Published:Updated:

`ஆவின் சேர்மன் பதவியை ஏன் இன்னும் காலி செய்யவில்லை!' - புகழேந்தி கேள்வி

`ஆவின் சேர்மன் பதவியை ஏன் இன்னும் காலி செய்யவில்லை!' - புகழேந்தி கேள்வி
`ஆவின் சேர்மன் பதவியை ஏன் இன்னும் காலி செய்யவில்லை!' - புகழேந்தி கேள்வி

துணை முதலமைச்சர்  ஓ.பி.எஸ்.ஸின் தம்பி ஓ.ராஜா, அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள  நிலையில், ``அவர் பொறுப்பேற்றுக் கொண்ட ஆவின் தலைவர் பதவியை ஏன் இன்னும் ரத்து செய்ய ஓ.பி.எஸ். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று கேள்வி எழுப்பியுள்ளார் கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி.

சமீபத்தில் பல சர்ச்சைகளுக்கு இடையே நடந்த மதுரை - தேனி மாவட்டங்களுக்கான பால் கூட்டுறவு சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு ஓ.பி.எஸ்.ஸின் நண்பரான செல்லமுத்துவை எதிர்த்து, ஓ.ராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தலைவர் பொறுப்பு ஏற்றுக்கொண்ட  ஓ.ராஜாவை, கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியதாகக் கூறி அ.தி.மு.க-விலிருந்து நீக்கி தலைமையிலிருந்து நேற்று அறிவித்தனர்.

இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், இன்று மதுரை வந்த அ.ம.மு.க-வின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தியிடம் இதுகுறித்து கேட்டோம். ``கட்சியிலிருந்து நீக்கினால் மட்டும் போதுமா, அந்த ஆவின் சேர்மன் பதவியிலிருந்து நீக்க வேண்டியதுதானே, மேலிருந்து யாராவது சொன்னால்தான் அதைச் செய்வார்களோ. இது ஒரு நாடகம் அவ்வளவுதான்'' என்றார். ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜா நீக்கப்பட்ட விவகாரத்தில் இன்னும் முழுமையாக உண்மைகள் வெளிவரவில்லை.