Published:Updated:

``தீ பிடிச்ச இடமெல்லாம் இறைவனோட அருளால பாதிக்கப்பட்டிருக்கு!"- அரசியல்வாதிகளின் #ThugLife உளறல்கள்

``தீ பிடிச்ச இடமெல்லாம் இறைவனோட அருளால பாதிக்கப்பட்டிருக்கு!"- அரசியல்வாதிகளின் #ThugLife உளறல்கள்

அரசியல்வாதிகளின் உளரல்கள் அனைத்தும் செய்தியாகப் பதிவாவதற்கு முன்பே மீம்ஸ்களாகிவிடுகின்றன. அவ்வாறு வைரலான உளறல்களை கீழே காணலாம்...

``தீ பிடிச்ச இடமெல்லாம் இறைவனோட அருளால பாதிக்கப்பட்டிருக்கு!"- அரசியல்வாதிகளின் #ThugLife உளறல்கள்

அரசியல்வாதிகளின் உளரல்கள் அனைத்தும் செய்தியாகப் பதிவாவதற்கு முன்பே மீம்ஸ்களாகிவிடுகின்றன. அவ்வாறு வைரலான உளறல்களை கீழே காணலாம்...

Published:Updated:
``தீ பிடிச்ச இடமெல்லாம் இறைவனோட அருளால பாதிக்கப்பட்டிருக்கு!"- அரசியல்வாதிகளின் #ThugLife உளறல்கள்

2017-ம் ஆண்டு ஆன்லைனில் மிகப் பெரிய என்டெர்டெயின்மென்டாக இருந்தது அரசியல்வாதிகளின் உளறல்கள்தாம். 2018-ம் ஆண்டும் அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல்வாதிகளும் உளறிக் கொட்டியுள்ளனர். இவையனைத்தும் செய்திகளாகப் பதிவாவதற்கு முன்பே மீம்ஸ்களாகி விடுகின்றன. அவ்வாறு வைரலான உளறல்களை இங்கே காணலாம்...

அமைச்சர் செல்லூர் ராஜூ

``ஆஸ்திரேலியாவில் ஓடும் சிட்னி ஆறுபோல, வைகை ஆறு இனி ஓடும்" என்று செய்தியாளர் சந்திப்பில் சொல்லி, நம்ம கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பட்ட பாடு இருக்கே...திரும்பும் பக்கமெல்லாம் சிட்னி மீம்ஸாகவே இருந்தது. அதன்பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ``தமிழகத்துல 29 வகையான காய்ச்சல கண்டுபிடிச்சுருக்கோம்.... அட, நான் கண்டுபிடிக்கலப்பா...அப்புறம் மீம்ஸ் போட்டே கொன்டுயெடுத்துருவாய்ங்க... மருத்துவர்கள் கண்டுபிடிச்சுருக்காங்க"னு மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சரண்டர் ஆயிட்டாரு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில், ``எம்ஜிஆர் மட்டும் இந்த இயக்கத்த தொடங்காம இருந்திருந்தா, அண்ணான்னு ஒருத்தர் இருந்தது, அவர் வாழ்ந்ததுன்னு இளைய தலைமுறையினருக்குத் தெரியாமலே போய் இருக்கும்"னு சொல்லி மீண்டும் பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டார் நம் வில்லேஜ் விஞ்ஞானி.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இந்த ஆண்டு நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, பழமொழிகளைப் பலவாறு கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். `யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' என்பதுதான் பழமொழி, அதனை `யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே' என்று மாற்றிக் கூறினார். அதேபோல, `பூனை மேல் மதில் போல' என்று மற்றொரு பழமொழியையும் மாற்றிக் கூறியது சமூக வலைதளங்களில் வைரலானது.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், `இன்றைக்குத் தமிழகத்தில் நடைபெற்றுவரும் வாழப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி ஆட்சி' என்று கூறிவிட்டு, பின்னர் சுதாரித்துக்கொண்டு `எடப்பாடி பழனிசாமி' என்று திருத்திக்கொண்டு பேசினார். அப்போது அருகில் இருந்த துரைமுருகன் அங்கேயே சிரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அமைச்சர் சி.விஜய பாஸ்கர்

பொதுமேடை ஒன்றில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், ``இந்திரா காந்தி அம்மையார், முதலமைச்சராக இருந்தபோது... இந்திரா காந்தி அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது" என்று தவறாகச் சொல்லியதை இரண்டு முறை கவிதை நடையில் சொல்லி தூங்கிக்கொண்டிருந்த வீடியோ மீம் கிரியேட்டர்களை தட்டி எழுப்பினார்.

இதற்கு முன் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ``நீங்க அழகா இருக்கீங்க... உங்க கண்ணாடி நல்லாருக்கும்மா..." என்று `அலைபாயுதே' மாதவன் ஸ்டைலில் சொல்லிவிட்டு, பின்னர், `ஆயுத எழுத்து' மாதவனாக தலையைச் சொறிந்தது தனிக்கதை.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 

அ.தி.மு.க. பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ``அம்மா கொள்ளை அடிச்ச காச, டி.டி.வி. தினகரன் அவரோடு குடும்பத்தினரும் பங்கு போட்டுகிட்டாங்க..." என்று உளறி `மைண்ட் வாய்ஸ்'னு நினைச்சு வெளியில பேசுறீங்க' என்ற மீம் டெம்பிளேட்டிற்கு நீண்ட நாள்கள் கழித்து வேலைகொடுத்தார். 

மற்றொரு விழாவில் பேசும்போது ``அம்மா ஆட்சியைவிட இப்போ சிறப்பான ஆட்சி நடத்திக்கிட்டுருக்கோம்" என்று பேசி தன் சொந்தக் கட்சித் தொண்டர்களிடமே சிக்கித் தவித்தார்.

கஜா புயலின்போது செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் செல்லூர் ராஜூவே அதிர்ந்துபோகும் அளவுக்கு ஒரு யோசனையைக் கூறினார். ``விமானங்கள் மூலம் மின் கம்பங்களை நடவேண்டும்" என்பதுதான் அந்த யோசனை.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார், ``ஆயிரங்கால் மண்டபம் மற்றும் தீ பிடிச்ச இடமெல்லாம் இறைவனோட அருளால பாதிக்கப்பட்டிருக்கு" என்று மாற்றிக் கூறி மாட்டிக்கொண்டார்.

அமைச்சர் செங்கோட்டையன்

``மாணவிகள் கொலுசு அணிந்து வரும்போது, மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும்" என்ற அதிர்ச்சிக் கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். 

பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா

 2017-ம் ஆண்டு, `மெர்சல்' பட பிரமோஷன் வேலைகளை முடித்துவிட்டு மீம் கிரியேட்டர்களிடமிருந்து சற்று விடுப்பு பெற்றிருந்தார் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. அதன்பின், 2018-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுவதற்காக தமிழகம் வந்தார் அவர் சார்ந்த கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா. அவர் பேச்சை, தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ஹெச்.ராஜா. அப்போது, ``மைக்ரோ இர்ரிகேஷன் திட்டத்துக்கு ரூ.332 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என அமித் ஷா பேசினார். உண்மையில் சொட்டுநீர்ப்பாசனம் என்றுதான் அதை மொழி பெயர்த்திருக்க வேண்டும். ஆனால் `சிறுநீர் பாசனம்' என்று மொழி பெயர்த்து மீம் கிரியேட்டர்கள் மட்டுமல்லாமல் மீடியாவிடமும் சிக்கிக் கொண்டார்.

அமித் ஷா, கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தில் பி.ஜே.பி. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கு ஆதரவாகப் பேசும்போது, ``எடியூரப்பா ஆட்சி ஊழலில் சிறந்தது" என்று மாற்றிப் பேசியதும், ``இளைஞர்கள் பக்கோடா விற்று பிழைத்துக் கொள்ளலாம்" என்று பேசியதும்கூட இந்தியாவில் மிகப் பெரிய வைரலானது குறிப்பிடத்தக்கது.

தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன்

``இந்தியாவுக்கே பிரதமர் மோடிதான் இனி அம்மா" - இதுபோன்ற ஒரு கருத்தை யார் சொல்லியிருக்க முடியும்? ஆம்! அவரேதான். நம் நெட்டிசன்களின் ஆல் டைம் ஃபேவரைட், தமிழக பி.ஜே.பி.தலைவர் தமிழிசை செளந்தரராஜனின் கருத்துதான் இது. 
இதுபோன்று ஆண்டு முழுவதும் பலவாறு பேசி வைரல் கன்டென்ட்டுகளை கொடுத்திருந்தாலும், ஆண்டு இறுதியில், 5 மாநில தேர்தல் முடிவுகள் பி.ஜே.பி-க்கு எதிராக அமைந்த பின், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ``இது பி.ஜே.பி-க்கு வெற்றிகரமான தோல்வி" என்று புதுவகைத் தோல்வியை அறிமுகப்படுத்தியது மிகப் பெரிய வைரலானது.

இந்த ஆண்டில் நம் அரசியல்வாதிகள் கூறிய வைரல் பொன்மொழிகள் ஏதேனும் விடுபட்டிருந்தால் கமென்ட்டில் பதிவுசெய்யுங்கள். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism