‘‘ஆதார் இன்றி ஓர் அணுவும் அசையாது போலிருக்கிறது’’ என்றபடி உள்ளே நுழைந்த கழுகாரிடம், ‘‘ஆதார் கதை இருக்கட்டும்... ‘ஆதாரங்களுடன் தி.மு.க ஊழலை அம்பலப்படுத்துவேன்’ என்று சபதம் போட்டுள்ளாரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதைப்பற்றிச் சொல்லுங்கள்’’ என்றோம்.

‘‘அடுத்தடுத்து நிகழப்போகும் அதிரடி நிகழ்வுகளுக்கான துவக்கமே முதல்வரின் பேச்சு என்று குஷிபொங்கச் சொல்கின்றனர் அ.தி.மு.க தரப்பினர். தலைவர் பொறுப்புக்கு வரும்வரை அத்தனை ஆக்ரோஷமாக அ.தி.மு.க தரப்பின் மீது போர் தொடுக்காத மு.க.ஸ்டாலின், தலைவரானது முதல் பெரும் தலைவலியாகவே மாறிவிட்டார். அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார். நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு, நிலக்கரி முறைகேடு, உள்ளாட்சித் துறை டெண்டர் முறைகேடு, குட்கா வழக்கு என அவர் தினமும் வெளியிடும் அறிக்கைகள், அ.தி.மு.க அரசை ஆடிப்போக வைத்துள்ளன. இந்தக் கோபத்தில்தான், செப்டம்பர் 25-ம் தேதி சேலத்தில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உறுமினார். இதன்மூலமாக, அ.தி.மு.க-வும், பி.ஜே.பி-யும் மீண்டும் நெருங்க ஆரம்பித்துள்ளன.’’

‘‘கேட்கவே தலைசுற்றுகிறதே?’’

‘‘சமீபகாலமாகவே, அ.தி.மு.க மீது மத்தியில் ஆளும் பி.ஜே.பி கெடுபிடிகளைக் காட்டிக்கொண்டிருந்தது. அதற்கு ஏற்றபடி, அந்த ஆட்சிமீது ஊழல் புகார்களும் வரிசை கட்டின. அதனால், கூட்டணியை மாற்றி அமைக்கலாம் என்று தி.மு.க பக்கம் கொஞ்சம் கரிசனம் காட்ட ஆரம்பித்தது பி.ஜே.பி. தமிழகத்தில் இருக்கும் சில தலைகள் தடுத்தாலும், தமிழக ராஜகுரு அணை போட்டாலும், தி.மு.க பாசம் சமீபநாட்களாக டெல்லி பி.ஜே.பி-க்கு பெருக்கெடுத்து ஓடியது. இதன் தொடர்ச்சியாக ரெய்டுகள் அணிவகுக்க, பி.ஜே.பி மீது கோபத்தைக் காட்ட ஆரம்பித்தது அ.தி.மு.க.’’

‘‘அதுதான் தெரிந்த கதையாயிற்றே!’’

‘‘அவசரப்படாதீர். பி.ஜே.பி மீது எரிச்சலானவுடன் முக்கிய அதிகாரிகள் சிலருடன் ஆலோசனை செய்துள்ளார் எடப்பாடி. மாநில அரசின் கைகளில் இருக்கும் அதிகாரத்தை வைத்து, பி.ஜே.பி-க்கு எந்தெந்த வகைகளில் நெருக்கடி கொடுக்கலாம் என்று பேச்சுவந்துள்ளது. பி.ஜே.பி பிரமுகர்கள் சிலர் மீதுள்ள வழக்குகளைத் தோண்டியெடுக்கவும் திட்டம் தயாரானது. பி.ஜே.பி-யினர் சிலர் மீது சி.பி.சி.ஐ.டி மூலமாக வழக்கைப் பாய்ச்சவும் திட்டமிடப்பட்டது. இதை மோப்பம் பிடித்துவிட்ட டெல்லி மேலிடம், எடப்பாடி தரப்பிடம் பேசியுள்ளது. அதன்பிறகுதான், ரெய்டு வேகம் அடங்கியது.’’

‘‘நம்பும்படியாக இல்லையே.... எடப்பாடி தரப்பைப் பார்த்து பயப்படும் அளவுக்கா பி.ஜே.பி போய்விட்டது?’’

‘‘அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தமிழகத்தில் வலுவான கூட்டணி வேண்டும். அதற்காகத்தான் தி.மு.க-வின் தயவை நாடி நின்றது பி.ஜே.பி. ஆனால், தலைவரானது முதலே பி.ஜே.பி-க்கு எதிராக வெளிப்படையாக மு.க.ஸ்டாலின் முழங்குவது, பி.ஜே.பி-க்கு நிஜத்தைப் புரியவைத்துவிட்டது. எனவே, அ.தி.மு.க தரப்புக்கு கொஞ்சம்போல நெருக்கடி கொடுத்துவிட்டு, தற்போது தோளில் கைபோடும் நிலைக்கு வந்துள்ளது பி.ஜே.பி. இப்போது தி.மு.க-வின் இமேஜை காலி செய்வதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளனர்.’’

‘‘ம்!’’

‘‘ கடந்த வாரம் முதல்வரை அவரது வீட்டில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். அப்போது, ரொம்பவே புலம்பினராம் எடப்பாடி. ‘இப்படி எங்கள் கட்சிக்காரர்கள்மீது வன்மத்தோடு இறங்குவது வேதனையாக உள்ளது. நாங்கள் உங்களுக்கு இணக்கமாக செயல்படவே விரும்புகிறோம்’ என்றாராம். அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன், ‘என்னிடம் சொல்லி என்ன பலன்... சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லுங்கள். அந்த வெங்கடாசலபதி எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான்’ என்று சொன்னாராம்.’’

‘‘ஓ... துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவை திருப்பதியில் எடப்பாடி சந்தித்ததன் பின்னணி இதுதானா?’’

‘‘அதேதான். வெங்கய்யா நாயுடு செப்டம்பர் 24-ம் தேதி திருப்பதி வருவது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று. ஆனால், எடப்பாடி கேட்டதுமே, திருப்பதியில் அவரைச் சந்திக்க அப்பாயின்மென்ட் கொடுக்கப்பட்டுவிட்டது. மாலை ஐந்து மணிக்கு திருப்பதி சென்ற எடப்பாடி, கிருஷ்ணா கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்தார். வெங்கய்ய நாயுடுவை, எடப்பாடியும் அவரின் மகன் மிதுனும் தனிமையில் சந்தித்தனர். தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் அரை மணி நேரம் சந்திப்பு நிகழ்ந்தது. ‘ஆட்சிக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாம். தேர்தல் நேரத்தில் பி.ஜே.பி தரப்புக்கு வேண்டிய உதவிகளைச் செய்துதருகிறோம். இப்போது தி.மு.க மீது கண் வைத்துள்ளோம்’ என்றெல்லாம் சொன்ன எடப்பாடி, தி.மு.க ஆட்சியில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் குறித்துப் பட்டியலிட்டராம். அமைதியாகக் கேட்டுக்கொண்ட வெங்கய்ய நாயுடு, சிரிப்பை மட்டுமே வெளிப்படுத்தினராம். அதையே சிக்னலாக எடுத்துக்கொண்டு விட்டாராம் எடப்பாடி. பின்னர், நிம்மதியாக மறுநாள் அதிகாலை தேவஸ்ரீ வச்சனம் ரங்கநாயககுல மண்டபத்தில் அஸ்டதல பாக பத்ம பூஜையில் எடப்பாடி தன் குடும்பத்துடன் பங்கேற்றார். எடப்பாடியின் மகன் மிதுனும் பேரனும் மொட்டையடித்து இருந்தனர். பிறகு திருப்பதியிலிருந்து சேலம் சென்றவர், அன்று இரவு பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினை ஒருமையில் பேசி சவால் விட்டார்.’’

‘‘எடப்பாடி பேச்சில் காரம் அதிகமாமே?’’

‘‘ஆமாம். ‘புதிய தலைமைச் செயலகம் முதலில் சுமார் 8 லட்சம் சதுர அடிக்குக் கட்ட ரூ.200 கோடிக்கு டெண்டர் விட்டு, பிறகு சுமார் 9 லட்சம் சதுர அடிக்குக் கட்ட ரூ.465 கோடி டெண்டர் விட்டிருப்பது தெரிய வந்துள்ளது. உங்கள் விஞ்ஞான ஊழலைத் தோண்டி எடுக்கிறோம். நாங்கள் விட்டாலும் மக்கள் உங்களை விட மாட்டார்கள்’ என்றார். ‘இப்படி திருப்பதி லட்டு மாதிரி ஒரு விஷயத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஏன் சும்மா இருந்தீர்கள்’ என எடப்பாடியை டெல்லி பி.ஜே.பி உசுப்பிவிட்டுள்ளதாம். அதன் எதிரொலிதான் இந்த வேகம்.’’

‘‘இனி என்ன ஆகும்?’’

‘‘தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற பல விவகாரங்களைத் தோண்டியெடுக்கப் போகிறார்கள். முதலாவது, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடைபெற்ற முறைகேடு குறித்த வழக்கு. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் இந்த முறைகேடு புகார் குறித்து விசாரிக்க நீதிபதி தங்கராஜை நியமித்தார். அவர் ஆறு மாதங்களில் விலக, நீதிபதி ரெகுபதி உள்ளே வந்தார். இந்த ஆணைய விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் தடை வாங்கினர். சுமார் ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும் விசாரணை முடிந்தபாடில்லை. இழுபட்டுக்கொண்டே இருந்த இந்த ஆணையம் பற்றி உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்ப, ஒருகட்டத்தில் ராஜினாமாவே செய்துவிட்டார் ரெகுபதி.’’

‘‘இதை வைத்து என்ன செய்ய முடியும்?’’

‘‘விஷயம் இருக்கிறது. ‘ரெகுபதிக்கு பதிலாக வேறு யாரையாவது நியமிக்கும் உத்தேசம் இருக்கிறதா’ என தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் கேட்டது. இதற்கு செப்டம்பர் 27-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது. ஆனால், இந்த விசாரணையின்போது நீதிமன்றம் வெளியிட்ட சில கருத்துகள், தமிழக அரசுக்கு பிடித்துப்போய்விட்டன. ‘தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்திருந்தாலோ, விதிமீறல் இருந்தாலோ தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் மூலம் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாமே. இதற்கு ஏன் விசாரணை கமிஷன்’ என நீதிபதி கேட்டதை பிடித்துக் கொண்டார் எடப்பாடி. ரெகுபதி ஆணையம் வசமிருந்த ஃபைல்கள் அத்தனையும் இப்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் வசம் வந்துவிட்டன. இதை, நீதிமன்றத்திலும் தெரிவித்துவிட்டது தமிழக அரசு. விசாரணை ஃபைல்களில் ரெகுபதி எழுதி வைத்திருந்த பல குறிப்புகள் ஆழ்ந்த அர்த்தத்துடன் வாசிக்கப்படுகின்றன. புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டபோது பணியில் இருந்த ஒரு கட்டடவியல் நிபுணரிடமும் சில ஆலோசனைகளைக் கேட்டுள்ளனர்.’’

‘‘ஓ. தலைமை செயலகத்தை வைத்து தலைவருக்கு செக்!’’

‘‘வழக்கு போட்டு அடுத்தகட்டமாக ஆக்ஷன்கள் வேகமாக இருக்கலாம். கருணாநிதி மறைந்துவிட்ட நிலையில், அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலினுக்குதான் முதலில் குறிவைக்கிறார்கள். அடுத்தது பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன். இவர்களை முடக்கினாலே தேர்தல் நேரத்தில் தி.மு.க-வைச் சோர்வடையச் செய்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறார்கள். முதலில் ஸ்டாலின் உள்ளிட்டவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும். அதையடுத்து, கைது படலம் ஆரம்பமாகும் என்கிறார்கள்.’’

‘‘காங்கிரஸ் கட்சியில் தலைவர் மாற்றம் என்கிறார்களே?’’

‘‘வழக்கமாகக் கிளம்பும் செய்திதான். இந்தமுறை கொஞ்சம் சீரியஸாக அடிபடுகிறது. சிதம்பரத்தை தலைவராக்க வேண்டும் என்று ராகுல் விரும்புவதாக சொல்கிறார்கள். நான்கு செயல்தலைவர்களை நியமித்துவிட்டு, தலைவராக சிதம்பரத்தைக் கொண்டுவந்தால் தமிழகக் காங்கிரஸ் கட்சி வலுப்பெறும் என்றும் ராகுல் நினைக்கிறாராம்.’’

‘‘ஏற்கெனவே 48 செயல்தலைவர்கள் இருக்கிறார்களே... அதை வைத்தே வலுப்பெற முடியாத காங்கிரஸ், நான்கு பேரால் வலுப்பட்டுவிடுமா?’’

‘‘நீர் அநியாயத்துக்கு நக்கல் பேர்வழியாக இருக்கிறீர்’’ என்ற கழுகார், கிளம்பும் அவசரத்தில் இரண்டு தகவல்களை உதிர்த்துவிட்டுப் போனார்.

* அக்டோபர் 10-ம் தேதி ஒரு கல்லூரி விழாவுக்காக சென்னை வருகிறார் வெங்கய்ய நாயுடு. அப்போது மீண்டும் சில சந்திப்புகள் நிகழலாம்.

* சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு ஸ்டாலினுக்கும் அரசுத் தரப்பில் அழைப்பிதழ் தந்துள்ளார்கள். ஆனால், ‘விழாவுக்கு வர துணிச்சல் இருக்கிறதா?’ என ஆளும்கட்சியின் ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ நாளிதழ் ஸ்டாலினுக்கு சவால் விட்டிருக்கிறது.

அட்டைப்படம்: எம்.விஜயகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன், கே.ஜெரோம், வி.ஸ்ரீனிவாசுலு,

வாரிசுகளின் ஊழல் பட்டியல்!

அ.தி.மு.க நடத்திய தி.மு.க எதிர்ப்புக் கூட்டங்களில் பேசிய தமிழக அமைச்சர்கள், ‘நாக்கை வெட்டுவேன், ஜெயலலிதா ஆவி பழிவாங்கும்...’ என்றெல்லாம் பேசி, அதிர் வலைகளை ஏற்படுத்தினர். இவர்களுக்குப் போட்டியாக தி.மு.க சார்பில், அக்டோபர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் 124 இடங்களில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் பலரின் வாரிசுகள் சம்பந்தப்பட்ட ஊழல் பட்டியலை தி.மு.க தயார் செய்துள்ளதாம். அமைச்சர்களின் அறியப்படாத பக்கங்களை, இந்தக் கூட்டங்களில் பேசவிருக்கும் தி.மு.க பேச்சாளர்கள் சொல்லப் போகிறார்களாம். ஊழல் புகாரைவிட இதற்குத்தான் அவர்கள் பயந்துபோய் கிடக்கிறார்களாம்.

எதிரிகளை வீழ்த்த பூஜை!

காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவில் கர்நாடகாவின் முதல்வரானார் குமாரசாமி. இப்போது காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியைக் கவிழ்த்து, எடியூரப்பா தலைமையில் ஆட்சியை அமைக்கத் தீவிரமாக இருக்கிறது பி.ஜே.பி. இந்நிலையில், அக்டோபர் 10-ம் தேதிக்குள் அமைச்சரவை விரிவாக்கமும் நடைபெற உள்ளது. அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் பலர் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். ஒரு பக்கம் அமைச்சரவை விரிவாக்கம், மற்றொருபுறம் ஆட்சியைக் கவிழ்க்கச் சூழ்ச்சி, இந்த இடியாப்பச் சிக்கலில் உள்ள குமாரசாமியை, திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யச் சொன்னாராம் அவரின் ஜோதிடர். இதற்காக தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்த குமாரசாமி, காரில் திருச்செந்தூர் சென்றார். கோயிலில் மூன்று மணி நேரத்துக்கு மேல் இருந்தார். சூரசம்ஹார மூர்த்திக்கு அர்ச்சனை செய்தவர், தன் ஜோதிடரையும் அழைத்துவந்திருந்தார். எதிரிகளை வீழ்த்தவே சூரசம்ஹார மூர்த்திக்கு அர்ச்சனையாம்.

இப்போது எடியூரப்பாவும் ஜோதிடரை நாடியிருப்பதாகக் கேள்வி.

கருணாஸை வளைக்கும் தினகரன்!

முதல்வரையும் போலீஸையும் மிரட்டிய பேச்சுக்காக வேலூர் சிறையில் இருக்கிறார் கருணாஸ். இந்த நிலையில், தினகரன் பக்கம் போனதால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சோளிங்கர் பார்த்திபன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் மற்றும் தினகரன் அணி வழக்கறிஞர்கள் ஆகியோர் வேலூர் சிறை சென்று கருணாஸை சந்தித்துப் பேசினர். ‘‘கைது செய்யப்படப்போகிறார் என்ற தகவல் தினகரனுக்குக் கிடைத்தவுடன் கருணாஸை போனில் அழைத்துப் பேசினார். ‘எதற்கும் பயப்படாதீர்கள். உங்கள் பின்னால் நான் இருக்கிறேன்’ என்று சொல்லி அனுப்பினார். அதன்படிதான், கருணாஸை வெளியே கொண்டுவருவது குறித்துப் பேச வழக்கறிஞர்களையும் எம்.எல்.ஏ-க்களையும் சிறைக்கு அனுப்பிவைத்தார். இப்போது கருணாஸ் தெம்பாக இருக்கிறார்’’ என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். கருணாஸிடம் இருக்கும் சில வீடியோக்கள் தொடர்பாக போலீஸ் விசாரித்துவருவதாக ஒரு தகவல் பரவியது. இந்த வீடியோக்கள் பற்றியும் இந்தச் சந்திப்பின்போது பேச்சு நடந்ததாம்.

உண்ணாவிரதத்தை ஓரங்கட்டவா ரெய்டு?

இந்துசமய அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களை மீட்டெடுக்க ‘ஆலய மீட்புக் குழு’ என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ள பி.ஜே.பி-யின் ஹெச்.ராஜா, தொடர்ந்து அறநிலையத்துறை மற்றும் அதன் ஊழியர்களை மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார். ராஜாவுக்கு எதிராக செப்டம்பர் 27-ம் தேதி அறநிலையத் துறையின் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

அதே நேரத்தில், சைதாப்பேட்டை பகுதியில் தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேல் வழக்கமான தன் அதிரடி வேலையைக் காட்டிக்கொண்டிருந்தார். அங்குள்ள தொழிலதிபரும் நடிகருமான ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 89 சிலைகள் மீட்கப்பட்டதாக அனைத்து மீடியாக்களும் அலறிக்கொண்டு ஒளிபரப்பின. ‘‘ஆடை ஏற்றுமதித் தொழில் செய்துவருகிறார் ரன்வீர் ஷா. இந்தச் சிலைகள் அனைத்துக்கும் முறையாக ஆவணங்கள் வைத்துள்ளார். இவை திருடப்பட்ட சிலைகள் கிடையாது’’ என்று ஷாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதில் ஒரு விஷயத்தைப் பற்றி பத்திரிகையாளர்கள் அனைவரும் சொல்லிச் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தனர். அதாவது, ஷா வீட்டில் இப்படி சிலைகளைக் கைப்பற்றப்போவது பற்றி காலையிலேயே அனைத்து மீடியாக்களுக்கும் வாட்ஸ்அப் மூலமாக சுந்தரம் என்கிற டி.எஸ்.பி பெயரில் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது, ‘‘ஆமாம் சார்... ரெய்டு நடக்கிறது’’ என்று சர்வசாதாரணமாகவே அனைவரிடமும் சொன்னார். ஆக, ஒரு ரெய்டு... லைவ் ஆகியிருக்கிறது. அறநிலையத்துறையினர், ‘‘எங்களின் உண்ணாவிரத செய்தியை மறைக்கவே இந்த ரெய்டு’’ என்று புகார் சொல்கிறார்கள்.