Published:Updated:

`அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நடவடிக்கை கன்ஃபார்ம்’ - தகித்த ஜெயக்குமார்

`அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நடவடிக்கை கன்ஃபார்ம்’ - தகித்த ஜெயக்குமார்
`அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நடவடிக்கை கன்ஃபார்ம்’ - தகித்த ஜெயக்குமார்

ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 


அ.தி.மு.க-வின் பெரியகுளம் பகுதி முன்னாள் நகர மன்றத் தலைவரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரருமான ஓ.ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்டது தொடர்பாகக் கட்சித் தலைமைக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.`கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் நீக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவராக ஓ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆவின் விவகாரத்துக்குள் ராஜா நுழைவதைக் கூட்டுறவுத்துறை அமைச்சரும் வருவாய்த்துறை அமைச்சரும் விரும்பவில்லை. இந்தச் சூழலில், மதுரையிலிருந்து கோட்டைக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஓ.ராஜா நீக்கப்பட்டார் எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஓ.ராஜாவின் நீக்கம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ``தவறு செய்வதால்தான், ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பது உறுதி. கஜா புயலால் ஏற்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு வழங்கிய நிவராணப் பொருள்களில் முறைகேடு நடந்துள்ளதாக டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியிருப்பதில் உண்மையிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். டி.டி.வி.தினகரன் நிவராணப் பொருள்கள் வழங்கும் இடங்களில் பிரசாரம் செய்துவருகிறார்'' என்றார். பொன்.மாணிக்கவேல் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்து கேள்விக்கு,` வெய்ட் அன் ஸி' என்று கூறிவிட்டுச் சென்றார்.