எடப்பாடி பழனிசாமியும் மு.க.ஸ்டாலினும் நேரில் சந்தித்துக் கொண்டால்கூட நன்றாகப் பேசிக்கொள்வார்கள் போல... புதுக்கோட்டையில் அ.தி.மு.க-வினரும் தி.மு.க-வினரும் முரட்டு மோதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாவட்டத்தையே தன் இரும்புப்பிடிக்குள் வைத்திருக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரே இதற்குக் காரணம். புதுக்கோட்டையில் டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டம் நடத்தமுடியாதபடி விஜயபாஸ்கர் தடை போட்டார். நீதிமன்ற ஆணை பெற்றுக் கூட்டம் நடத்திய தினகரன், தன் பேச்சில் விஜயபாஸ்கரை ‘குட்கா டாக்டர்’ என்று வறுத்தெடுத்தார். ‘‘ஒரு லட்சம் பேரைக் கூட்டிப் போட்டிக்கூட்டம் நடத்திச் சிலரின் முகத்திரையைக் கிழிப்பேன்’’ என ஆவேசமாகச் சொன்னார் விஜயபாஸ்கர்.

இந்நிலையில், ‘குட்கா ஊழலில் தொடர்புடைய விஜயபாஸ்கர் பதவிவிலக வேண்டும்’ என செப்டம்பர் 18-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பேசிய தி.மு.க நிர்வாகிகள், விஜயபாஸ்கருக்கு மிரட்டல் விடுத்ததாக போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. அரிமளம் ஒன்றிய தி.மு.க செயலாளர் ராமலிங்கம் கைது செய்யப்பட்டார். விராலிமலை ஒன்றியச் செயலாளர் தென்னலூர் பழனிசாமியை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. ராமலிங்கத்தின் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், பழனிசாமியின் பெட்ரோல் பங்க் ஆகியவற்றின்மீது அ.தி.மு.க-வினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதல்கள் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கடந்த ஒரு வாரமாகவே பரபரத்துக் கிடக்கிறது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் அ.தி.மு.க சார்பில் செப்டம்பர் 25-ம் தேதி நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தை, தினகரனுக்கும் ஸ்டாலினுக்கும் பதிலடி கொடுக்கும் கூட்டமாகவே மாற்றினார் விஜயபாஸ்கர். அன்றைய தினம், புதுக்கோட்டையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விஜயபாஸ்கரை வரவேற்று, ‘கம்பனுக்கு நிழல் தந்த சடையப்ப வள்ளலே! வருக!’ என வைக்கப்பட்ட கட்-அவுட் வைரலானது. இக்கூட்டத்துக்கு ஆட்களை அ.தி.மு.க-வினர் திரட்டி வந்ததால், போக்குவரத்து நெரிசலில் புதுக்கோட்டை சிக்கித் தவித்தது.

மாலை 6 மணியளவில் அ.தி.மு.க புதுக்கோட்டை நகரச் செயலாளர் பாஸ்கரன், எம்.எல்.ஏ ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் வைரமுத்து ஆகியோர் சகிதமாகப் பொதுக்கூட்டத்துக்கு வந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். முதலில் பேசிய நகரச் செயலாளர் பாஸ்கரன், “நமக்கு என்ன வேண்டும் என்பதைத் தேடித் தேடிச் செய்யும் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனதைக் கஷ்டப்படுத்தாதீங்க. கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோர் சந்திக்காததை விடவும் பெரிய சோதனைகளைச் சுமந்த புன்னகை மன்னன் அவர். புதுக்கோட்டையில் தி.மு.க ஆர்ப்பாட்டத்தை நல்லமுறையில் நடத்தியிருக்கிறீர்கள் என்றால், எங்கள் கைகளை அமைச்சர் கட்டிப்போட்டுள்ளார். வேண்டாம்ணே, விட்டுடுங்க. இனியும் வேடிக்கை பார்க்க மாட்டோம். அம்மாவுக்குப் பிறகு இந்த ஆட்சியைக் காப்பாற்றியதில் விஜயபாஸ்கரின் பங்கு மிகமுக்கியமானது. நாமெல்லாம் கரைவேட்டி கட்டியிருப்பதற்கும், இரட்டை இலை காப்பாற்றப்பட்டதற்கும் இவர் முக்கிய காரணம்” என்றார் அதிரடியாக.

அடுத்து பேசிய விஜயபாஸ்கர், ‘‘சில மணி நேரங்களில் இவ்வளவுக் கூட்டத்தை நம்மால் கூட்ட முடிகிறது என்றால், அதுதான் புதுக்கோட்டை அ.தி.மு.க-வின் பலம். ஆனால், ஒரு மாதமாக இடம்தேடி கிடைக்காமல், கெஞ்சிக் கூத்தாடி நீதிமன்றத்தில் ஆணை வாங்கி, தமிழகம் முழுவதிலுமிருந்து பணம் கொடுத்து ஆட்களைத் திரட்டிவந்து, ஒரு முள்ளுக்காட்டில் கூட்டம் நடத்திய தினகரன்... விஜயபாஸ்கரை விமர்சனம் செய்கிறார். புதுக்கோட்டையில் விஜயபாஸ்கரை எதிர்த்துப் பேசினால்தான் இருப்பைக் காட்டமுடியும் என்பதால், தினகரன் அப்படிப் பேசிவிட்டுச் சென்றுள்ளார். அடுத்த தேர்தலில் தலைமையின் அனுமதியைப் பெற்று புதுக்கோட்டையில் நான் நிற்கிறேன்... தினகரனுக்கு நெஞ்சில் துணிவிருந்தால் என்னை எதிர்த்து நின்று ஜெயிக்கட்டும்’’ என்று சவால் விட்டார்.

குரல் இன்னும் உயர, ‘‘ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும், நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னையா விமர்சனம் செய்கிறீர்கள்? இனி, எல்லோருக்கும் இருக்கு குண்டு. ஒவ்வொன்றாக வெளியிடுவேன். 10 வருடங்கள் ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டுப் பதுங்கு குழியில் இருந்த தினகரன், பதவிவெறியுடன் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கிறார். 28 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி வழக்கில் சிக்கித் தவிக்கும் இவர், ஊழலைப் பற்றிப் பேசுகிறார்.

சாதி, மதங்களைக் கடந்து குடும்பமாகச் செயல்படும் கட்சி அ.தி.மு.க. ஆனால் தினகரன், ஸ்டாலின் குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித்தனியே கட்சி நடத்துகிறார்கள். இவர்கள் முதலில் குடும்பத்தைச் சரிசெய்துவிட்டு வந்து அரசியல் செய்யட்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரன், சசிகலா மேடத்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தவில்லையே? அவர் சசிகலா மேடத்தின் விசுவாசி அல்ல, சசிகலா புஷ்பாவின் விசுவாசி. தினகரனுக்கு வேலை பார்த்ததால்தான் எனக்கு இவ்வளவு பிரச்னை. இவரால்தான் இயேசுநாதர் சிலுவையைச் சுமப்பதைப் போல அனைத்தையும் நான் சுமக்கிறேன்.

நான் எல்லாவற்றுக்கும் தயாராகவே உள்ளேன். போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். பொதுவாழ்க்கையில் கொஞ்சம் வேகமாக இருந்தால் பிரச்னைதான். அதையும் சந்திக்கத் தயார். அரசியல் செய்கிறோம் என்கிற போர்வையில் எங்களை உரசிவிட்டுச் சென்றால், உரசிய இடத்தில் தீப்பொறி பறக்கும்’’ என எச்சரித்து முடித்தார்.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்