Published:Updated:

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை! - சோனியா காந்தி திறந்து வைத்தார்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை! - சோனியா காந்தி திறந்து வைத்தார்
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை! - சோனியா காந்தி திறந்து வைத்தார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அறிஞர் அண்ணா சிலைக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. சிலையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி திறந்துவைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வரும்,  தி.மு.க தலைவரும் மு.கருணாநிதியின் திருவருவச்சிலை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகள் கட்சி சார்பில் செய்யப்பட்டு வந்தன. சிலையை வடிவைக்கும் பொறுப்பு திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள சிற்பி தீனதயாளன் என்பவருக்கு கொடுக்கப்பட்டது.

சிலை வடிவமைக்கும் பணிகள் முடிவடைந்ததையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் சூழ அண்ணா சிலைக்கு அருகே மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மாலை சென்னை  வந்தடைந்தனர். அதேபோல கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் வருகை தந்தனர். மேலும் திருமாவளவன், வைகோ, முத்தரசன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் கலந்துகொண்டனர். திரையுலகம் சார்பில் ரஜினி,வைரமுத்து, சத்ருகன் சின்ஹா, பிரபு,  நாசர், குஷ்பு, வடிவேலு ஆகியோர் பங்கேற்றனர். விழாவுக்கு வந்த தலைவர்களை ஸ்டாலின் வரவேற்றார்.

சிலை திறப்பையொட்டி விமான நிலையம் அண்ணா அறிவாலயம், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானம்,  கருணாநிதி நினைவிடம் மற்றும்  தலைவர்கள் செல்லக்கூடிய வழிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அதிரடிப்படை மேடைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அறிவாலயத்துக்கு தொண்டர்கள் வர வேண்டாம் என திமுக தலைமை அறிவுறுத்தியதையடுத்து, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொண்டர்கள் திரண்டு வருகின்றனர். அறிவாலயத்தில் நடைபெறும் சிலை திறப்பு விழாவுக்கு 200 பேர் மட்டும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.