திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப் படவில்லை. அதற்குள்ளாகவே, இந்தத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களை முன்வைத்து அரசியல் சவடால்கள் ஆரம்பித்துவிட்டன. டிசம்பர் மாதத்தில் தேர்தலுக்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவதால், அரசியல் கட்சிகள் இந்தத் தொகுதிகளில் பரபரப்புடன் பணிகளைத் தொடங்கிவிட்டன. கருணாநிதி தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்ததால் வி.ஐ.பி தொகுதியாக மாறிப்போன திருவாரூர் தொகுதியைக் கைப்பற்ற, முக்கியக் கட்சிகளுக்குள் இப்போதே போட்டி தொடங்கியுள்ளது.

கருணாநிதி மறைந்த உடனேயே, திருவாரூரில் முதலில் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியவர்கள், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆரம்பத்திலேயே கட்சியில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்திய அவர்கள், குக்கர் சின்னத்தைத் தொகுதி முழுவதும் வரையத் தொடங்கினர். எங்கும் குக்கர் படம் போட்ட ஃப்ளெக்ஸ்கள் வைத்தனர். அ.ம.மு.க சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளராக மூன்று பெயர்கள் அடிபடுகின்றன. அதில், குடவாசல் ராஜேந்திரனுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம். இவர், 2011 தேர்தலில் திருவாரூரில் போட்டியிட்ட கருணாநிதியை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் நின்றவர்.

‘‘தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 72 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. நாங்கள் இதுவரை ஒரு லட்சம் உறுப்பினர்கள் வரை சேர்த்துவிட்டோம். அவர்கள் ஓட்டுப் போட்டாலே நாங்கள் ஜெயித்துவிடுவோம். எங்களுக்கும் தி.மு.க-வுக்கும்தான் நேரடிப் போட்டி. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அ.தி.மு.க-வினர் அராஜகம் செய்கின்றனர். சேந்தமங்கலம் பகுதியில் குக்கர் சின்னம் வரைவதற்கு வெள்ளை அடித்து வைத்திருந்தோம். அதில் அமைச்சர் ஆர்.காமராஜின் தூண்டுதலின் பேரில் அ.தி.மு.க-வினர் இரட்டை இலையை வரைந்தனர். நாங்கள் இரட்டை இலையை அழித்துவிட்டு குக்கரை வரைந்தோம். அமைச்சர் ஆர்.காமராஜ் அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்கள் நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போட்டுத் தேர்தல் பணி செய்யவிடாமல் தடுக்கிறார். இதையெல்லாம் தாண்டி நாங்கள் வெற்றி பெறப்போவது உறுதி’’ என்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள்.

தமிழக உணவுத் துறை அமைச்சரும் அ.தி.மு.க திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளருமான அமைச்சர் ஆர்.காமராஜ், கூத்தாநல்லூர் பகுதியிலிருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். அ.தி.மு.க சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளராகக் கடந்தத் தேர்தலில் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்ட பன்னீர்செல்வம், கூட்டுறவுப் பண்டகசாலை தலைவராக இருக்கும் கலியபெருமாள் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. கருணாநிதி எம்.எல்.ஏ-வாக இருந்ததால் திருவாரூர் தொகுதிக்கு அ.தி.மு.க அரசு எதையும் செய்யவில்லை என மக்கள் மத்தியில் பெரும் குறை இருக்கிறது. அதைப் போக்கவே ஆர்.காமராஜ் ரொம்பவே சிரமப்படுகிறார். கூத்தாநல்லூர் பகுதியில் மக்களைத் திரட்டிக் கூட்டம் போட்ட ஆர்.காமராஜ், ‘‘இந்தப் பகுதிக்கு நான் அதிகம் வந்தது கிடையாது. கருணாநிதி எம்.எல்.ஏ-வாக இருந்ததால் வராமல் இருந்தேன். இப்போது அப்படியில்லை, தனித்த அதிகாரம் உடையவனாக இருக்கிறேன். நான் அழைத்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓடோடி வருவார். உங்கள் குறைகள் என்னவென்று சொல்லுங்கள். அவை அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும்’’ என்றார். சொந்த மாவட்டத்தில் தினகரனுக்குப் பெரிய அடி கொடுக்க நினைக்கிறார் காமராஜ். கட்சிக்காரர்களை கரன்சி மழையில் நனையவைக்கத் தொடங்கியுள்ளதால், உற்்சாகத்தில் வலம் வருகிறார்கள் அ.தி.மு.க-வினர்.

கடந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க ஜெயித்த தொகுதி இது. அந்த மிதப்பு தி.மு.க-வினருக்கு இருந்ததால், ‘தேர்தல் அறிவிப்பு வரட்டும். அதன்பிறகு பணிகளைத் தொடங்கலாம்’ என சுணக்கமாக இருந்தனர். இப்போது அ.ம.மு.க மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளின் சுறுசுறுப்பைப் பார்த்து அவர்களும் பணிகளைத் தொடங்கி, உதயசூரியன் சின்னத்தை சுவர்களில் வரைகின்றனர். தி.மு.க-வின் தேர்தல் பணிகளுக்காக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூக்கு வந்த அவர், காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செய்துவிட்டு, நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார். பூத் வாரியாக புதிதாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எத்தனை பேர் எனக் கேட்டறிந்ததோடு, ‘‘தலைவரின் தொகுதியில் நாம் சுலபமாக வெற்றிபெற்றுவிடலாம். என்றாலும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. போட்டி பலமாக இருக்கிறது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்றாராம்.

வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின், திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் கலைவாணன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். ‘‘திருவாரூர் தேர்தல் தொடர்பாக ஸ்டாலினைச் சந்தித்து கலைவாணன் பேசினார். ‘எங்கள் குடும்பத்திலிருந்து யாரும் நிற்கப்போவதில்லை’ என ஸ்டாலின் கூறி அனுப்பியதாக பேச்சு நிலவுகிறது. கலைவாணனையோ, தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வெள்ளாளர் சமூகத்திலிருந்து ஒருவரையோ வேட்பாளராக நிறுத்தலாம் என்ற யோசனை தலைமைக்கு உள்ளது. இதற்கிடையில் தி.மு.க-வில் தன்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் இங்கே போட்டியிடும் விருப்பத்தில் அழகிரி இருக்கிறார். தலைவர் கலைஞர்தான் அழகிரியைக் கட்சியிலிருந்து நீக்கினார். ஸ்டாலின் நீக்கவில்லை. கட்சிக்கு எதிராக அழகிரி போட்டியிட்டால், அவரை படுமோசமாகத் தோற்க வைப்போம்’’ என்றனர்.

- கே.குணசீலன்
படங்கள்: க.சதீஷ்குமார்