஜன வீட்டில்தான் தங்கியிருந்து சாப்பிட்டேன். அப்போது அங்கிருந்த திருமாவளவன் கட்சியினர் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்களை அங்கிருந்த பெண்களே விரட்டியடித்துவிட்டனர்.’’

‘` ‘மனுதர்மம்’ சொல்லும் சாதிப் பிரிவினையை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?’’

‘`மனுதர்மத்தில் சாதிப் பிரிவினை இருப்பதாக யார் சொன்னார்கள்? அப்படி இருப்பதாகச் சொல்லும் ஒரு புத்தகத்தை எனக்கு வாங்கித் தாருங்களேன்...’’

‘`மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி வைத்திருக்கும் இந்து மதத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று பகுத்தறிவாளர்கள் கேட்கிறார்களே?’’

‘`வேண்டாம்... ஏற்றுக்கொள்ள வேண்டாம். யாரையும் ஏற்றுக்கொள்ளச் சொல்லி நாங்கள் கட்டாயப்படுத்த வில்லையே?

திராவிடக் கட்சியினர் வரட்டும், வராமலேயே இருக்கட்டும். நாங்கள் எங்கள் உரிமையைக் கேட்கிறோம். அவ்வளவுதான்.’’

“பா.ஜ.க. ஆட்சியில் திருப்தி இல்லை!”



‘`சாதிய ஏற்றத்தாழ்வுகள்தானே மதமாற்றத்துக்கும் முக்கியக் காரணமாக இருக்கின்றன?’’

‘`மக்கள் மதம் மாறுவதற்கு அது காரணமல்ல... துட்டு கொடுப்பதால்தான் மதம் மாறுகிறார்கள்.

கிறிஸ்தவ மத மாற்றத்துக்காகவே அமெரிக்காவிலிருந்து இருபத்துமூன்றாயிரம் கோடி ரூபாய் பாரத நாட்டுக்குள் வந்திருக்கிறது. வெளிப்பார்வைக்கு இது தெரியாது.’’

‘`இந்து மதத்திலுள்ள சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்கள், சமத்துவம் தேடி மாற்று மதங்களுக்குச் செல்வது பெரும்பான்மையாக இருக்கிறதே?’’


‘`மாற்று மதம் என்று சொல்லாதீர்கள். அவை வேற்று மதம். அந்த வேற்று மதங்களிலும் சாதியப் பாகுபாடுகள் இருக்கின்றன என்பதற்கு 100 ஆதாரங்களை என்னால் சொல்ல முடியும். ஆனாலும் நான் அதைப் பெரிதுபடுத்தவில்லை.

மற்ற மதங்களில் சாதி இருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றி எனக்கென்ன கவலை? அதையெல்லாம் நான் சொல்லிக் கொண்டிருந்தால், ‘உனக்கு வேற வேலை இல்லையா?’ என்று கேட்பார்கள். அதனால், எதைப்பற்றியும் நான் சொல்வதில்லை!’’

‘` ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’, ‘தமிழில் வழிபாட்டு உரிமை’, ‘சாதி மறுப்புத் திருமணம்’ ஆகியவற்றை வரவேற்கிறீர்களா?’’

‘`கண்டிப்பாக வரவேற்கிறேன்.’’

‘`தற்போதைய காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அமர்ந்திருந்தாரே..?’’


‘`இல்லை... அந்தச் சமயம் அவர் ஜெபம் செய்துகொண்டிருந்தார். தேசிய கீதத்தின்போது எழுந்து நின்றாரே!’’

‘`கர்நாடக லிங்காயத்துகள் வழியில், ‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ என்று தமிழகத்திலும் அய்யா வழி சமயத்தவர்கள் சொல்கிறார்களே...?’’

‘`இந்து என்பது மதமே அல்ல; தர்மம்!

அவரவர் கருத்தைச் சொல்வதற்கு உரிமை இருக்கிறது. அந்தவகையில், அவர்களது கருத்தில் நான் தலையிட முடியாது! ஆனால், பத்துக் குச்சிகள் ஒன்றாக இருக்கும்போதுதான் பலம்; தனித்தனிக் குச்சிகளாகப் பிரிந்துபோனால், எளிதில் உடைத்துவிட முடியும் என்பது பலவீனம்!’’

‘`பசுக்களைப் பாதுகாக்கப் போராட்டம் நடத்துகிற இந்து முன்னணி, பசுவின் மாமிசம் வைத்திருந்ததாகக்கூறி அடித்துக் கொல்லப்படும் அப்பாவி மக்களைக் காக்கப் போராட்டம் நடத்தாதது ஏன்?’’

‘`யார் அப்படிச் செய்கிறார்களோ... அவர்களிடம்தான் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும். ஊர் முழுக்க நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் கண்டித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தால், இங்கே வேலை எதுவும் நடக்காது.

இந்த மாதிரியான கொடூரங்கள் நடக்கக்கூடாது என்பது நியாயம்தான். அது தப்பு; அதை நான் ஒப்புக்கொள்ளவும் இல்லை. ஆனால், ஏன் இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு மதத்தினருக்கும் புனிதமானவை என்று சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைத் தொடும்போது டென்ஷன் ஆவதென்பது இயற்கைதான்!’’

‘`மத்திய பா.ஜ.க ஆட்சியின் செயல்பாடுகள் உங்களுக்கு முழுத் திருப்தியைத் தருகிறதா?’’

‘`இல்லை! எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் எல்லோருடைய விருப்பங்களையும் பூர்த்தி செய்யமுடியாது.’’

‘`மாட்டுக்கறி பிரச்னை, சம்ஸ்கிருதத் திணிப்பு  எனப் பா.ஜ.க மீது வைக்கப்படும் மதவாதக் குற்றச்சாட்டுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’


‘`முதலாவதாக, நான் அரசியல்வாதி இல்லை. அடுத்து, ‘அரசியல் எப்படி இருக்க வேண்டும்’ என்று நான் எதற்காகச் சொல்ல வேண்டும்? அல்லது, அப்படி நான் சொல்லித்தான் அவர்கள் கேட்கப்போகிறார்களா என்ன? இந்து தர்மத்தைக் காப்பதற்காக இயக்கம் நடத்திக்கொண்டிருக்கும் சாமானியன் நான்!’’

‘`கோயில் நிர்வாகத்தை இந்துக்களிடமே ஒப்படைத்துவிட வேண்டும் என்கிறீர்களே... அப்படிச் செய்தால், ஊழல் இன்னும் அதிகரிக்கத்தானே செய்யும்?’’


‘`எல்லா இடங்களிலும் தவறு நடக்கும். தவறு செய்யாத ஆளே கிடையாது. தனி மனிதக் கொள்ளையைத் தடுப்பதாகச் சொல்லித்தான் அறநிலையத்துறையை பிரிட்டிஷார் கொண்டுவந்தனர். ஆனாலும் கொள்ளை மட்டும் குறையவே இல்லை.”

‘`தமிழகத்தில், தாமரை மலருமா?’’

‘`இந்தக் கேள்வியை, தமிழிசை சௌந்தர்ராஜனிடமே நான் கேட்டேன். ‘தாமரை மலரும் என்ற நம்பிக்கையில்தான் சொல்கிறோம்’ என்றார்.’’

த.கதிரவன் - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்