Published:Updated:

`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்!’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு

`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்!’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு
`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்!’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் ஆதரவாளர்களுடன் சற்றுமுன் தி.மு.க-வில் இணைந்தார்.  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்கள் 2000 பேருடன் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து கட்சியில் இணைந்துகொண்டார்.  செந்தில் பாலாஜியின் இந்த முடிவால் டி.டி.வி.தினகரன் தரப்பைவிட எடப்பாடி பழனிசாமி தரப்பு மிகுந்த அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது. 

`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்!’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு

முலாம் பூசப்பட்ட போலி..

செந்தில் பாலாஜியை மறைமுகமாக விமர்சனம் செய்யும் வகையில் டி.டி.வி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், `சிலர் சுயநலத்துக்காகத் தலைமையை விட்டு விலகுவதும் மன்னிப்புக் கோரி இணைவதும் இயல்பான ஒன்றே.  துரோகிகளும், விரோதிகளும் அ.ம.மு.க-வின் வளர்ச்சியைத் தடுக்க முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அ.ம.மு.க-வில் யார் வருந்தப் போகிறார்கள்? 

அ.ம.மு.க-வில் இருந்து சில நபர்களோ, குழுவோ சுயநலனுக்காக விலகிச் செல்வதால் கட்சியே முடங்கிவிடும் என்று நினைப்பது பூனை கண் மூடினால் உலகம் இருண்டுவிடும் என்பது போன்றது.

`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்!’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு


 

அ.ம.மு.க-வை சீண்டிப்பார்ப்பது உயர் அழுத்த மின்சாரத்தைத் தொட்டு பார்ப்பதற்குச் சமம். நெல்மணிகளோடு சில களைகளும் சேர்ந்து வளர்ந்து விடுவது வழக்கமானது. ஒரு சிறு குழு விலகிச் செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. ஆல விருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சம் இல்லாமல் போய்விடுமா’ என்று குறிப்பிட்டிருந்தார்.  

தினகரன் ஆதரவாளரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செய்தி தொடர்பாளருமான வெற்றிவேல் இன்று தன் முகநூலில், செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவு பின்வருமாறு.. 

`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்!’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு


 

இறுதி அரசியல் அத்தியாயம்...

``கடந்த 50 ஆண்டுக்கால அரசியல் களத்தை புரட்டிப் பார்த்தால் அரவக்குறிச்சி தொகுதி என்பது பலரது அரசியல் வாழ்வை அஸ்தமனம் மட்டுமே செய்துள்ளது. ஆம், சதாசிவம், சென்னிமலை, ஜெகதீசன்,  கே.சி.பழனிச்சாமி, செந்தில்பாலாஜி போன்ற பல ஜாம்பவான்களின் அரசியல் வாழ்வையை நடுத்தெருவில் விட்டுள்ளது. அந்தப் தொகுதியில் ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அதுதான் அவரது இறுதி அரசியல் அத்தியாயம் என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே இதுவரை இருக்கிறது. இதோ "அரவக்குறிச்சி" தேர்தல் முடிவுகள் எத்தனை பேரை பலி வாங்கியுள்ளது பாரீர் .. 

1971- அப்துல் ஜப்பார் (முஸ்லிம் லீக்)-  OUT
1977. எஸ்.சதாசிவம் (காங்)-  OUT
1980- பிஎஸ்.சென்னிமலை (அ.தி.மு.க)-  OUT
1984- எஸ்.ஜெகதீசன் ( அ.தி.மு.க)-  OUT
1989- ராமசாமி (தி.மு.க) -  OUT
1991- மரியம்முள் அசியா(பெண்) அ.தி.மு.க -  OUT.
1996- முகமது இஸ்மாயில் (தி.மு.க) -  OUT
2001- லியாவுதீன் சேட் (அ.தி.மு.க)-  OUT
2006- கலீல்-உர்-ரஹ்மான் (தி.மு.க) -  OUT
2011- கே.சி.பழனிச்சாமி (தி.மு.க) -  OUT
2016- செந்தில் பாலாஜி (அ.தி.மு.க) -
அவர் மட்டும் என்ன விதிவிலக்கா??? காலம் பதில் சொல்லும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்!’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு


 

கடலில் கரைக்கும் பெருங்காயம் போல..

மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார் செந்தில் பாலாஜி குறித்து அளித்தப் பேட்டியில், `செந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைவது தி.மு.க-வின் பலவீனத்தைக் காட்டுகிறது. அவர் ஏற்கெனவே தி.மு.க-வில் இருந்து வந்தவர்தான். உண்மையான அ.தி.மு.க ரத்தம் உள்ளவர்கள் தி.மு.க-வில் இணைய வாய்ப்பு இல்லை. தி.மு.க-வில் இணைவது கடலில் கரைக்கும் பெருங்காயம் போல, அதனால் எந்த பயனும் இல்லை. தி.மு.க-வை நோக்கிச் செல்பவர்கள் ஒரு நாள் நட்சத்திரமாகத்தான் இருக்க முடியும். செந்தில் பாலாஜி தான் சென்றுள்ளார், அவருடன் இருந்த பலர் அ.தி.மு.க-வில் தான் உள்ளனர். எனவே, அ.தி.மு.க-வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

தினகரன் ஒரு எடுபடாத பிராண்டு, தி.மு.க ஒரு எடுபடாத பிராண்டு இரண்டாலும் ஒன்றும் புண்ணியம் இல்லை. வர இருக்கும் புயலால் மீனவர்களுக்குப் பாதிப்பும் இல்லை, ஆழ்கடக் மீனவர்கள் கரை திரும்பி விட்டனர், மீதம் உள்ளவர்களுக்கு அருகாமையில் இருக்கும் துறைமுகங்களுக்கு செல்ல அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தினகரன் ஹை ஓல்டேஜ் மின்கம்பி என்றால் அது அவருக்கே ஆபத்தானது. 230 ஓல்ட் மட்டுமே பயன்படுத்த பாதுகாப்பான ஒன்று. அவர் ஆபத்தான நிலையில் உள்ளார்” இவ்வாறு தினகரன், தி.மு.க, மற்றும் செந்தில் பாலாஜியை கரைத்துக்கொட்டினார். 

`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்!’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு


 

பாதை தவறிவிட்டார்..

‘அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  செந்தில் பாலாஜி பற்றி பேசுகையில்  `முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாதை தவறிவிட்டார் . பாதை தவறியதால் தான் டி.டி.வி.தினகரன் தற்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார்’ என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 
இப்படியாகச் செந்தில் பாலாஜி தி.மு.க பக்கம் சாய்ந்ததற்கு டிசைன் டிசைனான விமர்சித்து வருகிறது தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு.