Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசாணை பிறப்பித்தது ஏன்? - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசாணை பிறப்பித்தது ஏன்? - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசாணை பிறப்பித்தது ஏன்? - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியாது என்பதால்தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கமளித்திருக்கிறார். 

ஸ்டெர்லைட் ஆலை இயங்க தேசியப் பசுமைத் தீர்பாயம் சில நிபந்தனைகளுடன்  அனுமதி அளித்திருக்கிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கமளித்திருக்கிறார். 

சென்னை மயிலாப்பூரில் திருமறைச் செப்பேடு திருப்பணிக்கான பிரத்யேக இணையதளம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த இணையதளத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ``ஒரு குறிப்பிட்ட ஆலைக்கு எதிராகக் கொள்கை முடிவு எடுக்க முடியாது. இதுபோன்ற ஆலைகளே தமிழகத்துக்கு வரக் கூடாது என்று வேண்டுமானால் கொள்கை முடிவு எடுக்கலாம். அப்படி முடிவெடுத்தால், என்ன மாதிரியான பிரச்னைகள் வரும்?. ஏனென்றால் எந்த தொழிற்சாலையும் தமிழகத்துக்கு எந்த வராத சூழல் ஏற்படும். இதைத் தான் தி.மு.க தலைவர் ஸ்டாலின் விரும்புகிறாரா?.

சரி, தமிழகத்துக்கு உலோகத் தொழிற்சாலைகளே வேண்டாம் என்று வைத்துக் கொண்டால். சேலம் உருக்காலையையும் நாம் மூட வேண்டும். ஏற்கெனவே அந்த ஆலையைத் தக்கவைத்துக் கொள்ள பெருமுயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதுபோல் உலோகத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் எத்தனை இருக்கின்றன. சிமெண்ட் தொழிற்சாலைகளே கூட ஒருவகையான உலோகத் தொழிற்சாலைகள்தான்’’ என்றார்.