Published:Updated:

`கொள்கை முடிவு எடுங்கள்' - தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்!

`கொள்கை முடிவு எடுங்கள்' - தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்!
`கொள்கை முடிவு எடுங்கள்' - தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்!

ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து சட்ட திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக ஆலையைத் திறக்க அரசு எந்த உதவியும் செய்துவிடக்கூடாது என ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டார்.

`கொள்கை முடிவு எடுங்கள்' - தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்!

மறைந்த தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களது 38வது நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள கக்கனின் உருவச் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம்  கூறுகையில், "கஜா புயலால் நாகை , புதுக்கோட்டை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதி மக்களுக்குத் தேவைப்படும் நிவாரண உதவிகளை மத்திய அரசிடம் பேசி தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும். அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதோடு நிறுத்திவிடாமல் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் உதவிகள் செய்திடவேண்டும். 

தற்போது அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆரம்பிக்கின்றனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும்  தொலைக்காட்சிகளும் ஆரம்பிக்கலாம். தனியார் கணினிகளை கண்காணிக்கும் உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து சட்ட திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக ஆலையைத் திறக்க அரசு எந்த உதவியும் செய்துவிட்டக்கூடாது.

`கொள்கை முடிவு எடுங்கள்' - தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்!

தமிழகத்தில் பத்து நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வரும் கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் கஜா புயல் பாதிப்புகளைக் கணக்கெடுக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் தமிழக அரசு செயல்பட வேண்டும். தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் மக்களுக்காகச் செயல்படாத அரசுகளாக  இருந்துவருவது வேதனை அளிக்கிறது" தெரிவித்தார்.