Published:Updated:

மின்கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

மின்கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
மின்கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
மின்கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

சென்னை: மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று இது தொடர்பாக கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர் பாலபாரதி," மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தை திருத்த கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறது. இதனால் மக்களிடையே மின் கட்டணம் உயரும் அச்சம் உள்ளது. எனவே மின் கட்டணம் உயர்த்தபபடுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விசுவநாதன்,"தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின்கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்து மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின் பேரில் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துகிறது. அதன்பேரில் இன்று சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.

##~~##
பொது மக்களிடம் கருத்துகளை கேட்டு முடிந்ததும் மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று மின் கட்டணத்தை மாற்றி அமைக்கப்பட வேண்டுமானால் பொது மக்களை பாதிக்காத வகையில் முதல்- அமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்" என்றார்.