Published:Updated:

`அமைச்சர் ஜெயக்குமாரால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிடுவோம்!’ - அ.ம.மு.க வெற்றிவேல்

`அமைச்சர் ஜெயக்குமாரால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிடுவோம்!’ - அ.ம.மு.க வெற்றிவேல்
`அமைச்சர் ஜெயக்குமாரால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிடுவோம்!’ - அ.ம.மு.க வெற்றிவேல்

அமைச்சர் ஜெயக்குமார் தனது செயல்களை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிடுவேன். மேலும் இரண்டு அமைச்சர்கள் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர் என்று அ.ம.மு.கவைச் சேர்ந்த வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்றகழகத்தைச் சேர்ந்த வெற்றிவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ஜெயக்குமார் அமைச்சர் பதவியை வைத்து கொண்டு முறைகேடுகளில் ஈடுபடுகிறார்.  சிந்து விவகாரத்தில் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?. சிந்து மட்டுமல்லாது ஜெயக்குமார் இதுபோன்று பல குடும்பங்களை சீரழித்துள்ளார். சிந்து விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ஜெயகுமாருக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த நோட்டிஸ் குறித்து அவர் பதிலளிக்கவில்லை. ஜெயக்குமார் தனது நிலையை மாற்றி கொள்ளவில்லை என்றால் நாளை முதல் அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பட்டியலை தொடர்ந்து வெளியிடுவோம். அவர் செய்த பல்வேறு சம்பவங்கள் குறித்த பல ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன.

அவரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதுபோன்று பாலியல் புகாரில் மேலும் இரண்டு அமைச்சர்களின் ஆதாரங்கள் இருக்கின்றன. உரிய நேரத்தில் முழு ஆதாரத்துடன் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்'' என்றார். ஓ.பி.எஸ் சகோதரர் ராஜா  நீக்கம் குறித்து பதிலளித்த அவர்,  ``ஆவின் பால் கூட்டுறவு சங்க தேர்தலில் அவர் வெற்றி பெற்றுவதில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் செல்லுர் ராஜூ உட்பட பலர் மறைமுகமாக வருத்தம் தெரிவித்ததன் அடிப்படையில் அவர் நிக்கப்பட்டிருக்கலாம். தமிழக அரசு மறைமுகமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு துணை போகிறது. கஜா புயல் விவகாரத்தில் மத்திய அரசை கண்டிப்பது போல் தமிழக அரசு நாடகமாடுகிறது. அப்படி தமிழக அரசு, கண்டிக்க வாய்ப்பில்லை. செந்தில் பாலாஜி தி.மு.கவில் இனைந்துள்ளது தற்கொலைக்கு சமம். அ.தி.மு.கவும் அ.ம.மு.கவும் இனைய போகிறது என்ற சர்ச்சை வார்த்தைகள் வெளிவருகிறது. அது உண்மை இல்லை’’ என்றார்.