தம்பிகளுக்குள் தகராறு!

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தவிக்கிறார்கள் கட்சிக்காரர்கள். லாலுவின் மூத்த மகள் மிசா பாரதி, அந்தக் கட்சியின் சார்பில் ராஜ்ய சபா எம்.பி-யாக இருக்கிறார். ‘‘என் தம்பிகளுக்கிடையே சண்டை நடக்கிறது. குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’’ என்று கட்சிக்கூட்டத்தில் பேசினார் மிசா பாரதி.

அவரின் தம்பிகள் இருவருமே இப்போது பீகார் எம்.எல்.ஏ-க்கள். ‘‘எங்களுக்குள் சண்டை எதுவுமில்லை’’ என மறுத்திருக்கிறார், ஒரு தம்பியான தேஜ் பிரதாப் யாதவ். இன்னொரு தம்பியும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், ‘‘எனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை’’ என மையமாகப் பதில் சொல்லியிருக்கிறார். ‘என்னமோ நடக்குது’ என்பது மட்டும் புரிகிறது.

மனைவிக்கு மரியாதை!

கர்நாடக முதல்வர் குமாரசாமி, இரண்டு தொகுதிகளில் ஜெயித்திருந்ததால், ராமநகரா தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்துக்கு இப்போது தேர்தல். தன் மனைவி அனிதாவை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார் குமாரசாமி. தான் போட்டியிட்டபோதே ஒரே ஒருமுறைதான் பிரசாரத்துக்குப் போனார் குமாரசாமி. ஆனால். மனைவிக்காகக் கடந்த மூன்று மாதங்களாகவே அங்கு அடிக்கடி போகிறார். அவர் மனைவி அனிதாவும் முன்பே விசிட் அடித்துப் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார்.

கூட்டணியில் இருப்பதால், குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு இந்தத் தொகுதியை விட்டுக்கொடுத்திருக்கிறது காங்கிரஸ். இதனால், சமீபத்தில் நடந்த தேர்தலில் சுமார் 70,000 ஓட்டுகள் வாங்கித் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் உசேன் அதிருப்தி அடைந்துள்ளார். ‘‘எனக்கும் குமாரசாமிக்கும் 22,000 ஓட்டுகள்தான் வித்தியாசம். எனக்கு ஓட்டு போட்ட அத்தனை பேருக்கும் இப்போது என்ன பதில் சொல்வேன்?’’ என்று கேட்கிறார் இக்பால் உசேன்.

நோட்டாவுக்கு பிரசாரம்!

எல்லா வேட்பாளர்களும் தங்களுக்கான வாக்கு சேகரிப்பில் பிஸியாக இருக்க, சட்டீஸ்கர் மாநிலத்தில் ஒரு வித்தியாசமான பிரசாரத்தைச் செய்கிறது பி.ஜே.பி. ‘யாரும் நோட்டாவுக்கு வாக்களித்து, உங்கள் ஓட்டை வீணாக்கி விடாதீர்கள்’ என்ற பிரசாரம்தான் அது. ‘இந்தியாவிலேயே நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் பதிவான மாநிலம்’ என்ற பெருமையைப் பெற்றது சட்டீஸ்கர். 2013 சட்டமன்றத் தேர்தலில் அங்கு நோட்டா பெற்ற ஓட்டுகள், 3.2 சதவிகிதம். ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு அதிகபட்சமாக 10,848 ஓட்டுகள் விழுந்தன. சுமார் 15 தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தைவிட நோட்டா பெற்ற ஓட்டுகள் அதிகம்.

இதற்குக் காரணம், மாவோயிஸ்ட்கள். 2013-ல் தேர்தலைப் புறக்கணிக்குமாறு ஆரம்பத்தில் பிரசாரம் செய்த மாவோயிஸ்ட்கள், தேர்தல் நெருக்கத்தில் திடீரென தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு, ‘நோட்டாவுக்கு வாக்களியுங்கள்’ என்று பிரசாரம் செய்தனர். மாவோயிஸ்ட்களுக்கு அங்கு பல தொகுதிகளில் செல்வாக்கு உண்டு என்பதால், நிறைய பேர் நோட்டா பட்டனை அழுத்தினர். இம்முறையும் மாவோயிஸ்ட்கள் அப்படிச் செய்வார்கள் என எதிர்பார்க்கிறது, மாநிலத்தை ஆளும் பி.ஜே.பி.

கடந்த முறை பி.ஜே.பி வாங்கிய ஓட்டுகளுக்கும் காங்கிரஸ் வாங்கிய ஓட்டுகளுக்கும் 0.6 சதவிகிதம்தான் வித்தியாசம். வெற்றிக்கோட்டின் எல்லைக்கு வந்து தோற்றது காங்கிரஸ். இம்முறை இந்த வித்தியாசம் 0.8 சதவிகிதம் அளவே இருக்கும் என்று கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. ஆட்சிக்கு எதிரான உணர்வு மக்களிடம் இருக்கும் சூழலில், நோட்டாவால் வாய்ப்பு இழந்துவிடக் கூடாது என நினைக்கிறது பி.ஜே.பி. இதனால், ‘நோட்டாவுக்கு வாக்களிக்காதீர்கள்’ என அங்கு பிரசாரம் செய்கிறது பி.ஜே.பி. அதுமட்டுமல்ல, யாராவது நோட்டாவுக்கு பிரசாரம் செய்தால், அவர்களை மாவோயிஸ்ட்களாகக் கருதிக் கைது செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவு பறந்துள்ளது.

பக்தர் ராகுல்!

மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியை இழந்திருக்கும் காங்கிரஸ் கட்சி, இப்போது நடைபெறும் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையில் இருக்கிறது. அதற்கு பி.ஜே.பி-யின் பாதையை காங்கிரஸ் தேர்வுசெய்திருப்பதுதான் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இங்கு ராகுல் காந்தியின் பிரசாரப் பயணம் கவனமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. வனவாசத்தின்போது ராம பிரான் 11 ஆண்டுகள் இருந்ததாகக் கருதப்படும் சித்ரகூட் ஆலயத்தில் வழிபட்டபிறகே, மத்தியப் பிரதேச பிரசாரத்தை ராகுல் தொடங்கினார். பிரசாரப் பயணம் முழுக்க பல ஆலயங்களில் அவர் வழிபடுகிறார். எந்த ஊரில் எந்தக் கோயில் பிரபலமோ, அந்தக் கடவுளை ராகுல் வழிபடுவது போன்ற ஃபிளெக்ஸ்கள் மத்தியப் பிரதேசம் முழுக்கப் பளிச்சிடுகின்றன. ராம பக்தராக, சிவபக்தராக, நர்மதை நதியை வழிபடும் பணிவான மனிதராக... பல வடிவங்களில் ராகுல் புன்னகைக்கிறார். காங்கிரஸின் இந்த மாற்றத்தை எதிர்பார்க்காமல், சற்றே ஆடிப்போயிருக்கிறது பி.ஜே.பி.

விடைபெறும் சுஷ்மா!

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், கட்சி வித்தியாசங்களைத் தாண்டி எல்லோராலும் மதிக்கப்படும் பெண்மணி. சீனியர் மத்திய அமைச்சர்களில், சோஷியல் மீடியா வட்டாரங்களிலும் பரபரப்பாக இருப்பவர். ட்விட்டரில் யாராவதுக் கோரிக்கை வைத்தால்கூட நிறைவேற்றித் தந்து, யூத்களின் அன்பைப் பெற்றவர். சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட சுஷ்மா, விரைவில் அரசியலிலிருந்தே ஓய்வுபெற இருப்பதாக டெல்லி வட்டாரங்களில் பேச்சு. ‘‘உடல்நிலை காரணமாக என்னால் மத்திய அமைச்சராகவோ, எம்.பி-யாகவோ இனி செயல்பட முடியாது. அதனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’’ என பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் சுஷ்மா தெரிவித்துவிட்டாராம்.

- டெல்லிவாலா