Published:Updated:

அரசியல் கட்சிகளின் வருமானம்: பா.ஜ.க முதலிடம்!    

அரசியல் கட்சிகளின் வருமானம்: பா.ஜ.க முதலிடம்!    
அரசியல் கட்சிகளின் வருமானம்: பா.ஜ.க முதலிடம்!    

நாட்டின் ஏழு தேசியக் கட்சிகளில் ஐந்து கட்சிகள், தங்களது வருமானம் 2017-18-ம் நிதியாண்டில், முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் குறைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ள நிலையில், அதிகம் வருவாய் பெற்ற கட்சிகளில் பா.ஜ.க முதலிடத்தில் உள்ளது.  

அரசியல் கட்சிகளின் வருமானம்: பா.ஜ.க முதலிடம்!    

அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கு விவரங்களை, ஏ.டி.ஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms- ADR) ஆய்வு செய்ததில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 7 தேசியக் கட்சிகளில் 6 கட்சிகள் மட்டுமே, 2017-18-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்துள்ளன. 

இதில், இந்த 6 கட்சிகளும் பெற்ற மொத்த வருவாய் 1,198.76 கோடி ரூபாயாகும். இதில், 1,027.34 கோடி ரூபாயை பா.ஜ.க மட்டுமே பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே, மேற்கூறிய நிதியாண்டில் தனது வருவாய் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள போதிலும், அதன் வருவாய் 104.85 கோடி ரூபாயாக மட்டுமே உள்ளது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டில் 100.26 கோடி ரூபாயாக இருந்தது. 

அதேபோன்று பகுஜன் சமாஜ் கட்சியின் வருவாய் 2016-17-ம் நிதியாண்டில் 173.58 கோடி ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், 2017-18-ம் நிதியாண்டில் இது 51.69 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வருவாய் 17.23 கோடி ரூபாயிலிருந்து 8.15 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. பா.ஜ.க-வின் வருவாய்தான் மற்ற கட்சிகளைக் காட்டிலும் அதிகம் என்றாலும், அதன் வருவாயும் 1,034.27 கோடி ரூபாயிலிருந்து 1,027.34 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.  

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வருவாய் 17.23 கோடி ரூபாயிலிருந்து 5.17 கோடி ரூபாயாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் 2.08 கோடி ரூபாயிலிருந்து 1.55 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் வருவாய் 2016-17-ம் நிதியாண்டில் 225.36 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2017-18-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை அக்கட்சித் தாக்கல் செய்யவில்லை என்பதால், அந்த ஆண்டுக்கான வருவாய் என்ன என்பது தெரியவரவில்லை. 

அரசியல் கட்சிகளின் வருமானம்: பா.ஜ.க முதலிடம்!    

இந்த நிலையில்,  2017-18-ம் நிதியாண்டில் அரசியல் கட்சிகள் ஈட்டிய 1,198.76 கோடி வருவாயில் 1,041.80 கோடி ரூபாய் தாமாக முன்வந்து அளிக்கப்பட்ட நன்கொடைகள் மூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நன்கொடைகள் தேர்தல் நிதி பத்திரங்கள் (ரூ.210 கோடி), தனிநபர் நன்கொடைகள்/தேர்தல் அறக்கட்டளைகள் (ரூ.12.76 கோடி), இதர நன்கொடைகள் (ரூ.714.57 கோடி, அஜ்வான் சகாயோக் நிதி (ரூ.64.18 கோடி, கட்சிகளின் பேரணிகளுக்காக கட்சி உறுப்பினர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் அளித்த நன்கொடைகள் (ரூ.20 லட்சம்), பொதுக்கூட்டங்கள் மூலம் வசூலிக்கப்பட்ட நன்கொடைகள் உள்ளிட்ட பல்வேறு முறையில் திரட்டப்பட்டுள்ளது. இதில், பா.ஜ.க-வுக்கு மட்டுமே தேர்தல் நிதி பத்திரம் மூலம் அதிகபட்சமாக 210 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக ஏ.டி.ஆர் தெரிவித்துள்ளது.