Published:Updated:

தர்மபுரி அருகே ரயில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்கள் வெறிச்செயல்!

தர்மபுரி அருகே ரயில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்கள் வெறிச்செயல்!
தர்மபுரி அருகே ரயில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்கள் வெறிச்செயல்!

தர்மபுரி: ராமதாஸ் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடந்து வரும் வன்முறை சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று தர்மபுரி மாவட்டத்தில் ரயில் மீது வன்முறையாளர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளனர்.

சென்னையிலிருந்து, நாகர்கோவிலுக்கு செல்லும் வாராந்திர ரயில் ஒன்று நேற்று இரவு தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இந்த குண்டு சரிவர வெடிக்காததால் பெரிய விபத்து ஏற்படவில்லை என்பது ஒரு ஆறுதலான தகவல்.

##~~##
அதே நேரம் ரயிலின் படியில் அமர்ந்து பயணம் செய்த, சென்னை, சோலிங்கநல்லூர் தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினியராக பணிபுரியும் ரமேஷ் என்பவருக்கு லேசான தீக்காயமும், கண்ணாடி பட்டதில் சிறு சிராய்வு காயங்களும் ஏற்பட்டிருக்கிறது. அவர் சேலம் தனியார் மருத்துவமனையில் பெற்றிருக்கிறார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ரயில்வே போலீசார் மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இன்று சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
நூற்றுக்கணக்கானவர்கள் பயணம் செய்யும் ரயிலில் பெட்ரோல் குண்டு வீசியிருப்பது ரயிலில் பயணம் செல்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

-எஸ்.ராஜாசெல்லம்