Published:Updated:

பா.ம.க. தலைவர்கள் கைது: திருவண்ணாமலையில் ஒருவர் தீக்குளித்து பலி!

பா.ம.க. தலைவர்கள் கைது: திருவண்ணாமலையில் ஒருவர் தீக்குளித்து பலி!
பா.ம.க. தலைவர்கள் கைது: திருவண்ணாமலையில் ஒருவர் தீக்குளித்து பலி!
பா.ம.க. தலைவர்கள் கைது: திருவண்ணாமலையில் ஒருவர் தீக்குளித்து பலி!

திருவண்ணாமலை: பா.ம.க. தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலையில் ஒருவர் தீக்குளித்து பலியாகியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் என்ற

##~~##
பாண்டியன் (22). இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தார். போதை அதிகமான நிலையில் திடீரென வீட்டுக்குள் சென்ற அவர், மண்எண்ணெய்யை எடுத்து தனது உடம்பில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
தீயின் வலி தாங்காமல் வெளியே ஓடி வந்த அவர், 'நான் வன்னியன், நான் வன்னியன்' என்று கூறியவாறே கீழே விழுந்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று காலை சேர்க்கப்பட்ட அவர் மாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே, பா.ம.க. தரப்பில் இருந்து, யாரும் தற்கொலையோ அல்லது பொது சொத்துக்களை சேதப்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

பா.கந்தகுமார்