Published:Updated:

"செந்தில்பாலாஜி அ.தி.மு.கவிற்கு வர முயன்றார்! " - அமைச்சர் தங்கமணி பகீர்!

"செந்தில்பாலாஜி அ.தி.மு.கவிற்கு வர முயன்றார்! " - அமைச்சர் தங்கமணி பகீர்!
"செந்தில்பாலாஜி அ.தி.மு.கவிற்கு வர முயன்றார்! " - அமைச்சர் தங்கமணி பகீர்!

அ.தி.மு.கவில் சேர செந்தில் பாலாஜி முயற்சி செய்தார். ஆனால், அவரை சேர்த்துக் கொள்ள கட்சி தலைமை மறுத்து விட்டது என்று தெரிவித்தார்  மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணி.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி,'முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தி.மு.கவில் இருந்துதான் அ.தி.மு.கவுக்கு வந்தார். மீண்டும் தி.மு.கவில் சேர்ந்துவிட்டார். அவர் தி.மு.கவில் இருக்கும்போது ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்தார். இப்போது அவர் வெறும் உறுப்பினராகத்தான் இருக்கப் போகிறார். தி.மு.கவில் அந்த சிறப்புதான் அவருக்குக் கிடைக்கும்.அ.ம.மு.கவில் இருந்து செந்தில்பாலாஜி விலகியது குறித்து டி.டி.வி.தினகரன் பேசும்போது, `முலாம் பூசப்பட்ட தங்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.அ.ம.மு.கவில் இருக்கிறவர்கள் எல்லாம் முலாம் பூசப்பட்டவர்கள்தான். அ.தி.மு.கவில் இருக்கும் அனைவரும் சொக்கத்தங்கங்கள்.

செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்து விலகி 2 ஆண்டுகள் ஆகி விட்டன. தி.மு.க, ம.தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க இப்போது மீண்டும் தி.மு.க என்று பல கட்சிகள் மாறியுள்ளார். அ.தி.மு.கவில் இருந்து ஒரு சாதாரண தொண்டர்கூட தி.மு.கவுக்குச் செல்லவில்லை. அமமுகவில் இருந்துதான் தி.மு.கவுக்கு சென்றுள்ளனர். அ.தி.மு.கவையும், அ.ம.மு.கவையும் இணைக்கும் முயற்சி இல்லை. டி.டி.வி.தினகரனைத் தவிர்த்து வேறு யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியிருக்கிறார்.அ.தி.மு.கவில் சேர செந்தில் பாலாஜி முயற்சி செய்தார். ஆனால், அவரை சேர்த்துக் கொள்ள கட்சி தலைமை மறுத்து விட்டது. மு.க. ஸ்டாலின் இந்த ஆட்சி நீடிக்காது என கடந்த 2 ஆண்டுகளாகக் கூறிகொண்டு தான்இருக்கிறார். இன்னும் 2 ஆண்டுகளுக்கும் அதிமுக ஆட்சியில் இருக்கும். அடுத்து வரும் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும்' என்றார்.