Published:Updated:

`தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை'! - ஹெச்.ராஜா அதிர்ச்சி பதில்

`தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை'! - ஹெச்.ராஜா அதிர்ச்சி பதில்
`தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை'! - ஹெச்.ராஜா அதிர்ச்சி பதில்

``கஜா புயலில் பாதிக்கப்பட்ட இடத்தை பிரதமர் ஏன் பார்வையிட வரவில்லை என்ற கேள்விக்கு சுற்றி வளைத்த ஹெச்.ராஜா இறுதியில் தமிழக மக்கள் ஓட்டுப் போட்டு பி.ஜே.பி  ஆட்சிக்கு வரவில்லை’’ என்று அதிர்ச்சி பதில் கொடுத்துள்ளார்.

`தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை'! - ஹெச்.ராஜா அதிர்ச்சி பதில்

கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ``ஈழத்தில் 85,000 இளம் தமிழ் விதவைகள் உருவாக காரணமாக இருந்தாலும், கலைஞர் சிலை திறப்பு விழாவில் நிகழ்வுக்கு வந்தவர்களை  நல்ல விதமாக வரவேற்பது இயல்புதான். ஆனால், மோடியை ’சேடிஸ்ட்’  என பேசுவதற்கு  என்ன அவசியம் வந்தது? அதனால்தான் ஸ்டாலினை முதிர்ச்சி இல்லாத தலைவர் என்கிறேன். தி.மு.க இன்று முற்றிலும் முதிர்ச்சி இல்லாத தலைமையின் கீழ் இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது மோடி அரசு. அதில் சோனியா காந்தி கலந்துகொள்ளவில்லை. கலைஞர் சிலை திறப்பதற்குத் தமிழின துரோகி சோனியா காந்தியை ஸ்டாலின் அழைத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தில் இருக்கும் பிரிவினை தீயசக்கதிகளுக்கு  தி.மு.கதான் அரவணைப்பு. தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.கவும் வி.சி.கவும் இல்லை என்று துரைமுருகன் கூறியது போலவே அவர்களுக்கு மேடையில் இடம் கொடுக்காமல்   8-வது வரிசைக்கு தள்ளிவிட்டனர். துரைமுருகன்தான் தி.மு.கவை வழி நடத்துகிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நக்சல்கள் ஒருங்கிணைப்புப் பணிகள் நடைபெறுவதாகச்  செய்திகள் வருவது கவலை அளிக்கிறது. மாநில அரசு இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியைப்பெறவும் தயங்கக் கூடாது. அதேபோல, இந்து அறநிலையத்துறையின் கூடுதல்  ஆணையர் திருமகள்  மீது உடனடியாக  துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத்துறை  கொஞ்சம் கூட உப்பு போட்டு சாப்பிடாத, வெக்கம் கெட்ட  துறையாக  இருக்கிறது. அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுகிறது, திருடப்பட்ட சிலைகள்  மீட்கப்படுகின்றது என்று சொல்பவர்கள் சிலை திருடுபோனது எப்படி? அப்போது அறநிலையத்துறை என்ன செய்து கொண்டிருந்தது  என்ற கேள்விக்கும்  பதில் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில்  6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல் பாடத்தில், சேர, சோழ, பாண்டிய மன்னன் குறித்த எந்த வரலாறும் இல்லை. ஆனால், முகலாயப் பேரரசின் வரலாறு இருக்கிறது. தமிழ் மன்னர்களின் வரலாற்றை மறைக்கும் நோக்கில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் இந்தியா எனது தாய் நாடு என முன்பு இருந்தது. இப்போது  இந்தியா என்னுடைய  நாடு என்று மட்டும்தான் இருக்கிறது. தாயை தூக்கிவிட்டார்கள்.  இது தேசத்துரோக செயல்,  இந்த மாற்றம் கொண்டு வந்தவரைக் கடுமையாக தண்டிக்க வேண்டும். இனிமேல் பாடத்திட்டம் அமைக்கும் குழுவில் சேர்க்கக் கூடாது. ஈ.வே.ரா வழி வந்த இவர்கள் இந்து கலாசாரத்தின் தொன்மையை அழிப்பதற்காகக் கோயில்களை அழித்தனர். ஊழல் செய்யவே 'அறம் செய்ய விரும்பு' என்பதைப்  புத்தகத்தில் இருந்து  தூக்கி விட்டனர். மாணவர்களை நாட்டுப்பற்றிலிருந்து விலக்கி வைப்பதற்காக இந்த  பாடத்திட்டம்  தயார் செய்யப்பட்டுள்ளது. தேசப்பக்தியும், ஒழுக்கம் கொண்ட இளைஞர்களை உருவாக்கும் கடமை அரசுக்கு உள்ளது. வேலைவாய்ப்பு இல்லாதவர்களைத்தான் தீயசக்திகள் ஆயுதம் ஏந்த வைக்கும். ஸ்டெர்லைட் ஆலை திறக்க பசுமைத் தீர்ப்பாயம் கொடுத்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதற்கு எதிராகப் போராட்டம் நடத்துவது இளைஞர்களுக்கு விரோதமான செயல்” என்றார்.

`தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை'! - ஹெச்.ராஜா அதிர்ச்சி பதில்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட இடத்தைப் பிரதமர் ஏன் பார்வையிட வரவில்லை என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி அழைக்கப்பட்டதையே விமர்சித்துப் பேசி வந்தார். உங்கள் அரசின் மீதான குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லுங்கள். காங்கிரஸ் சரி இல்லையென்பதால்தானே பி.ஜே.பிக்கு வாய்ப்பளித்தார்கள். உங்களிடம் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கு பதில் சொல்லுங்கள் என்று பத்திரிகையாளர்கள் மீண்டும் கேட்டதற்கு, ``தமிழக மக்கள் ஓட்டுப் போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை'. என்றவர் கஜா புயலில் பாதிக்கப்பட்ட  3 லட்சம் வீடுகளைக் கட்டி தரும் பொறுப்பை மத்திய அரசு ஏற்றுள்ளது. இன்று வரை கஜா புயல் பாதிப்பு குறித்த இறுதி அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப் படவில்லை. அதனால்தான் மத்திய அரசு முழு நிதியுதவியை வழங்வில்லை என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாகக் 353 கோடி தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. தமிழக அரசு முழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை மாநில அரசின் பேரிடர் நிதியில் இருக்கும் ரூ.1,217 கோடியைப் பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசுக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தி உள்ளார் என்றார்.
 

மக்கள் சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாதிரியும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மாதிரியும் வாக்களிப்பார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அனுபவம் வாய்ந்த மோடியா இல்லை முதிர்ச்சி இல்லாத ராகுலா என மக்கள் முடிவு செய்வார்கள். நாட்டுக்குத் தேவை நிலையான கட்சி. நிலையான அரசு. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோரே  ஏற்கவில்லை. அந்தக் கூட்டணியில் ஆளுக்கு ஆள் நாட்டாமை. கருணாநிதி சிலைக்கு செலவு செய்த நிதியை கஜா புயல் பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கலாமே” என்று முடித்தார்.