Published:Updated:

எதிர்கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

 எதிர்கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
 எதிர்கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: பிரதமர் பதவி விலகக்கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று தெடங்கியதும் மக்களவையில் இன்று சரப்ஜித் சிங் விவகாரம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் பதவி விலக வேண்டும் போன்ற பிரச்னைகளை வலியுறுத்தி எதிர்கட்சிகள்  அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையிலும் இதே நிலைமையே காணப்பட்டது.இதையடுத்து இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், 12 மணிக்கு அவை மீண்டும் தொடங்கியதும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதே போல் மாநிலங்களவையும் பிற்பகல் 2.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.