Published:Updated:

மிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி?

மிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி?
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி?

மிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி?

மிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி?

மிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி?

Published:Updated:
மிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி?
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி?
மிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி?

ழுகாரிடமிருந்து திடீர் அழைப்பு. “வாரணாசியில் இருக்கிறேன்’’ என்றார். ‘‘ரஜினி பட ஷூட்டிங்கா... ரஜினியுடன் மீட்டிங்கா?’’ என்று கேட்டோம். ‘‘நான் பிஸி. நான் வாட்ஸ்அப்பில் அனுப்புவதைப் பாரும்’’ என்று சொல்லி, தொடர்பைத் துண்டித்தார். தகவல்கள் கொட்டத் தொடங்கின...

திருச்சியில் மாநாடு!

தாமிரபரணி புஷ்கரத்தில் பலரும் நீராடி வருகின்றனர். இந்த நிலையில், ‘பாபநாசம் கோயில் அருகே தாமிரபரணி படித்துறையில் அதிகாலை நேரத்தில் ரஜினிகாந்த் ரகசியமாக வந்து புனித நீராடிவிட்டுச் சென்றார்’ என்று ஒரு செய்தி கிளம்பியது. ஆனால், இது வதந்தி. கடந்த மூன்று வாரமாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ‘பேட்ட’ படப்பிடிப்பில் இருக்கிறார் ரஜினி. 22-ம் தேதி அவர் சென்னை திரும்புகிறார். அதன்பின் பல அரசியல் அதிரடிகள் அரங்கேறலாம்.

தமிழகத்தில் சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில், 42 ஆயிரம் பூத்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் பூத் கமிட்டி அமைத்துவிட்டனர். ஒரு கமிட்டிக்கு 30 பேர் வீதம் கணக்கு போட்டுக்கொள்ளும். இதை ரஜினி பலவிதமாக க்ராஸ் செக் செய்த பிறகே திருப்தியானாராம். போலியாகக் கணக்குக் காட்டிய சில மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர். அடுத்தகட்டமாக, மன்ற மாநாடு நடக்க இருக்கிறது. ‘ரசிகர்கள் தமிழகத்தின் எந்த மூலையிலிருந்து வந்தாலும், ஆறு மணிநேரத்துக்குள் வீடு திரும்பும் தூரத்தில் இருக்கவேண்டும். அதற்குத் தகுந்தாற்போல இடத்தைத் தேர்ந்தெடுங்கள்’ என்று ரஜினி சொல்லியிருக்கிறார். இடம் தேடிக்கொண்டிருக் கிறார்கள். அநேகமாக திருச்சியில் மாநாடு நடக்கக்கூடும். இந்த மாநாட்டில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை வெளியிடப் போகிறாராம். தீபாவளிக்கு முன்னதாக, மாநாடு பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று அடித்துச் சொல்கின்றனர் மன்றத்தினர். ‘இந்த தீபாவளிக்கு ரஜினி வெடி வெடிக்கும்’ என அதைத்தான் மக்கள் மன்றத்தினர் பரபரப்பாகப் பேசிவருகிறார்கள்.

நவம்பர் 29-ம் தேதி ‘2.0’ படம் ரிலீஸ். ‘பேட்ட’ படத்தின் பெரும்பாலான காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டன. மிச்ச சொச்சத்தையும் விரைவில் முடித்துவிடுவார். அநேகமாக ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று மாநாடு நடக்கக்கூடும் என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர். சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, ‘நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி பிரதமர் கருத்துக்கேட்டார்’ எனச் செய்தி வந்தது. இதைத் தொடர்ந்து, ‘தேர்தலுக்குத் தயாராகுங்கள்’ என டெல்லியிலிருந்து தங்கள் தரப்புக்கு சிக்னல் வந்திருப்பதாக ரஜினி மக்கள் மன்றத்தின் மூத்த நிர்வாகிகள் சொல்லி வருகிறார்களாம். 

அதேசமயம், மேற்கொண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாவதையும் ரஜினி நிறுத்தவில்லை. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதைக் குறிப்பிடும் ரஜினியின் எதிர் முகாம், ‘வழக்கம்போல தன் படங்களின் வெற்றிக்காக அரசியலுக்கு வருவதுபோல பேசிக்கொண்டிருக்கிறார். ஒருபோதும் அவர் வரவே மாட்டார். தீபாவளிக்கு ரஜினி பட்டாசு வெடிக்காது’ என்கிறார்கள் நக்கலாக!

மிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இணைய ரெடி!

எதிர் முகாமில் இருப்பவர்கள் இப்படிச் சொன்னாலும் ரஜினியுடன் கைகோக்க பலரும் தயாராக இருக்கிறார்கள். கோடிகளில் புரளும் கல்வித் தந்தை ஒருவர், ரஜினியுடன் பல ஆண்டுகளாக நட்பில் இருக்கிறார். சின்னதாகக் கட்சியும் நடத்திக்கொண்டிருக்கிறார். ‘‘உங்கள் கட்சியைக் கலைத்துவிட்டு வந்துவிடுங்கள்’’ என்று ரஜினி சொல்ல, அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டாராம் அவர். இன்னொரு காங்கிரஸ் பிரமுகரும் ரஜினியுடன் இணையத் தயார். அவரது லட்சியம் சென்னையின் மேயர் பதவியாம். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கல்வி வள்ளல் ஒருவரும், தி.மு.க-விலிருந்து ரஜினியிடம் போவதற்கு நேரம் குறித்துவிட்டாராம். இப்படி, ரஜினியுடன் இணையக்கூடியவர்கள் என்று தமிழகம் முழுக்க ஒரு பட்டியல் அவசரமாக எடுக்கப்பட்டுவருகிறது. 

தான் ஊரில் இல்லாத நாட்களில் மன்றத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை டாக்டர் இளவரசனிடம் கொடுத்திருக்கிறார் ரஜினி. அவருக்கு உதவியாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ராஜசேகர், தூத்துக்குடி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோரையும் நியமித்திருந்தார். இந்தச் சூழலில், மன்றத்தில் டஜன் கணக்கான நிர்வாகிகளை நீக்கிவிட்டார் இளவரசன். மாநில அளவில் மகளிரணித் தலைவி காயத்ரி துரைசாமி, இளைஞரணித் தலைவர் சாமுவேல் ஆகியோரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர். இவர்கள் இருவரும் மன்ற அமைப்புக் கட்டத்துக்குள் வராமல், பழைய நினைப்பில் ரஜினியுடன் நெருக்கம் காட்டியதும் நீக்கத்துக்கு ஒரு காரணமாம்.

அதேசமயம், இளவரசனுக்கும் செக் வைக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இளவரசனின் செயல்பாடுகள், மன்றத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணத் துக்கு, சேலம் மாவட்டப் பொறுப்பாளராக இருப்பவர், இளவரசனுக்கு நெருங்கிய உறவினராம். மன்றத்தின் தினசரி செயல்பாடுகளில் மாவட்ட நிர்வாகிகள் சிலருக்கு அவர்மீது அதிருப்தி உண்டாம். சமீபத்தில் சேலத்தில் கமல் கலந்துகொண்ட நிகழ்ச்சி, இவர் தொடர்புடைய கட்டடத்தில் நடந்ததாம். விழாவில் அவரும் வி.ஐ.பி வரிசையில் அமர்ந்திருந்தாராம். இதுகுறித்து தலைமைக்குப் புகார் அனுப்பியிருக் கிறார்கள். இளவரசனின் ஆதரவாளர்களில் ஒருவரான திருவாரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் துணைச் செயலாளர் திருவாரூர் ரஜினி சக்தி, திடீரென நீக்கப்பட்டிருக்கிறார். சமூக ஊடகங்களில் இளவரசனுக்கு ஆதரவாகச் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தவர் ரஜினி சக்தி.

கடந்த இரண்டு மாதங்களில் இளவரசன் எடுத்த சில நடவடிக்கைகள், மன்றத்தினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கிவிட்டன. அதையெல்லாம் ரஜினியிடம் நாசூக்காக எடுத்து வைத்து, இளவரசனிடமிருந்து அதிகாரங்களைப் பறிக்க, தூத்துக்குடி ஸ்டாலின் கோஷ்டி தீவிரமாகச் சுழன்றுகொண்டிருக்கிறது என்று மன்ற நிர்வாகிகள் வெளிப்படையாகப் பேசிவருகிறார்கள். அதேசமயம், ‘இளவரசன் மட்டும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவருக்குத் துணையாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டாலின் மற்றும் ராஜசேகர் இருவருடன் ஆலோசித்துவிட்டுதான் முடிவுகளை எடுத்தார். ஆனால், இளவரசனைப் பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள்’ என்கிறார்கள் இளவரசன் கோஷ்டியினர். ‘‘ஆரம்பத்திலிருந்தே இப்படி மன்றப் பொறுப்பாளர்களுக்குள் மோதல்கள் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்து வெறுத்துப் போயிருக்கும் ரஜினி, மன்றத்தின் முக்கியப் பொறுப்பை தன் மனைவி லதாவிடம் ஒப்படைத் தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்கிறார் மன்றத்தின் முக்கியப் பொறுப்பாளர் ஒருவர்.

கண்டறியப்பட்ட கறுப்பு ஆடு!

அடுத்த வெடி இது. அ.தி.மு.க அமைச்சர்கள் பற்றிய விவகாரங்கள் பூதாகரமாக வெடித்து வருகின்றன. குறிப்பாக வேலுமணி, தங்கமணி இருவர் தொடர்பான விவகாரங்கள் அடிக்கடி வெடிக்கின்றன. இவர்கள் துறைகளைச் சேர்ந்த முக்கிய விஷயங்கள், மின்னல் வேகத்தில் தி.மு.க கூடாரத்துக்கு பாஸாகின்றன. மிகவும் ரகசியமாகப் பேசப்படும் விஷயங்கள்கூட வெளியில் போய்க் கொண்டிருப்பது கண்டு அதிர்ந்துபோயிருக்கி றார்கள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள். கறுப்பு ஆட்டைக் கண்டறிய தனியார் துப்பறியும் ஏஜன்சியையும் களத்தில் இறக்கிவிட்டார்களாம். அதில், அதிர வைக்கும் தகவல் கிடைத்துள்ளன. சேலத்தில் வசிக்கும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த சர்ச்சை பிரமுகர் ஒருவர், தி.மு.க-வைச் சேர்ந்த கல்வி வள்ளலும், வலுவான முன்னாள் அமைச்சரு மான அந்த அதிரடி பிரமுகருடன் தொடர்பில் இருப்பது தெரிந்திருக்கிறது. தினமும் இருவரும் போனில் பேசிக்கொள்கிறார்களாம். தகவல் பரிமாற்றமும் நடக்கிறதாம். இந்தப் பிரமுகர், அ.தி.மு.க-வில் மிகமிக முக்கியமான இடத்துக்கும் வேண்டியவராம். அதனால், அந்தப் பிரமுகர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திணறுகிறார்களாம் அந்த இரண்டு அமைச்சர்களும். ‘இதெல்லாம் முக்கியமான அந்த அமைச்சருக்குத் தெரிந்தேதான் நடக்கிறதா... தெரியாமல் நடக்கிறதா?’ என்றெல்லாம் சந்தேகங் களுடன் அலைபாய்ந்துகொண்டுள்ளனராம் அந்த இரண்டு அமைச்சர்களின் ஆதரவாளர்கள்.

பொலிவிழந்த ஆண்டு விழா!

உற்சாகமாகக் கொண்டாடப்பட வேண்டிய அ.தி.மு.க-வின் 47-வது ஆண்டு விழா, களையிழந்து விட்டது. எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே உள்ள பனிப்போர், சமீபகாலமாக வெளிப்படையாகவே வெடித்துக்கொண்டிருப்பதால், கட்சியினரும் கொண்டாட்டத்தில் ஆர்வம்காட்டவில்லை. இங்கும் அது அரங்கேறியது. கட்சியைப் பொறுத்தவரை பன்னீர்தான் சீனியர் ஒருங்கிணைப்பாளர். எனவே, கட்சி நிகழ்ச்சிகளில் அவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படவேண்டும். ஆனால், கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழில் ஆண்டு விழாவுக்காகக் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் அனைத்திலும் எடப்பாடிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது. கே.பி.முனுசாமி கொடுத்த விளம்பரத்தில் மட்டுமே பன்னீருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது. அதேபோல ஒருங்கிணைப் பாளாரான பன்னீர், முதலில் வந்துவிட்டார். 15 நிமிடங்கள் கழித்தே வந்துசேர்ந்தார் எடப்பாடி. இதையும் கூட்டத்தினர் கவனிக்கக் தவறவில்லை.

அன்று மாலை உளுந்தூர்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி, ஸ்டாலினை இதுவரை இல்லாத அளவுக்கு விமர்சனம் செய்தார். ‘‘தி.மு.க-வும் ஸ்டாலினும் எங்களைச் சீண்டிவிட்டார்கள். அதன் பலனை விரைவில் அனுபவிப்பார்கள்’’ என்று எச்சரித்தார். இதன் விளைவாக பல சரவெடிகள் வெடிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism