Published:Updated:

உள்ளரசியல் to உலக அரசியல்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

உள்ளரசியல் to உலக அரசியல்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!
உள்ளரசியல் to உலக அரசியல்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

உள்ளரசியல் to உலக அரசியல்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

இந்த இதழ்  ஜூனியர் விகடன்: https://bit.ly/2FiagkB

உள்ளரசியல் to உலக அரசியல்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

தி.மு.க-வுக்கு செந்தில் பாலாஜியை அனுப்பினால், அது தினகரனுக்கு வீக். அதுமட்டுமல்ல, தினகரனுக்கு இப்போது பெரும் நிதி நெருக்கடி உள்ளது. அதைச் சரிகட்டத்தான் தன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ-க்களை அழைத்துக்கொண்டு சிறைக்குச் சென்றே சசிகலாவைச் சந்தித்து முறையிட்டார் தினகரன். சசிகலாவும் கஜானாவைத் திறக்க ஒப்புக்கொண்டாலும், அதற்கான வழி இளவரசி குடும்பத்தின் கையில்தான் உள்ளது. சசிகலா நிதி தர ஒப்புக்கொண்டது இளவரசி தரப்புக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான், நிதியைத் தருவதில் இளவரசி தரப்பு இப்போதுவரை இழுத்துக்கொண்டே செல்கிறதாம்... - `கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக்! - பின்னணியில் இளவரசி குடும்பம்' என உள்ளரசியல் மேட்டர்களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் மிஸ்டர் கழுகு.

உள்ளரசியல் to உலக அரசியல்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

இந்த ஐந்து மாநிலங்களின் தேர்தல்களை, நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்தே மோடி எதிர்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு பல மாதங்களுக்கு முன்பே எழுந்தது. ஆனால், இந்தத் தேர்தல்களை மக்களின் பல்ஸ் பார்க்கும் தேர்வாகவே மோடி கருதியிருக்கிறார். இந்தத் தேர்தல்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, பி.ஜே.பி தனது தேர்தல் வியூகங்களை வகுக்கக்கூடும். ‘வளர்ச்சி’ என்பதுதான் மோடியின் பிரதான முழக்கமாக இந்தத் தேர்தல் வரையிலும்கூட இருந்தது. அது இனி எடுபடாது. ஜனவரிக்குப் பிறகு ராமர் கோயில் விவகாரம் மீண்டும் தேசப் பிரச்னையாக மாறலாம். ஓட்டு வங்கியை உணர்ச்சிமயமாகத் திரட்டலாம் - நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய மோடியின் வியூகங்களைத் தெளிவாகக் கணித்து அடுக்கிறது 'மோடி கற்றுக்கொள்வார்... ராகுல்?' எனும் அரசியல் பார்வை. 

உள்ளரசியல் to உலக அரசியல்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

``...பறை கற்க வந்த ஒரு பெண்ணை பல வருடங்களாக சக்தி காதலித்தார். அந்தப் பெண்ணும் சக்தியை உயிருக்கு உயிராகக் காதலித்துள்ளார்... ஸ்கைப் மூலம் தன்னிடம் பறை இசை பயின்று வந்த வெளிநாட்டுப் பெண்ணோடும் நெருங்கிப் பழக ஆரம்பித்தார் சக்தி. விவாகரத்தான அப்பெண்ணுக்கு குழந்தை இருக்கிறது... திருநங்கை ஒருவரிடம் வீடியோ சாட்டிங் மூலமாக சக்தி ஆபாசமாக நடந்துகொண்டது ஆதாரத்துடன் வந்து சேர்ந்தது... ஒரு பெண்ணை, அவர் தூங்கும்போது சக்தி பாலியல் ரீதியாகத் தீண்டினார் என்று சர்ச்சை வெடித்தது..."

- உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலைக்குப் பிறகு, சாதிக்கு எதிராகக் களமாடிக்கொண்டிருக்கும் அவரின் காதல் மனைவி கௌசல்யா தற்போது மறுமணம் செய்துகொண்டிருப்பது ஒருபக்கம் கொண்டாட்டம். ஆனால், மறுபக்கம் சக்தியை முன்வைத்து வேறுவிதமாகச் சர்ச்சைகள் வெடித்திருப்பது பலரையும் அதிர வைத்துள்ளது. இதுகுறித்த `சர்ச்சைக்குள்ளாகும் கௌசல்யா திருமணம்!' எனும் செய்திக் கட்டுரை பலதரப்பினரின் பார்வையைக் கொண்டுள்ளது. 

உள்ளரசியல் to உலக அரசியல்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

``கட்சியில் தனது முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு வருவதை பன்னீர்செல்வம் உணர்ந்துள்ளார். பன்னீரிடம் இருப்பது இரண்டு பதவிகள் மட்டுமே. ஆனால், எடப்பாடியிடம் ஏராளமான பதவிகள் உள்ளன. அதற்கு செக் வைக்கும் விதமாகவே பன்னீர் பேசியுள்ளார். தேர்தலுக்கு முன்பாகக் கட்சியைத் தன் வசம் கொண்டுவராவிட்டால், அதன் பிறகு, தனக்கும் தன் ஆதரவாளர்களுக்கும் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று நினைக்கிறார் அவர். அதற்காக சில திட்டங்களை வகுக்க ஆரம்பித்துள்ளார்...’’ - ஓ.பி.எஸ் புதிதாகத் தொடங்கும் தர்மயுத்தம் குறித்தும், ஈ.பி.எஸ் அணுகுமுறைகள் குறித்தும் எடுத்துச் சொல்கிறது,  ``யாரும் தினகரனுக்கு எதிராக வாய் திறப்பதில்லை!" - பொங்கிய பன்னீர்... இறுகிய எடப்பாடி... - எனும் அரசியல் செய்திக் கட்டுரை.

உள்ளரசியல் to உலக அரசியல்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல்களில் பெற்றிருக்கும் வெற்றி, காங்கிரஸுக்கு புத்துணர்வு அளித்திருக்கலாம். ஆனால், அந்த வெற்றியை அடைய, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்வுசெய்த ‘இந்துத்துவா பாதை’ காங்கிரஸ் மீதுள்ள மதச்சார்பின்மை நம்பிக்கையை ஒட்டுமொத்தமாகக் குலைத்துப்போட்டுள்ளது. ஓட்டு வாங்குவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா ராகுல் காந்தி? - கடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலிலேயே ஆரம்பித்துவிட்டது காங்கிரஸ். ‘நான் ஓர் இந்து’ என்று ராகுல் அறிவித்தது தொடங்கி 5 மாநிலத் தேர்தல்களிலும் தொடர்ந்த காவிப் பயணத்தை முன்வைக்கும் 'அச்சுறுத்தும் காங்கிரஸின் காவி அரசியல்!' எனும் சிறப்புப் பார்வை கவனத்துக்கு உரியது. 

உள்ளரசியல் to உலக அரசியல்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

கோவை, திருப்பூர் உட்பட 13 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக மின்கோபுரங்கள் அமைக்கப்படும் திட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் மேற்கு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது - கள நிலவரம் சொல்கிறது. ``கார்ப்பரேட்டுக்காக எங்களைக் காவு வாங்குகிறார்கள்!" - கொந்தளிக்கும் விவசாயிகள் எனும் செய்திக் கட்டுரை. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் உண்டு என்கிறார்கள் விவசாயிகள். 

உள்ளரசியல் to உலக அரசியல்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார் செய்வதற்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்திருப்பது தமிழக விவசாயிகளை கவலைகொள்ள வைத்துள்ளது. மேலும், காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக விமர்சனமும் எழுந்துள்ளது - இந்த விவகாரம் தொடர்பான போக்குகளை விரிவாக நோக்குகிறது. "பழைய தீர்ப்புகளைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டாமா?" - பதற்றத்தை அதிகரிக்கும் மேக்கேதாட்டூ விவகாரம் தொடர்பான செய்திக் கட்டுரை. 

உள்ளரசியல் to உலக அரசியல்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

மொத்த மெக்சிகோவையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு வருகிறார் புதிய அதிபர் ‘மக்கள் நாயகன்’ ஆன்ட்ரஸ் மான்வல் லோபெஸ் ஒப்ரடோர். அதிபரின் ஊதியம் 60 சதவிகிதம் வெட்டு, அதிபருக்கான சொகுசு விமானம் விற்பனை, அரசு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஏலம், அதிபர் மாளிகையை மக்களுக்கான கலாசார மையமாக மாற்றியது என்று அவர் அரங்கேற்றிவரும் அதிரடிகளால் மெக்சிகோ அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், அமெரிக்கா உள்ளிட்ட அண்டை நாடுகளுமே அரண்டுதான் போயிருக்கின்றன! - ட்ரம்ப்பை சூடாக்கிய மெக்சிகோ அரசியல் சூழலின் பின்புலத்தைப் பதிவு செய்கிறது 'மெர்சல் காட்டும் மெக்சிகோ நாயகன்!' எனும் கட்டுரை.

இந்த வார ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்கhttps://bit.ly/2ScuVZG

அடுத்த கட்டுரைக்கு