Published:Updated:

`கலைஞர் சிலை திறப்பா? அதை டி.வியில் பார்த்துக்கொள்கிறேன்’ - அழகிரி கடுகடுப்பு!

`கலைஞர் சிலை திறப்பா? அதை டி.வியில் பார்த்துக்கொள்கிறேன்’ -  அழகிரி கடுகடுப்பு!
`கலைஞர் சிலை திறப்பா? அதை டி.வியில் பார்த்துக்கொள்கிறேன்’ - அழகிரி கடுகடுப்பு!

அகில இந்திய அரசியல் தலைவர்கள் பங்குபெறும்  கலைஞர் சிலை திறப்பு விழாவில் தி.மு.கவினர் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் அதே நாளில்  மதுரையில் தன்னுடைய ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் அழகிரி கலந்து கொண்டார்.

அப்போது மணக்களை வாழ்த்தி பேசியபோது," இத்திருமண விழாவில் கலந்து கொண்ட தற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கௌஸ் பாட்சா பற்றி நான் சொல்ல தேவையில்லை. என் தந்தை கலைஞருக்கு ஒரு  பிள்ளையாக இருந்தார். அவர் சட்டமன்றத்தில் குறைந்த ஆண்டுகள் இருந்தாலும் மதுரைக்கு எத்தனையோ நன்மைகளை செய்திருக்கிறார்.

கௌஸ் பாட்சாவை துணைமேயர் என்று நான் எழுதி கொடுத்தேன். அதையே கலைஞர் அறிவித்தார். நான் சொன்னதெல்லாம் கலைஞர் இருந்தபோது நடந்தது. சபாநாயகர் அறைக்குள் நடந்த கௌஸ் பாட்ச்சா பதவி ஏற்பு விழாவுக்கு முதல்முறையாக  கலைஞர் வந்தார். அதுவே பெருமையான விஷயம்.கௌஸ் பாட்சா எங்கள் வீட்டுக்கு எப்போதும்  ஹவுஸ் பாட்சாதான்." என்று பேசியவர். கிளம்பி செல்லும்போது கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சி பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு," அதை டிவியில் பார்த்து கொள்கிறேன்" என்று கூறிவிட்டு சென்றார்.