மாநிலத்தையே கொந்தளிக்க வைக்கும் கருத்துகளை உதிர்த்தாலும், சிலர் ஜாலியாக வெளியே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு சாமானியன் கோஷம் போட்டாலே ‘ஆன்டி இண்டியன்’ முத்திரை குத்தி உள்ளே தள்ளுகிறார்கள். இந்த முரண்பாடு பலரைக் குழம்ப வைத்துள்ளது. அவர்களுக்குத் தெளிவு தருவதற்காக, சட்டம் யார் மேலெல்லாம் தன் கடமையைச் செய்யும், யாருக்கெல்லாம் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதை ஆராய்ந்து தயாரித்த லிஸ்ட் இது:

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான மாநிலக் கட்சிகள் உள்ளன. அவற்றின் உறுப்பினர்கள் யாருக்கும் கருத்து சொல்லும் உரிமை இல்லை. தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு. அதுவும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்குக் கிடையாது. எஞ்சியவர்கள் தாராளமாகத் தங்கள் கருத்துகளைச் சொல்லலாம்.

குறைந்தபட்சம் ஆயிரக்கணக்கான மீம்களாவது உங்களைப் பற்றி வந்திருக்கவேண்டும். ஆனால், அவை உங்களைத் துளியும் பாராட்டுவதாக இருக்கக் கூடாது. கலாய் மீம்களை அதிகளவில் வாங்குபவர்கள் கருத்து சொல்வதற்குத் தகுதியானவர்கள் ஆகிறார்கள்.

மக்கள் செல்வாக்கு சுத்தமாக இருக்கக் கூடாது. உங்கள் பின்னால் நான்கு பேர் அணிவகுத்தால்கூட நீங்கள் கருத்து சொல்லும் தகுதியை இழந்துவிடுவீர்கள். சிம்பிளாகச் சொன்னால், இருப்பதிலேயே மொக்கையான சங்கத்தில் நடக்கும் எலெக்ஷனிலேயே உங்களுக்கு உங்களின் ஓட்டு தவிர எக்ஸ்ட்ரா ஓட்டு விழக்கூடாது.

‘தாமரை தமிழகத் தடாகங்களில் மலர்ந்துகொண்டே இருக்கும்’ - இந்த மந்திரத்தை நூறு தடவை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சொல்லும்போது சின்னதாகச் சிரிப்பு வந்தால்கூட நீங்கள் கருத்து சொல்லும் தகுதியை இழந்துவிடுவீர்கள். எனவே, கவனமாக இருங்கள். ஆல் தி பெஸ்ட்!

மத்திய அரசின் சார்பில் கருத்து சொல்லத் தகுதியானவர்கள் என்ற பட்டியல் அடிக்கடி வெளியிடப்படும். அதில் நீங்கள் ஃபர்ஸ்ட் க்ளாஸில் ரேங்க் வாங்கினால், அதன்பின் வண்டி வண்டியாகக் கருத்து சொல்லலாம். இல்லையெனில், அடுத்தாண்டு ரேங்க் பட்டியல் வரை காத்திருக்க வேண்டும். மிக முக்கியம்: தேர்வெழுத நீங்கள் ஆதார் கார்டை இணைக்கவேண்டும்.