தமிழகத்தையே ஆட்சி செய்வது கொங்கு மண்டலம்தான். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவருக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரும்தான் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்படி கொங்கு மண்டலத்தில் ஆளும்கட்சி பவர்ஃபுல்லாக வலம் வரும் நிலையில், அதே கொங்கு மண்டலத்தில் தனக்கென ஒரு பெரிய அரசியல் செல்வாக்கை உருவாக்கும் முயற்சியைச் சத்தமின்றி மேற்கொண்டுவருகிறார் டி.டி.வி.தினகரன்.

கொங்கு மண்டலம் எப்போதுமே அ.தி.மு.க-வின் கோட்டை. 2016 தேர்தலில் தி.மு.க ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்ததற்கு, கொங்கு மண்டலத்தில் கிடைத்த தோல்வியே முக்கியமான காரணம். ‘கொங்கு மண்டலத்தில் பாரம்பர்யமாக இருக்கும் செல்வாக்கை அ.தி.மு.க வசப்படுத்துமா, அல்லது தினகரனின் அ.ம.மு.க கைப்பற்றுமா’ என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அ.ம.மு.க சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு தினகரன் சென்றுவந்தாலும், கொங்கு மண்டலத்தில் வலுவாகக் காலூன்ற வேண்டும் என்று அவர் முனைப்பு காட்டுகிறார். அந்தவகையில், அமைச்சர் வேலுமணியை எதிர்த்துக் கோவையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, செந்தில் பாலாஜியை வைத்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து மேற்கு மண்டலத்தில் அதிகளவில் விசிட் அடிப்பது என்று தினகரன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். கொங்கு வேளாள சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் கொடுத்திருக்கிறார்.

இன்னொரு பக்கம், கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க எதிர்ப்பு மனநிலையில் உள்ள சிறு சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைப்பதிலும் தினகரன் இறங்கியுள்ளார். கொங்கு மண்டலத்தில் கணிசமான எண்ணிக்கையில் வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்தினர் உள்ளனர். இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜ் கவுண்டர் என்பவர், கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நலச் சங்கத்தின் மாநாட்டை சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் நடத்தினார். அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தினகரன், “வரும் தேர்தலில் உங்கள் பிரதிநிதியான ராஜ் கவுண்டருக்கு கேட்கிற தொகுதி கொடுக்கப்படும். அ.ம.மு.க-வினர் உடனிருந்து அவரை வெற்றிபெறச் செய்து அமைச்சராக்குவார்கள். மேலும், வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்திற்கு எங்கள் ஆட்சியில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்” என வாக்குறுதிகளை அள்ளிவீசி, அந்தச் சமுதாயத்தினரை குஷிப்படுத்தினார்.

இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில், ‘மாநில அருந்ததியர் சமுதாய அரசியல் எழுச்சி மாநாடு’ ஈரோட்டில் செப்டம்பர் 30-ம் தேதி நடக்கிறது. இதில், தினகரன் பங்கேற்கவுள்ளார். மேற்கு மண்டலத்தில் அருந்ததியர் சமுதாயத்தினர் சுமார் 60 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள், 62 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கக் கூடியவர்கள். இந்த வாக்கு வங்கியைக் கவரும் நோக்கில், மாநாட்டுக்கு வருவதாக தினகரன் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இந்த மாநாட்டைப் பிரமாண்டமாக நடத்தவும் அ.ம.மு.க-வினர் எல்லா வகையிலும் உதவியிருக்கிறார்களாம்.

கொங்கு மண்டலத்தில் முறையான பிரதிநிதித்துவம் கிடைக்காத பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பட்டியலை எடுத்து, அவர்களை அ.ம.மு.க-வில் இணைக்கும் ஆபரேஷனையும் தினகரன் ஆரம்பித்துள்ளாராம்.

- நவீன் இளங்கோவன்
படம்: ரமேஷ் கந்தசாமி