Published:Updated:

''தலித்களே திட்டமிட்டு தங்களது வீடுகளை கொளுத்திக் கொண்டார்கள்'' - ராமதாஸ் அறிக்கை சொல்லும் ரகசியம்

''தலித்களே திட்டமிட்டு தங்களது வீடுகளை கொளுத்திக் கொண்டார்கள்''    - ராமதாஸ் அறிக்கை சொல்லும் ரகசியம்
''தலித்களே திட்டமிட்டு தங்களது வீடுகளை கொளுத்திக் கொண்டார்கள்'' - ராமதாஸ் அறிக்கை சொல்லும் ரகசியம்

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குரு, ஜி.கே.மணி என பா.ம.க.வின் போர்படை தளபதிகள் எல்லாம் இப்போது ஜெயிலுக்குள் இருக்கிறார்கள். கட்சி முன்னெடுத்துச் செல்லவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துச் சொல்லக்கூட பொறுப்பான தளபதிகள் யாரும் வெளியில் இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருப்பவர்களும் கருத்துச் சொல்ல பயப்படுகிறார்கள். கைது ஜூரம் அவர்களை ரொம்பவே மிரள வைத்திருக்கிறது. இந்த நிலையில் மரக்காணம் கலவரம் தொடர்பாக தைலாபுரம் தோட்டத்திலிருந்து ராமதாஸ் பெயரில் ஒரு அறிக்கை தூது பறந்து வந்திருக்கிறது. படபடக்கும் அந்தக் அறிக்கையில் உள்ள பகீர் தகவல்களை இங்கே அப்படியே பதிவு செய்திருக்கிறோம்.

''தலித்களே திட்டமிட்டு தங்களது வீடுகளை கொளுத்திக் கொண்டார்கள்''    - ராமதாஸ் அறிக்கை சொல்லும் ரகசியம்

மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவுக்கு வந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் மரக்காணம் அருகே தாக்கப்பட்டது தொடர்பாக தொடர்ந்து பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. காவல்துறையினர் தெரிவிக்கும் தகவல்களை ஊடகங்களும் அப்படியே வெளியிட்டு வருகின்றன. மரக்காணம் பகுதியில் நடந்தது என்ன? என்பதை தீர விசாரித்து உண்மையான செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டும்.

##~~##
மரக்காணத்தில் நடத்தப்பட்டது முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் ஆகும். மாமல்லபுரம் வன்னிய இளைஞர் பெருவிழா மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதால், அந்த விழாவை சீர்குலைக்கச் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பு திட்டமிட்டு செயல்பட்டது. தங்கள் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, கடந்த ஒரு வாரமாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தொடர்ந்து கோரி வந்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்னியர் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் இல்லாத ஒன்றை கூறி வந்தார். இதன் மூலம் வன்னியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும்படி தமது சமுதாய மக்களைத் தூண்டிவிட்டார்.
''தலித்களே திட்டமிட்டு தங்களது வீடுகளை கொளுத்திக் கொண்டார்கள்''    - ராமதாஸ் அறிக்கை சொல்லும் ரகசியம்

திருமாவளவன் தூண்டுதலின் பேரில் தான் மரக்காணத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. மாமல்லபுர மாநாட்டுக்கு பா.ம.க.வினர் 500 கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருந்தெல்லாம் வந்துள்ளனர். அவர்கள் வரும் வழியில் எல்லாம் எந்த வன்முறையும் நிகழவில்லை. மரக்காணத்தில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்குக் காரணம், அங்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதும், எதற்கும் துணிந்தவர்களாக இருப்பதும்தான். மரக்காணம் பகுதியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ராமஜெயம் என்பவர் சாதிப்பாசத்தின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே வன்னியர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதுடன், வன்னியர்கள் மீதான தாக்குதலையும் தூண்டிவிட்டு வருகிறார். மாமல்லபுரம் மாநாடு நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பாகவே ராமஜெயத்திற்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சதி ஆலோசனை நடந்திருக்கிறது. அப்போது, மாமல்லபுரம் மாநாட்டுக்குச் செல்பவர்களை எவ்வாறு தாக்க வேண்டும், தலித்களின் குடிசைகளை எரித்துவிட்டு, அதற்கு பா.ம.க.வினர்தான் காரணம் என்று எவ்வாறு குற்றம்சாட்ட வேண்டும் என்றெல்லாம் வகுப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. தாக்குதலுக்காக பெருமளவில் பெட்ரோல் குண்டுகள் தயாரிக்கப்பட்டு, அங்கு இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ராமஜெயம் ஏற்கனவே கடந்த 2002ஆம் ஆண்டில் மாமல்லபுரம் வன்னிய இளைஞர் பெருவிழாவிற்கு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார். அப்போது அந்த கும்பல் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியதில், பா.ம.க. நிர்வாகி ஒருவருக்குச் சொந்தமான அம்பாசிட்டர் கார் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதில் பயணம் செய்த 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இப்போதும் அதே இடத்தில் அதேபோன்ற தாக்குதலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த குண்டர்களே செய்திருக்கிறார்கள். அரசுப் பேருந் துகள் உள்ளிட்ட வாகனங்களை இந்த கும்பல்தான் பெட்ரோல் குண்டு வீசி கொளுத்தியது. அதுமட்டுமின்றி, தங்களது வீடுகளை தாங்களே தீவைத்துக் கொண்டு, வன்னியர்கள் தீ வைத்துவிட்டதாக நாடகமாடுகிறது.

''தலித்களே திட்டமிட்டு தங்களது வீடுகளை கொளுத்திக் கொண்டார்கள்''    - ராமதாஸ் அறிக்கை சொல்லும் ரகசியம்

புதுவை பகுதியில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்துகளை டி.என்.33 ஜே.9966 என்ற இருசக்கர ஊர்தியில் வந்த கும்பல், புதுப்பட்டு ஐயனார் கோயில் அருகில் மறித்து உங்கள் வாகனங்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்போகிறோம் என்று கூறி, அதன்படியே தாக்குதல் நடத்தியிருக்கிறது. இன்னொரு கும்பல் மரக்காணம் அருகே சாலையோரம் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பாவி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.

கிழக்குக் கடற்கரை சாலையில் செல்லும் பா.ம.க.வினரின் ஊர்திகள் மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் கற்களையும், உருட்டுக்கட்டைகளையும் வீசித் தாக்குதல் நடத்தும் காட்சியை புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. இதைப் பார்த்தாவது நடந்த உண்மை என்ன? என்பதை அனைவரும், குறிப்பாக ஊடகங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மரக்காணத்தில் கலவரம் ஏற்பட்ட பிறகு வந்த காவல்துறையினர், பாட்டாளி மக்கள் கட்சியினரைத் தான் அடித்து விரட்டினார்களே தவிர, கலவரத்திற்குக் காரணமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை எதுவும் செய்யவில்லை. காவல் துறையினரின் தடியடியில் தப்புவதற்காக அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்த பா.ம.க.வினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கும்பல்கள், மிகக் கொடூரமான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துள்ளனர். கூனிமேடு என்ற இடத்தில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த விவேக் (17) என்ற இளைஞரும், கழிகுப்பம் என்ற இடத்தில் அரியலூரைச் சேர்ந்த செல்வராஜ் (28) என்ற இளைஞரும் கொல்லப் பட்டுள்ளனர். இவர்களில் செல்வராஜ் மண்டை பிளந்த நிலையில் பிணமாகக் கிடந்திருக்கிறார். உடற்கூறு ஆய்வில் அவர் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

''தலித்களே திட்டமிட்டு தங்களது வீடுகளை கொளுத்திக் கொண்டார்கள்''    - ராமதாஸ் அறிக்கை சொல்லும் ரகசியம்

அதுமட்டுமின்றி, செல்வராஜ் பயன்படுத்திய 97860 27118 என்ற செல்பேசியை கொலையாளிகள் எடுத்துச் சென்றுள்ளனர். அந்த தொலைபேசிக்கு 25ஆம் தேதி இரவு 9 மணிக்கு செல்வராஜின் நண்பரான ராமச்சந்திரன் என்பவர் தொடர்பு கொண்டபோது, கொலையாளி எடுத்துப் பேசியுள்ளார். ''இந்த செல்பேசியை வைத்திருந்தவனை நாங்கள்தான் அடித்துக் கொன்றோம். நாங்கள் மரக்காணத்தில்தான் இருக்கிறோம். உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று கூறி, பா.ம.க.வையும் கடுமையாக விமர்சித்திருக்கிறான். அதன் பின்னர் நேற்று பிற்பகல் 12.10 மணிக்கு செல்வராஜின் தொலைபேசிக்கு மிஸ்டுகால் கொடுத்திருந்த அவரது நண்பரான கொளஞ்சி என்பவரி டமும் கொலையாளி தொடர்பு கொண்டு பேசி, இதே தகவலைக் கூறியிருக்கிறான். இதுபற்றியெல்லாம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் மரக்காணம் காவல் நிலையத்தின் பொறுப்பு ஆய்வாளரான தமிழ்வாணனிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், செல்வராஜின் மரணத்தை சந்தேகத்திற்கிடமான சாவு என்றும், விவேக்கின் மரணத்தை விபத்து என்றும் கூறி காவல்துறை மறைக்கப்பார்க்கிறது.

மரக்காணத்தில் கலவரம் நடப்பதற்கு முன்பும், கலவரம் நடந்த பிறகும் வன்முறை கும்பலான விடுதலை சிறுத்தைகளுக்கு ஆதரவாகவே காவல்துறை செயல்பட்டு வருகிறது. மரக்காணம் வழியாக மாநாட்டுக்குச் செல்லும் வன்னியர்களைத் தாக்க ராமஜெயத்திற்குச் சொந்தமான பெட்ரோல் நிலையத்தில் சதி ஆலோசனை நடத்தப்படுவது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் பா.ம.க.வினர் புகார் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வன்முறையையும், அப்பாவிகள் இருவர் கொல்லப்பட்டதையும் தடுத்திருந்திருக்கலாம். ஆனால், மிகவும் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை, வெறும் 2 காவலர்களை மட்டும் மரக்காணம் பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தி இருக்கிறது.

வாகனங்களைத் தாக்கிய வன்முறை கும்பல் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டபோது அவர்களை அப்புறப்படுத்தி, பா.ம.க.வினரின் வாகனங்களை தொடர்ந்து செல்ல அனுமதி அளித்திருந்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்திருக்காது. ஆனால், வன்முறை கும்பலைக் கலைக்க காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, பா.ம.க.வினரின் ஊர்திகளை திருப்பி அனுப்புவதில்தான் காவல்துறையினர் குறியாக இருந்தனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பா.ம.க. ஊர்திகள் திருப்பி அனுப்பப்பட்டன. பா.ம.க.வைச் சேர்ந்த இருவர் வன்முறை கும்பலால் கொல்லப்பட்டதற்கு ஆதாரங்கள் இருக்கும்போதிலும், அவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்து அதற்குக் காரணமான கொலையாளிகளை கைது செய்ய காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள், வன்முறை வெறியாட்டம் நடத்தியதற்கு, வீடியோ ஆதரங்களும், புகைப்பட ஆதாரங்களும் இருக்கும்போதிலும் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதில் இருந்தே காவல்துறையினர் அவர்களுக்குச் சாதகமாக செயல்பட்டிருப்பதை புரிந்து கொள்ளலாம்.

2002ஆம் ஆண்டில் பா.ம.க.வினர் இருவர் படுகொலை செய்யப்பட்டதற்கும், இப்போது இருவர் படுகொலை செய்யப்பட்டதற்கும் தொடர்பு உள்ளது. இரு தாக்குதல்களையும் ஒரே கும்பல்தான் செய்திருக்கிறது. ஆனால் அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே வன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் மீதும், மற்றவர்கள் மீதும் எங்களுக்கு நம்பிக்கையில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடப்பதற்கு வசதியாக இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும். இந்த விஷயத்தில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். பா.ம.க.வைச் சேர்ந்த 1200 பேர் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வன்முறை பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்ட, விடுதலை சிறுத்தைகள் கும்பல் மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரக்காணம் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட பா.ம.க.வினரின் இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கலவரத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 7 பேருக்கும் துப்பாக்கிச் சூட்டில் மருத்துவம் பெற்று வரும் 4 பேருக்கும் தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த வன்முறையில் படுகாயமடைந்து புறநோயாளிகளாகவும், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மரக்காணம் பகுதியில் தலித்களின் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டதற்கும், பா.ம.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வன்முறை வெடித்தபோது, அந்த பகுதியில் இருந்த அனைவருமே வெளியூர்களைச் சேர்ந்த பா.ம.க.வினர். அவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் இடம் எங்கு உள்ளது என்பதுகூட தெரியாது. தலித்களே திட்டமிட்டு தங்களது வீடுகளை தாங்களே கொளுத்திக் கொண்டு கலவரத்தில் எரிந்ததாக கூறுகின்றனர். தருமபுரியில் எப்படி தங்களது வீடுகளை தாங்களே சேதப்படுத்திக் கொண்டு இழப்பீடு பெற்றார்களோ அதேபோல் இப்போதும் இழப்பீடு பெற வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி நாடகமாடுகிறார்கள். இதுபோன்று நாடகமாடுவது விடுதலை சிறுத்தைகள் கும்பலுக்கு புதிது அல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் கடலூர் மாவட்டம் பாஞ்சாரப்பாளையத்திலும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கடலூர் மாவட்டம் மேல் இருப்புப் பகுதிகளிலும் தலித்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மேலிருப்பு வீடுகளை, தங்களின் வீடுகளை எரித்துக் கொண்டு இழப்பீடு பெற முயன்றார்கள். அங்கு நடைபெற்ற வன்முறை தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டி ருந்தபோதே திடீர் திடீரென குடிசைகள் தீப்பற்றி எரிந்தன. அரசிடமிருந்து நிதியுதவிப் பெறுவதற்காகத்தான் இவ்வாறு அவர்கள் நாடகமாடுகிறார்கள் என்பதை உணர்ந்த ஆணைய அதிகாரிகள், எந்தவொரு இழப்பீடும் தரமுடியாது என்று கூறி சென்று விட்டனர். தருமபுரியில் நாடகமாடி இழப்பீடு பெற்றதைப்போல இங்கும் இழப்பீடு பெறலாம் என்ற எண்ணத்தில்தான் இவர்கள் இதுபோன்று செய்திருக்கிறார்கள்.

சமூக நல்லிணக்கத்திலும் அமைதியிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மிகுந்த அக்கறை உள்ளது. எனவேதான், இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் பொறுமையாக செயல்பட்டு வருகிறோம். ஆனால், காவல்துறையினர் தொடர்ந்து வன்முறையாளர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்கள்.

எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறையினர் எனக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர். எனக்கும் எனது வீட்டிற்கும் சேர்த்து மொத்தம் 6 காவலர்கள், பாதுகாப்பு பணியில் இருந்தார்கள். மாமல்லபுரம் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, எனக்கு அளிக்கப்பட்டிருந்த காவல் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதற்கான காரணம் என்ன என்பதை இதுவரை விளக்கவில்லை. மாமல்லபுரம் மாநாட்டில் காவல்துறையினரின் செயல்பாட்டை நான் கடுமையாக விமர்சித்தேன். இதற்காக அவர்கள் பாதுகாப்பை திரும்ப பெற்றிருப்பார்கள் என்று கருதுகிறேன். ஆட்சியாளர்களின் தவறுகளையும், காவல்துறையினரின் தவறுகளையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டவே கூடாது என்றால், நாட்டில் ஜனநாயகம் மறைந்து சர்வாதிகாரம் தழைத்துவிடும்.

மரக்காணம் கலவரம் தொடர்பாக காவல்துறையினர் நியாயமாக செயல்பட்டு வன்முறை மற்றும் கலவரங்களுக்கு காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வெகுவிரைவில் மாவட்டத் தலைநகரங்களிலும், ஒன்றியத் தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டனப் போராட்டம் நடத்தப்படும்" இப்படி முடிகிறது அந்த அறிக்கை