Published:Updated:

`தி.மு.க-வில் இணைவது தற்கொலைக்குச் சமம்!’ - செல்லூர் ராஜு

அருண் சின்னதுரை
`தி.மு.க-வில் இணைவது தற்கொலைக்குச் சமம்!’ - செல்லூர் ராஜு
`தி.மு.க-வில் இணைவது தற்கொலைக்குச் சமம்!’ - செல்லூர் ராஜு

தி.மு.க-வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்குச் சமம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதிகளில் ஆழ்க்குழாய் கிணறு மற்றும் குடிநீர் குழாய் மற்றும் சத்துணவு கூடத்துக்கான பூமி பூஜை உள்ளிட்ட ரூ.74.19 லட்சம் மதிப்புள்ள நலத்திட்டப் பணிகளைத் தமிழகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``தி.மு.க-வில் சாதாரணப் பதவிகள் வகித்து வந்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்து  அ.தி.மு.க அழகு பார்த்தது. சாதாரண பதவிகள்தான் தி.மு.க அவருக்கு அளித்திருந்தது. அவர் துரோகம் செய்ததை பெரிய விஷயமாக அ.தி.மு.க எடுத்துக்கொள்ளவில்லை. தினகரன் அணியைக்கூட நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதில்லை. தி.மு.க-வில் இணைந்ததால், அதைத் தற்கொலைக்குச் சமமாக கருதுகிறேன். கஜா புயல் பாதிப்பில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வராமல் இருப்பது ஒரு பொருட்டல்ல. போதுமான நிதிகளை வழங்கினால் போதும். கஜா புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை தொடர்பாக பொத்தாம் பொதுவாகக் கருத்துச் சொல்லிவிட முடியாது. முழுமையான ஆய்வுக்குப் பிறகுதான் கருத்துத் தெரிவிக்க முடியும்’’ என்றார்.