Published:Updated:

கழுகார் பதில்கள்! - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி

கழுகார் பதில்கள்! - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்! - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி

கழுகார் பதில்கள்! - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி

கழுகார் பதில்கள்! - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி

கழுகார் பதில்கள்! - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி

Published:Updated:
கழுகார் பதில்கள்! - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்! - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி
கழுகார் பதில்கள்! - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி

சம்பத்குமாரி, பொன்மலை.

‘இந்துத்வா கட்சி’ என்று பி.ஜே.பி-யை விமர்சித்துவரும் காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியை ராம பக்தர், சிவ பக்தர் என்றெல்லாம் மத்தியப் பிரதேச மாநில தேர்தல் பிரசாரத்தில் காட்டிக்கொண்டிருக்கிறதே?


தக்காளிச் சட்னி!

கழுகார் பதில்கள்! - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மல்லிகா அன்பழகன், சென்னை-78.

‘‘அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்று காங்கிரஸ் சொல்கிறது. ஆனால், அடுத்த பிரதமர் ராகுல் என்று தி.மு.க சொல்வதில்லை’’ என கராத்தே தியாகராஜன் வருத்தப்படுகிறாரே?

வாய்ப்பு இருந்தால் சொல்லாமல் இருப்பார்களா?

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

‘வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்து, இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவோம்’ என்று முந்தைய தேர்தலில் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று என்ற கேள்விக்கு, ‘ஆட்சிக்கு வரமாட்டோம் என்று நினைத்துதான் அத்தகைய வாக்குறுதிகளைக் கொடுத்தோம்’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொல்லியிருக்கிறாரே?

மைண்டு வாய்ஸ் என்று நினைத்து, மைக் வாய்ஸ் கொடுத்துவிட்டார் போல!

@ராஜா ஆர்.ஆர்., விருதுநகர்.

தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுகிறது என்றுதான் நக்கீரன் பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்தப் பத்திரிகைக்கு ஆதரவாக மீடியாவினர் பலரும் குரல் கொடுப்பது முறையா?


எந்தப் பத்திரிகை/மீடியா தனிமனிதத் தாக்குதலில் ஈடுபட்டாலும் தவறுதான். அதேசமயம், இப்படிப்பட்ட தாக்குதல் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் நீதிமன்றப் படியேறி பரிகாரம் தேடுவதுதான் சட்ட நடைமுறை. கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, தவறான, பயங்கரமான சட்டப்பிரிவைப் பாய்ச்சுவது... தவறான முன்னுதாரணமாகி, அரசியல் சட்டம் அனுமதித்துள்ள பேச்சு, எழுத்து, கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் மோசமான செயலாகிவிடும்.  இதனால், கொடுங்கோலர்களின் ஆட்சி அரங்கேற ஆரம்பித்துவிடும். அதைத்தான் அனைத்து மீடியாக்களும் எதிர்க்கின்றன. நீதிமன்றமும் இதைப் பிரதிபலித்துள்ளது.

உமரியார், மும்பை-37.

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரே... பலன் கிடைக்குமா?


உடனடியாக பலன் கிடைத்துவிட்டதே, உங்களின் கேள்வி மூலமாக.

கழுகார் பதில்கள்! - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி

@கொ.மூர்த்தி, குட்டலாடம்பட்டி.

‘‘பணம் சம்பாதிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள் நடிகர்கள். அவர்கள், அரசியல்வாதிகளை குற்றம்சொல்வதை ஏற்க முடியாது’’ என்கிறாரே தமிழிசை?


நடிகர்கள் உட்பட அனைத்துவகையான தொழில் செய்பவர்களும் நேரடியாக உழைப்பைக் கொட்டி பணம் சம்பாதிப்பவர்கள். ஆனால், அரசியல்வாதிகள்?

@நீலன், கோவை.

‘‘திராவிடக் கட்சிகள் 50 ஆண்டு காலமாக செய்த ஊழல்களை கவர்னர் தோண்டுகிறார். அதையெல்லாம் தடுக்கும் வகையில்தான் நிர்மலாதேவி விவகாரம் பரப்பிவிடப்படுகிறது’’ என்று கூறப்படுகிறதே?

ஓ... தமிழ்நாடு முழுக்க ஏகப்பட்ட பள்ளங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் கவர்னர் தோண்டியதுதானா?

@எல்.ஆர்.கணபதி, மடிப்பாக்கம்.

ஜெயலலிதா மரண மர்மம் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், 31 வருடங்களுக்கு முன்பு மறைந்த எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஆவணங்களைக் கேட்டுள்ளது பற்றி?


அடுத்து... 50 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த அண்ணாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை அறிக்கை; 150 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை; 5,500 ஆண்டுகளுக்கு முன்பு ஆல்ப்ஸ் மலையில் வாழ்ந்து மறைந்தவரின் எலும்புக்கூடு தொடர்பான மருத்துவ அறிக்கை என்று தேவைப்படுவதையெல்லாம் கேட்பதற்கு ஆணையத்துக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. இதற்காக ஆணையத்தின் விசாரணைக் காலத்தை இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு  நீட்டிக்கவேண்டுமென்றால், அதையும் செய்துதானே ஆகவேண்டும். அப்போதுதானே உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும்!

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் செயல்படுகின்றனவா?

ம்ஹும்... நிதிப்பற்றாக்குறை காரணமாக பொலிவிழந்து கொண்டிருக்கின்றன. அவர் கையால் தொடங்கப்பட்ட சில நாள்களிலேயே பல இடங்களில் அது செயல்படவில்லை. பல ஊர்களில் கட்டடங்களைக் கட்டி, பெயர்ப்பலகை மாட்டியுள்ளனர். ஆனால், திறப்புவிழா நடத்தாமல் பூட்டியே வைத்துள்ளனர்.

கழுகார் பதில்கள்! - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி

ஜூ.வி நேசன், சென்னை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கிராமத்தைத் தத்தெடுத்து வளர்ச்சிப்பணி மற்றும் வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும் என்று அறிவித்தார்களே... என்னவாயிற்று?

விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டும்தான் இதை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளனர். பெரும்பாலும், இந்த நிதியை வேறு பணிகளுக்கு மாற்றிவிடுவதுதான் நடக்கிறது. அதிலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் திட்டத்தை நிறைவேற்றவிடாமல் ஆளுங்கட்சி முட்டுக்கட்டை போடுவதும் நடக்கிறது.

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

ஆன்மிகவாதிகளின் அடையாளமே காவி. ஆனால், அவர்களில் பலரும் விதவிதமான நிறத்தில் ஆடை அணிகிறார்களே?


காவியோ, கலர்ஃபுல்லோ... மிகச்சிலர் தவிர, பெரும்பாலானவர்கள் கார்ப்பரேட் ஆன்மிகவாதிகளே. இப்படியெல்லாம் மார்க்கெட்டிங் செய்தால்தானே வண்டி ஓடும். 

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.

‘பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், சம்பந்தப்பட்ட கட்சி, அமைப்புதான் பொறுப்பு’ என்று ஜெயலலிதா சட்டம் கொண்டுவந்தாரே?

இதையெல்லாம் அவரே மதிக்கவில்லை. பிறகு எப்படி மற்றவர்கள் மதிப்பார்கள்? அவர் முதல்வராக இருந்த காலத்தில், அவருக்கு எதிராக ஒரு தீர்ப்பு வந்தபோது பேருந்துகளை எரித்தார்கள். அதற்கெல்லாம் அவரது கட்சியிடமிருந்து வசூல் செய்யப்படவில்லையே. தற்போதுகூட, ‘அம்மாவின் ஆட்சி’ என்று சொல்லிக்கொண்டே ஊர் முழுக்க ஃப்ளெக்ஸ் பேனர்கள் கட்டுவதற்காக சாலைகளை சின்னாபின்னமாக்குகிறார்களே, அவர் வழிவந்த ‘வள்ளல்’கள்.

 காஞ்சி எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்.

18-க்கும் இல்லை; 2-க்கும் இல்லை; உள்ளாட்சிக்கும் இல்லை... இது என்ன ஜனநாயகம்?


பணநாயகம்

உமாபார்வதி, சென்னை-88.

#மீடூ (#MeToo) விஷயத்தில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகாமல், அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளாரே!


ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டதுமே அவர் குற்றவாளியாகிவிட மாட்டார். நீதிமன்றம்தான் அதை முடிவுசெய்ய முடியும். ஆனால், அமைச்சர் என்கிற அந்தஸ்தில் இருப்பவர், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தார்மீக அடிப்படையில் பதவியிலிருந்து விலகி, சட்டத்தின் துணையுடன் அதை எதிர்கொள்வதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். இல்லையென்றால், தங்களின் அதிகாரத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்தவோ, பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படவோ நிறைய வாய்ப்புகள் உண்டு.

கழுகார் பதில்கள்! - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
 757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism