Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

Published:Updated:
ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

மிழக அரசியல்வாதிகள் கேட்டுக்கொண்டிருக்கும் பாடல்கள் பற்றிய ஸ்கூப் நியூஸ், கொஞ்ச நாள்களுக்கு முன் நமக்குக் கிடைத்தது. அடுத்தபடியாக, இப்போது அவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் வீடியோ கேம்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சும்மா சொல்லக்கூடாது... எல்லோரும் அவங்களுக்குப் பொருத்தமான விளையாட்டைத்தான் ஆடுறாங்க பாஸ்!

ஐடியா அய்யனாரு!

Temple Run: இலக்கை நோக்கி கடைசிவரை ஓடிக்கொண்டே இருப்பதுதான் இந்த கேம். இதைத் தற்போது விளையாடிக்கொண்டிருப்பவர் டி.டி.வி-தான். கட்சிப் பெயர், சின்னம், ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ-க்கள் என இன்னும் சில பலவற்றைத் துரத்தி ஓடியபடியேதான் இருக்கிறார். ஆனாலும், கேம் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை. நடுநடுவே எதிர் முகாமில் குண்டைத் தூக்கி எறிந்துவிட்டு வேறு ஓடுகிறார்.

Mini Militia: மூன்று, நான்கு பேர் சேர்ந்து ஆடும் கேம் இது. ஓப்பனிங்கில் எல்லோரும் ஒரே டீம் போலத்தான் தோன்றும். ஆனால், நேரம் ஆக ஆக மாறி மாறி அடித்துக்கொள்வார்கள். ஏவுகணை எல்லாம் விட்டுத் தாக்கிக்கொள்வார்கள். இந்த கேமை இப்போதைக்கு வெறித்தனமாக ஆடிவருவது வைகோவேதான். அனேகமாக, அடுத்த மே வரை விடாமல் விளையாடுவார் எனத் தெரிகிறது.

PUBG: ஒரு தீவில் இறங்கி டீம் சேர்ந்து, நம்மைத் தாக்கும் எதிராளிகளை எல்லாம் போட்டுத் தள்ளுவதுதான் இந்த கேம். அந்தத் தீவுதான் தமிழ்நாடு. எதிராளிகள் எல்லாம் விமர்சனம் செய்பவர்கள். அப்போது பிளேயர்கள்? யெஸ்,
அ.தி.மு.க-வினரேதான். ராயப்பேட்டை பக்கம் போனாலே ‘அட்டாக்... ஷூட்.... சிக்கன் டின்னர்’ என்ற சத்தம், காது ஜவ்வைக் கிழிக்கிறது.

Empire - Four kingdoms: உங்களுக்கான நாட்டை நீங்களே உருவாக்கி, கோட்டை கொத்தளம் சூழ நிர்வகிப்பதுதான் இந்த கேம். நிஜத்தில் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்ற ஏக்கம் காரணமாகவே, மொபைலில் இதை சின்னய்யா அன்புமணி விளையாடிவருவதாகத் தகவல் வருகிறது. தர்மபுரி, திருச்சி, சென்னை, மதுரை ஆகிய நான்கு குறுநில அரசுகளை நிர்வகிக்கும் ஒரே பாகுபலி.

Adventures of Seeman: அண்ணனின் பராக்கிரமங்களை மிஞ்சும் வகையில், ஆண்ட்ராய்டு உலகத்திலேயே கேம்கள் இல்லை. ஆமை ஓட்டைத் திருப்பிப் போட்டு போட் ஓட்டுவது, இரண்டே நிமிடத்தில் துப்பாக்கி செய்ய கற்றுக்கொள்வது உள்ளிட்ட இந்த விஷயங்கள் எல்லாம், கேம் டிசைனர்களின் அறிவுக்கே அப்பாற்பட்டவை. அதனால், அண்ணன் எப்போதும் தன் சொந்த கேமான இதையே ஆடிவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism