Published:Updated:

பா.ம.க. தலைவர்கள் கைது: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

பா.ம.க. தலைவர்கள் கைது: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!
பா.ம.க. தலைவர்கள் கைது: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

அரியலூர்: பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாசை விடுதலை செய்யக்கோரி கடை அடைப்பு, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுதல், பேருந்து மீது கல்வீச்சு, டாஸ்மாக் கடைமீது கல்வீச்சு என அடுத்தடுத்த சம்பவங்களால் அரியலூர் பதற்றமாக கிடக்கிறது. குறிப்பாக மாலை நேரங்களில் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் 4-வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பா.ம.க. தலைவர்கள் கைது: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் உள்பட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து பா.ம.க.வினர் நேற்று  கடை அடைப்பு போராட்டம் நடத்தினர். இதைபோல் மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், இலையூர், வாரியங்காவல் உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. விக்கிரமங்கலம், தா.பழுர், உதயநத்தம் போன்ற பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.

பா.ம.க. தலைவர்கள் கைது: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

இந்நிலையில் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்களில் கல்வீசி தாக்கி சேதப்படுத்துபவர்கள் மீதும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீதும் ஜாமீனில் வெளி வரமுடியாத கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

பா.ம.க. தலைவர்கள் கைது: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

ஆனாலும் ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்ற 2 அரசு பஸ்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் 2 பஸ்களின் கண்ணாடிகளும் நொறுங்கின. ஜெயங்கொண்டம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பா.ம.க. தலைவர்கள் கைது: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

மேலும் இன்று பா.ம.க.வினர் அறவழிபோராட்டத்தை மேற்கொள்ள அறிவித்ததற்கிணங்க. செந்துறை ஒன்றியத்தில் அயன் தத்தனூர், வங்காரம், அசவீரன் குடிக்காடு, இரும்புலிக்குறிச்சி, உஞ்சனி உள்ளிட்ட கிராமங்களில் பா.ம.க தொண்டர்கள் தங்கள் வீடுகளின் மேலும், சாலைகளிலும்  கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தியுள்ளார்கள்.

இந்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கருப்பு கொடிகளை

##~~##
அகற்ற வந்திருக்கின்றனர். அப்போது பா.ம.க.வினர், 'எங்களை அறவழியில்கூட போராட விடமாட்டீர்களா?' எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே திருமானூர் பகுதியில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக, பா.ம.க. மாவட்ட உழவர் பேரியக்க செயலாளர் வைத்தியநாதன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட ஊர்களில், கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். பா.ம.க. தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் வடமாவட்டம் முழுவதும் பதற்றம் தொடர்கிறது

-சி.ஆனந்தகுமார்
படங்கள்: எம்.ராமசாமி