Published:Updated:

முருகன், சாந்தன் பேரறிவாளன் தூக்கை ரத்து செய்யுமாறு பிரதமரிடம் திமுக எம்.பி.க்கள் கோரிக்கை

புதுடெல்லி: முருகன், சாந்தன், பேரரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க, மத்திய அரசு ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக எம்.பி.க்கள் இன்று நேரில் கோரிக்கை மனு அளித்தனர்.

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு தலைமையில், அக்கட்சியின்  எம்.பி.க்கள் குழு, இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு ஒன்றை அளித்தது.

அந்த மனுவில்,"ஒவ்வொருநாளும், மரணதண்டனையை எதிர்நோக்கி, நான்கு சுவர்களுக்கிடையே கிட்டத்தட்ட அவர்களது பாதி ஆயுட்காலம் முடிந்து விட்டது. இந்த சிறைவாசம், மரணதண்டனையைவிட கொடுமையானது. மரணதண்டனை என்பது ஒரு சட்டப்பூர்வமான கொலை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.ஜனநாயக மற்றும் நாகரிக சமுதாயத்தைக் கொண்ட நமது நாட்டில் மரணதண்டனைக்கு எந்த இடமும் இல்லை.

##~~##
இதனை கருத்தில்கொண்டு, மகேந்திரநாத் தாஸ் மரணதண்டனை வழக்கில் அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, முருகன், சாந்தன் மற்றும் பேரரறிவாளன் ஆகியோரது மரணதண்டனை, மனிதாபிமான அடிப்படையில் ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட வேண்டும். 22 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாழக்கையை கழித்துவிட்ட இவர்களது தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.