Published:Updated:

`ஊருக்குள் மோசமான ஒருவர் வந்தால் 10 பேர் சேர்ந்து விரட்டுவோம்' கூட்டணிகுறித்து திருநாவுக்கரசர்

பலவீனமாக இருப்பதால், மற்ற கட்சிகள் கூட்டணி வைத்துக்கொள்வதாக பா.ஜ.க கூறுகிறது. ஊருக்குள் மோசமான ஒருவன் வந்தால் பத்து பேர் சேர்ந்துதானே விரட்டுவார்கள். அதனால், மோசமானவன் பலமானவன் என்றும், விரட்டும் பத்து பேர் பலவீனமானவர்கள் என்றும் கிடையாது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

`ஊருக்குள் மோசமான ஒருவர் வந்தால் 10 பேர் சேர்ந்து விரட்டுவோம்' கூட்டணிகுறித்து  திருநாவுக்கரசர்
`ஊருக்குள் மோசமான ஒருவர் வந்தால் 10 பேர் சேர்ந்து விரட்டுவோம்' கூட்டணிகுறித்து திருநாவுக்கரசர்

`பலவீனமாக இருப்பதால் மற்ற கட்சிகள் கூட்டணி வைத்துக்கொள்வதாக பா.ஜ.க கூறுகிறது. ஊருக்குள் மோசமான ஒருவர் வந்தால், பத்து பேர் சேர்ந்துதானே விரட்டுவார்கள். அதனால், மோசமானவன் பலமானவன் என்றும், விரட்டும் பத்து பேர் பலவீனமானவர்கள் என்றும் கிடையாது' என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில், 'தேசம் காப்போம்' என்ற தலைப்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ரத யாத்திரை இன்று மாலை தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் வந்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்தியில் ராகுல் பிரதமராக வேண்டும் என்பது போன்று, தமிழகத்தின் அ.தி.மு.க பினாமி அரசு அகற்றப்பட வேண்டும். தி.மு.க தலைமையில் ஸ்டாலின் முதல் அமைச்சராக வரவேண்டும் என்ற வகையில் நாங்கள் செயல்படுகிறோம். 

ரஜினி காங்கிரஸில் இணைவாரா என்பதுகுறித்து கேட்கிறீர்கள். மத்தியில் காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டு எந்த கட்சியைச் சேர்ந்தவர்களும் நிபந்தனை இல்லாமல் வந்தால், அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். தமிழக அ.தி.மு.க அரசு தோல்வி பயத்தில் தேர்தலை தள்ளி வைத்துக்கொண்டேபோவது கண்டனத்திற்குரியது. தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும். மோடியை வசைபாடும் நிகழ்ச்சியாக கலைஞர் சிலை திறப்புவிழா நடந்ததாக தமிழிசை கூறியிருக்கிறார். கம்யூனிஸ்ட், தெலுங்குதேசம், தி.மு.க கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் மோடிக்கு வாழ்த்தரங்கம் பாடுவார்கள் என அவர் நினைத்தாரா.

ஆட்சியில் இருக்கும் மோடி, பா.ஜ.க-வை விமர்சிக்கத்தான் செய்வார்கள். ஜெயலலிதா நூறுநாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது மோடி சென்று பார்க்கவில்லை. அவர் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்துச்சென்றிருக்கலாமே. எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, தனி விமானத்தில் பிரதமர் இந்திரா காந்தி அழைத்துச்சென்றார். சிகிச்சைக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் எம்.ஜி.ஆர் ஆட்சிசெய்தார். கஜா புயப் பாதிப்பால் 50,000 கோடி ரூபாய்க்கான சேதம் ஏற்பட்டுள்ளது. அதை மோடி பார்க்க வரவில்லை. தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பா ஜ.க நடத்திக்கொண்டிருக்கிறது. கஜா பாதிப்பிற்கு 15,000 கோடி கேட்டதற்கு 300 கோடி கொடுத்திருக்கிறார்கள். சிலை அமைக்க  3,000 கோடி செலவிடுகிறார்கள், 12 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்பட்டு 50,000 கோடி இழப்பீட்டுக்கு 300 கோடி கொடுத்திருக்கிறார்.

காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சி என்பதால், ராகுல் காந்தி கோயில், பள்ளிவாசல், சர்ச்சுக்கும், புத்த ஆலயங்களுக்கும் போகிறார்.  பா.ஜ.க. மாதிரி ஒரு மதத்தை மதிப்பது, இரண்டு மதங்களைப் பகைப்பதும் காங்கிரஸின் செயல் அல்ல. தமிழக காங்கிரஸ் தலைமையை மாற்ற வேண்டும் என இளங்கோவன் கூறிய கருத்து சாதாரணமான பிரச்னை. அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஊடகத்தில் கூறி பெரிதாக்க விரும்பவில்லை. ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதில் ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரியவில்லை என ஏற்கெனவே கூறியிருந்தேன். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ராஜீவ் கொலை வழக்கில் சமந்தப்பட்டவர்களை விடுதலை செய்யக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. பலமான பா.ஜ.க தனியாக நிற்கிறது, பலவீனமாக இருப்பதால் மற்ற கட்சிகள் கூட்டணி வைத்துக்கொள்வதாக பா.ஜ.க. கூறுகிறது. ஊருக்குள் மோசமான ஒருவன் வந்தால், பத்துபேர் சேர்ந்துதானே விரட்டுவார்கள். அதனால் மோசமானவன் பலமானவன் என்றும், விரட்டும் பத்துபேர் பலவீனமானவர்கள் என்றும் கிடையாது" என்றார்.