Published:Updated:

பாபா பட வழக்கை தூசு தட்டும் மதுரை போலீஸ்!

 பாபா பட வழக்கை தூசு தட்டும் மதுரை போலீஸ்!
பாபா பட வழக்கை தூசு தட்டும் மதுரை போலீஸ்!
 பாபா பட வழக்கை தூசு தட்டும் மதுரை போலீஸ்!

 மதுரை : தமிழகம் முழுவதுமுள்ள  காவல் நிலையங்களில் பெண்டிங்கில் இருக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீதான பழைய  வழக்குகளை தோண்டி எடுக்க சொல்லி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் காவல்துறையினர் சுறுசுறுப்பாகியுள்ளனர்.

 இந்த அடிப்படையில், சில வருடங்களுக்கு முன்பு,  பாபா படத்தை ரஜினிகாந்த் வெளியிட இருந்தபோது, அவருக்கும் பா.ம.க.வினருக்கும் பிரச்சனை ஏற்ப்பட்டு, படத்தை ரீலிஸ் செய்வதில் தடங்கல் ஏற்ப்பட்டது. ஆங்காங்கு திரையரங்குகளை பா.ம.க.வினர் மிரட்ட ஆரம்பித்தனர்.

அந்த நேரத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ள டாக்டர் ராமதாஸ் மதுரை வந்திருந்தபோது, ரஜினி ரசிகர்கள் அவருக்கு கறுப்புக்கொடி காட்ட சென்றனர். பதிலுக்கு ராமதாஸுடன் வந்திருந்த பாமகவினர் ரஜினி ரசிகர்களையும் பத்திரிக்கையாளர்களையும் கடுமையாக தாக்கினார்கள். இது சம்பந்தமாக அப்போது வழக்கு போடப்பட்டது.

##~~##
 காலமாற்றம், அரசியல் மாற்றத்திற்கு பிறகு அந்த வழக்கு கண்டுகொள்ளப்படவில்லை. தற்போது தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைக்கு ஆளாகி திருச்சி சிறையில் அடைபட்டிருக்கும் ராமதாஸ், ஜாமீனில் வெளியில் வந்து விடாதபடி, தொடர்ச்சியான வழக்குகளை அவர் மீது போடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
 அந்த வகையில் மதுரையில் போடப்பட்ட பாபா படம் சம்பந்தப்பட்ட பழைய வழக்கில், டாக்டர் ராமதாஸை கைது செய்ய, காவல்துறையினர் ரெடியாகி வருவதாக காக்கி வட்டாரம் கூறுகிறது.
 
-கே.கே.மகேஷ், செ.சல்மான்